IIFA விருது விழாவில் நடந்த அதிர்ச்சி- பின்னணியில் யார்???

1:11 AM |
ஒவ்வொரு சினிமா கலைஞர்களுக்கும் படைப்புக்களை தாண்டி அதற்கு விருது கிடைக்கும் போது தான் அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த IIFA விருதில் பாகுபலி படத்திற்கு 6 விருதுகள் கிடைத்தது.

பாகுபலி என்ன தான் தமிழிலும் எடுத்தார்கள் என்று சொன்னாலும் விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும் அது நேரடி தமிழ் படம் தானா என்று, மேலும், இதில் பிரபலங்கள் என்ற அடிப்படையில் தான் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

கடந்த வருடம் காக்கா முட்டை, குற்றம் கடிதல், கிருமி போன்ற பல சிறந்த படங்கள் வந்தும் அதற்கு ஒரு விருது கூட இல்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுப்போன்று விருதுகள் ஏதோ விளம்பரத்திற்கு கொடுப்பது இதற்கு பின்னணியில் தனி ஒருவன் ஸ்டைலில் பல அரசியல்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால், தனி ஒருவனுக்கு 3 விருதுகள் இதில் கிடைத்தது தான் கொஞ்சம் ஆறுதல்.
மேலும் வாசிக்க…

அம்மாவான ரேஷ்மி மேனன்..!!

11:48 PM |
கிருமி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரேஷ்மி மேனன்.

இளம் நடிகர்களுடன் நடித்து வரும் இவர் திடீரென்று அம்மாவாக ‘பயமா இருக்கு’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.



இதுபற்றி பட இயக்குனர் பி.ஜவஹர் கூறியது:

வித்தியாசமான கதைக்களத்துடன் நகைச்சுவை கலந்த திகில் படம். சந்தோஷ் ஹீரோ. கைக் குழந்தைக்கு அம்மாவாக ரேஷ்மி மேனன் நடிக்கிறார். கதாபாத்திரத்தின் தன்மை, நடிப்பை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புள்ள வேடம் என்பதால் அம்மா வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

கோவை சரளா, ராஜேந்திரன், ஜெகன், ஜிவா, பரணி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்தில் பிரதான கதாபாத்திரமாக ஒரு வீடு இடம் பெறுகிறது. கேரளாவில் இக்காட்சிகள் படமானது. குறிப்பிட்ட வீட்டிற்கு செல்ல தரைவழி போக்குவரத்து கிடையாது. 3 மணி நேரம் படகில் பயணம் செய்தால்தான் அங்கு செல்ல முடியும். வசந்தம் பிலிம்ஸ் தயாரிப்பு. மகேந்திரன் ஒளிப்பதிவு. சி.சத்யா இசை. இவ்வாறு இயக்குனர் கூறினார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com