அரை நிர்வாண படத்தால் பரபரப்பு..!!

11:26 PM |
‘பொய் சொல்லப்போறோம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் பியா பாஜ்பாய். தொடர்ந்து ‘ஏகன்’, ‘கோவா’, ‘கோ’, ‘சட்டம் ஒரு இருட்டறை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது அரை நிர்வாண படத்தை அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே ஸ்ரேயா, ராய்லட்சுமி, எமிஜாக்சன் இதுபோல் அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தனது அரை நிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த பட்டியலில் இப்போது பியா பாஜ்பாயும் சேர்ந்திருக்கிறார்.

மாடல் அழகியாக இருந்த இவர் விளம்பர படங்களில் நடித்தார். பின்னர் நடிகை ஆனார். சினிமாவில் மார்க்கெட் பிடிப்பதற்காகத்தான் இதுபோன்ற படங்களை நடிகைகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் வாசிக்க…

விஜய்யின் பொறுமையை சோதித்த மீனா மகள்..!!

9:26 PM |
விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு நடனப்பயிற்சி செய்த ஷெரீப் தனது அனுபவங்களை சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய் போன்ற சிறந்த டான்சருக்கு ஸ்டெப்ஸ் அமைப்பது சவாலானது. எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்ஸ் அமைத்தாலும் விஜய் அதை எளிதில் ஆடிவிடுவார். ஆனால் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய மீனாவின் மகள் நைனிகா, ஸ்டெப்ஸ்களை புரிந்து கொண்டு ஆட மிகவும் சிரமப்பட்டார். ஆனால் நைனிகா தயாராகும் வரை விஜய் பொறுமையாக காத்திருந்தார்' என்று கூறினார்.

மேலும் விஜய்-சமந்தா பாடலுக்கும், விஜய்-எமிஜாக்சன் பாடலுக்கும் நடனப்பயிற்சி அளித்ததாகவும், மொத்தம் தான் நடனப்பயிற்சி அளித்த மூன்று பாடல்களும் சிறப்பாக வந்திருப்பதாகவும், ஷெரீப் தெரிவித்துள்ளார்.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா, மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள 'தெறி' திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அட்லி இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

'தெறி'யாக வைக்கப்பட்டுள்ள விஜய் கேரக்டரின் பெயர்..!!

6:56 AM |
அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து வரும் நிலையில் அவருடைய கேரக்டரின் பெயர் தற்போது தெரியவந்துள்ளது.

'தெறி' படத்தில் A.விஜயகுமார் ஐ.பி.எஸ். என்ற கேரக்டரில் விஜய் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜயகுமார் பெயரில் தமிழகத்தில் கம்பீரமான ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி இருந்த நிலையில் விஜய் நடிக்கும் கேரக்டருக்கும் அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் நடந்து கொண்டிருப்பதாகவும், தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் வகையில் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் திட்டமிட்டபடி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு  பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
மேலும் வாசிக்க…

விஜய் 59' படம் குறித்த புதிய தகவல்கள்..!!

2:05 AM |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் சென்னை படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் விரைவில் படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கோவா செல்லவுள்ளனர். கோவாவில் விஜய் மற்றும் எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் மற்றும் உரையாடல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து வரும் எமிஜாக்சனின் காட்சிகள் அனைத்தும் பிளாஷ்பேக்கில் வருவதாக தகவல்கல் வெளிவந்துள்ளது. எமிஜாக்சன் இந்த படத்தில் மலையாளி பெண்ணாக வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பை சீனாவில் நடத்த அட்லி முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சீனாவில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான தட்பவெப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்து வரும் இந்த படத்தில் சமந்தாவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ் ஆகியோர் இந்த படத்தின் வில்லன்களாக நடிக்கின்றனர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com