பிரபல இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான். இவர்கள் இருவரையும் வைத்து பொழுது போக்கு டெலிவிஷன் சேனல் ஒன்று 'பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ' நிகழ்ச்சிக்காக ஷூட்டிங் நடத்தியது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. அங்கு காளி கோவில் போன்ற அரங்கம் அமைத்து நடந்த சூட்டிங்கின்போது ஷாருக்கானும், சல்மான்கானும் ‘ஷூ’ அணிந்து சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பு ஆனது.
காளி கோவிலில் ஷாருக்கானும், சல்மான்கானும் ‘ஷூ’ அணிந்து சென்றதற்காக இருவர் மீதும் இந்து மகாசபை மீரட் பிரிவு தலைவர் பரத் ராஜ்புத் உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மீரட் கோர்ட்டு சிறப்பு நீதிபதி சஞ்சய் குமார் சிங், ஷாருக்கானும், சல்மான் கானும் கோயிலுக்குள் செல்வதாக கூறப்படும் வீடியோ காட்சியை நேற்று பார்வையிட்டார்.
பின்னர், இவ்வழக்கின் மறுவிசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
Tags:
Cinema
,
சல்மான்கான்
,
சினிமா
,
ஷாருக்கான்