தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக இருந்த நடிகை அசின், கஜினி திரைப்படம் மூலம் இந்தியில் கால் பதித்தார். கஜினி அங்கே ஹிட் என்றாலும் அதன்பின், பாலிவுட்டில், அசினுக்கு பெரிய வெற்றிப்படம் ஒன்றும் அமையவில்லை.
இந்நிலையில், மைக்ரோமேக்ஸ் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவுடன் ஏற்பட்ட காதலை தொடர்ந்து சமீபத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார் அசின். திருமணத்திற்கு பின் எப்படியாவது மீண்டும் சினிமாவில் நடிக்க கணவனிடம் அனுமதி வாங்கி விட வேண்டும் என்ற முடிவில் இருந்தார் அசின்.
ஆனால், ராகுல் ஷர்மாவோ இப்போதைக்கு சினிமாவில் நடிப்பதையெல்லாம் நிறுத்திக் கொள் என்று கராராக கூறிவிட்டாராம். வேண்டுமானால் அவரின் கம்பெனியான மைக்ரோமேக்ஸ் மொபைல் தொடர்பான விளம்பரங்களில் வேண்டுமானால் நடி என்று கூறிவிட்டாராம். இதனால் அப்செட்டில் இருக்கிறாராம் அசின்.
Tags:
Cinema
,
அசின்
,
கஜினி
,
சினிமா
,
ராகுல் ஷர்மா