அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவன இணை நிறுவனர் ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
தமிழில் பிரபல நடிகையாக வலம்வந்த அசின் கஜினி படத்தின் மூலம் பாலிவுட் சென்று அங்கும் பிரபல நடிகையாக மாறினார்.இந்தி நடிகர் அக்ஷய்குமார் மூலம் இவருக்கும் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவிற்கும் காதல் மலர்ந்தது.
இந்நிலையில் நீண்டநாள் காதலர்களாக வலம்வந்த இருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்திருக்கின்றனர். இன்று காலை டெல்லியில் உள்ள சர்ச்சில் கிறிஸ்துவ முறைப்படி இருவரின் திருமணமும் நடைபெற்றது.
இன்று மாலை டெல்லியில் உள்ள பிரபல தசித் தேவரனா ஹோட்டலில் இருவரின் திருமணமும் மீண்டும் ஒருமுறை இந்து முறைப்படி நடைபெறவிருக்கிறது.
இதன் மூலம் ஒரே நாளில் இருவரும் 2 முறை திருமணம் செய்து கொள்கின்றனர். அசின்-ராகுல் சர்மா திருமண வரவேற்பு வருகின்ற 23ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.
Tags:
Cinema
,
அக்ஷய்குமார்
,
அசின்
,
கஜினி
,
சினிமா