அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து வரும் நிலையில் அவருடைய கேரக்டரின் பெயர் தற்போது தெரியவந்துள்ளது.
'தெறி' படத்தில் A.விஜயகுமார் ஐ.பி.எஸ். என்ற கேரக்டரில் விஜய் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜயகுமார் பெயரில் தமிழகத்தில் கம்பீரமான ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி இருந்த நிலையில் விஜய் நடிக்கும் கேரக்டருக்கும் அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் நடந்து கொண்டிருப்பதாகவும், தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் வகையில் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் திட்டமிட்டபடி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
Tags:
Cinema
,
theri teaser
,
எமிஜாக்சன்
,
சமந்தா
,
சினிமா
,
பிரபு
,
விஜய்