ஆச்சி மனோரமாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று..!!

12:04 AM |
தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணசித்திர நடிகை என பல பெயர்களுக்கு சொந்தக்காரி என்றால் அது மனோரமா ஆச்சி தான்.

இவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி அவரது நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு விகேஆர் கல்சுரல் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.

ரஷ்யன் கலாச்சார மையத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் சிவகுமார் தலைமை தாங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில், மனோரமா படத்தை சிவாஜியின் மூத்த மகன் ஜி. ராம்குமார் திறந்து வைக்கிறார். அதோடு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர்கள் பிரபு, செந்தில், எஸ். வி. சேகர், மனோபாலா, சச்சு ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் வாசிக்க…

ஷுட்டிங்குக்கு வீடு தர்றேன்! விஜய் கால்ஷீட் வாங்கித் தர்றீங்களா???

12:27 AM |
கிவ் அண்டு டேக் பாலிஸிதான் வாழ்க்கை என்றாகிவிட்ட காலம் இது. மீன் குழம்புக்கும் சட்டிக்கும் நடுவில் கூட ஒரு வியாபார வாசனை அடித்துக் கொண்டிருக்கும் காலமிது. இங்கு அன்புன்னா கோடி, நட்புன்னா மிலியன் என்று ஆக்கிவிட்டது சினிமா. இங்கு இவர் அவருக்கு படம் பண்ணினாலும், அவர் இவருக்கு கால்ஷீட் கொடுத்தாலும், அடியில் படிந்து கிடப்பது அமைதியான ஒரு வியாபார கால்குலேஷன்தான்.

இந்த நேரத்தில்தான் அதை இன்னும் பலமாக யோசிக்க வைப்பது போல ஒரு விஷயம். நடிகர் பிரபு அட்லீயை வைத்து அடுத்த படத்தை தயாரிக்கப் போகிறார். ஏராளமான படங்களை எடுத்து குட் லிஸ்ட்டில் இருக்கும் சிவாஜி புரடக்ஷன் சார்பில் இந்தப்படம் தயாராகப் போகிறதாம்.

இந்த அட்லீக்கும் பிரபுவுக்கும் அழுத்தமான ஒரு நட்பு ஏற்பட்டது ஒரு விஷயத்தில்தான். சமீபத்தில் திரைக்கு வந்த தெறி படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிவாஜியின் அன்னை இல்லத்திலேயே நடந்தது. அப்போது சிவாஜி பேமிலிக்கும் அட்லீ பேமிலிக்கு நடுவில் ஒரு தீராத பந்தம் உருவாகிவிட்டது. அதை பணமாக்குகிற விதத்தில்தான் இன்னொரு சம்பவமும் நடந்தது. இந்த படத்தின் ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே, நாம மீண்டும் ஒரு படத்தில் இணையுறோம். கதையை தயார் பண்ணுங்க என்று கூறிவிட்டார் விஜய்.

அந்த கதையை நம்ம கம்பெனிக்கு பண்ணுங்களேன் என்று பிரபு கேட்க, அதுக்கென்ன… தாராளமா என்று கூறியிருக்கிறாராம் அட்லீ.

விரைவில் சிவாஜி புரடக்ஷனில் விஜய் நடிக்கப் போகும் புதிய படத்தின் அறிவிப்பு வரக்கூடும். ஏற்கனவே அஜீத்தை வைத்து அசல் படத்தை எடுத்த நிறுவனம் ஆச்சே? அப்படியே விஜய்க்கும் ஒரு லட்டு. அல்லது விஜய் கையால் ஒரு லட்டு!
மேலும் வாசிக்க…

'தெறி'யாக வைக்கப்பட்டுள்ள விஜய் கேரக்டரின் பெயர்..!!

6:56 AM |
அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து வரும் நிலையில் அவருடைய கேரக்டரின் பெயர் தற்போது தெரியவந்துள்ளது.

'தெறி' படத்தில் A.விஜயகுமார் ஐ.பி.எஸ். என்ற கேரக்டரில் விஜய் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜயகுமார் பெயரில் தமிழகத்தில் கம்பீரமான ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி இருந்த நிலையில் விஜய் நடிக்கும் கேரக்டருக்கும் அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் நடந்து கொண்டிருப்பதாகவும், தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் வகையில் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் திட்டமிட்டபடி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு  பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com