திருட்டு விசிடிக்கெதிராக குரல் கொடுத்த நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் அதிரடியாக களத்தில் இறங்கி பல திருட்டு விசிடிக்களையும் கைப்பற்றி இருந்தார்.
மருது படப்பிடிப்புக்காக விஷால் ராஜபாளையத்துக்கு சென்றபோது, அங்கு திருட்டு வி.சி.டி கடையை மூடியிருக்கிறார்கள்.
இதுகுறித்து விஷாலிடம் கேட்டபோது, படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு திருட்டு விசிடி கடை கூட இல்லை, மூடிவிட்டார்கள் என்கிறார்கள். கேபிள் தொலைக்காட்சியில் புதுப்படம் போடாமல் பழைய பாடல்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.
இதில் எனக்கு பெருமை இல்லை, இதற்காக எத்தனை ஊருக்கு சென்று படப்பிடிப்பு நடத்த முடியும்.
அனைத்து நடிகர்களும் சேர்ந்து நடவடிக்கை எடுத்தால் ஒரு பெரிய புரட்சியாக மாறும். அப்போது மட்டுமே எனக்கு பெருமை என்று தெரிவித்தார்.
Tags:
Cinema
,
Kathakali
,
Vishal
,
சினிமா
,
மருது
,
விஷால்