ஒவ்வொரு சினிமா கலைஞர்களுக்கும் படைப்புக்களை தாண்டி அதற்கு விருது கிடைக்கும் போது தான் அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த IIFA விருதில் பாகுபலி படத்திற்கு 6 விருதுகள் கிடைத்தது.
பாகுபலி என்ன தான் தமிழிலும் எடுத்தார்கள் என்று சொன்னாலும் விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும் அது நேரடி தமிழ் படம் தானா என்று, மேலும், இதில் பிரபலங்கள் என்ற அடிப்படையில் தான் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
கடந்த வருடம் காக்கா முட்டை, குற்றம் கடிதல், கிருமி போன்ற பல சிறந்த படங்கள் வந்தும் அதற்கு ஒரு விருது கூட இல்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுப்போன்று விருதுகள் ஏதோ விளம்பரத்திற்கு கொடுப்பது இதற்கு பின்னணியில் தனி ஒருவன் ஸ்டைலில் பல அரசியல்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால், தனி ஒருவனுக்கு 3 விருதுகள் இதில் கிடைத்தது தான் கொஞ்சம் ஆறுதல்.
Tags:
Cinema
,
IIFA
,
காக்கா முட்டை
,
கிருமி
,
குற்றம் கடிதல்
,
சினிமா
,
பாகுபலி