பாகுபலி படப்பிடிப்பு தளத்திற்கு நம்மை அழைத்து செல்லும் 360° வீடியோ

11:01 PM |
மேலும் வாசிக்க…

ரஜினி பேசுவதை யாரையும் கேட்கவிடாமல் செய்வேன்: பாகுபலி இயக்குனர் ராஜமௌலி..!!

1:43 AM |
கடந்த ஆண்டு வெளியான மாபெரும் வெற்றி படமான 'பாகுபலி' படத்தை இயக்கிய பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்த படம் எப்படி இருக்கும் என்பதை அவருடைய பாணியில் சுவாரஸ்யமாக கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஒரே ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவு. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால், அந்த படம் ரிலீஸ் ஆனவுடன் முதல் பத்து நாட்களுக்கு அவர் பேசும் வசனங்கள் யார் காதிலும் விழக்கூடாது. அந்த அளவுக்கு கைதட்டல் சத்தமும், விசில் சத்தமும் கேட்க வேண்டும். அப்படி ஒரு படம் இயக்குவேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

பாகுபலி படப்பிடிப்பில் நடிகை தமன்னா பறந்து போகையில் நடந்தது தற்போது வெளியானது..!!

1:34 AM |
மேலும் வாசிக்க…

ஜனாதிபதி கையில் தேசிய விருதுகளை வாங்கிய நட்சத்திரங்கள்..!!

10:32 PM |
இந்திய சினிமாவின் உயரிய கௌரம் என்றால் அது தேசியவிருது தான். அந்த வகையில் 63வது தேசிய விருது வென்றவர்களின் விபரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது.சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கும், சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குனர் விருது சஞ்சய் லீலா பன்சாலிக்கு பாஜிரா மஸ்தானி படத்துக்காக வழங்கப்பட்டது.சிறந்த படமாக பாகுபலியும், தமிழில் சிறந்த படமாக விசாரணை தேர்வு செய்யப்பட்டது. துணை நடிகர் விருதை விசாரணை படத்துக்காக சமுத்திரக்கனி வாங்கினார்.

சிறந்த படத்தொகுப்பாளராக மறைந்த கிஷோர் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்திற்கு வாங்கினார். சிறந்த இசையமைப்பாளராக தாரை தப்பட்டை படத்திற்கு பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் மற்றும் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வாசிக்க…

அந்த படத்தில் மட்டும் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்- தமன்னா அதிரடி..!!

12:13 AM |
பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னா கடும் பிஸியாகிவிட்டார். பல படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வரும் இவர், அடுத்து அஜித் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க முயற்சி செய்து வருகின்றார்.

இந்நிலையில் தமன்னாவிற்கு சோகமான படங்கள் என்றாலே பிடிக்கதாம், படம் முழுவதும் அழுதுக்கொண்டே இருக்கும் கதாபாத்திரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டாராம்.

மேலும், எப்போதும் ஜாலியான கமர்ஷியல் படங்களிலேயே நடிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

தேசிய விருதுகள் அறிவிப்பு – விருது வென்றவர்கள் முழு லிஸ்ட் இதோ..!!

4:08 AM |
இந்திய சினிமாவை கௌரவப்படுத்தும் விதமாக வருடா தோறும் இந்திய அரசு தேசிய விருதுகளை கொடுத்து வருகின்றது. அந்த வகையில் 63வது தேசிய விருது வென்றவர்கள் பட்டியல் இன்று வெளிவந்துள்ளது. விருது வென்றவர்களின் முழு லிஸ்ட் இதோ உங்களுக்காக….

சிறந்த நடிகர் – அமிதாப் பச்சன்(PIKU)
சிறந்த நடிகை – கங்கனா ரன்வத்(தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்)
சிறந்த இயக்குனர் – சஞ்சய் லீலா பஞ்சாலி( பஜிரோ மஸ்தானி)
சிறந்த படம் – பாகுபலி
திரைப்பட துறைக்கு உகந்த மாநிலம் – குஜராத்
சிறந்த தமிழ் படம் – விசாரணை
சிறந்த தெலுங்கு படம் – காஞ்சி
சிறந்த மலையாள படம் – பதேமேரி
சிறந்த கன்னட படம் – திதி
சிறந்த ஹிந்தி படம் – தம் லகா கே ஹைசா
சிறந்த நடன அமைப்பாளர் – ரெமோ டி சோசா ( பஜிராவ் மஸ்தானி )
சிறந்த பின்னணி இசை – இளையராஜா ( தாரை தப்பட்டை )
சிறந்த எடிட்டிர் – மறைந்த கிஷோர் ( விசாரணை )
சிறந்த வசனம் மற்றும் திரைக்கதை – பிகு, தானு வெட்ஸ் மனு
சிறந்த ஒளிப்பதிவு – பஜிராவ் மஸ்தானி
சிறந்த இசை – எம். ஜெயச்சந்திரன் ( என்னு நிண்டே மொயிதீன் )
சிறந்த துணை நடிகர் – சமுத்திரக்கனி ( விசாரணை )
Special Mention சிறந்த நடிகை – ரித்திகா சிங் ( இறுதிச்சுற்று )
Special Mention சிறந்த நடிகர் – ஜெயசூர்யா ( மலையாளம் )
பிரபலமான படம் – பஜ்ரங்கி பைஜான்
சிறந்த VFX – பாகுபலி
மேலும் வாசிக்க…

30 வயதை தாண்டியும் மவுசு குறையாத 4 நடிகைகள் ..!!

3:06 AM |

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால் ஆகியோரின் மவுசு 30 வயதை தாண்டியும் குறையவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது. இதனால் இளம் கதாநாயகிகள் படங்கள் இல்லாமல் தவிப்பில் உள்ளனர்.

கதாநாயகிகள்

கதாநாயகிகளின் சினிமா வாழ்க்கை 18 மற்றும் 20 வயதுகளில் ஆரம்பமாகிறது. நான்கைந்து ஆண்டுகள் நிலைத்து இருப்பார்கள். 25 வயதில் அவர்களை பட உலகம் ஓரம் கட்டிவிட்டு புதிய நடிகைகளை தேட ஆரம்பித்து விடும். இதுதான் திரையுலகில் சகஜமாக காணப்படும் நிலைமை. 30 வயது வரை நிலைத்து விட்டால், சாதனை. அந்த வயதையும் தாண்டினால் அதிர்ஷ்டம்.

இப்போது நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால் ஆகிய 4 பேரும் அந்த அதிர்ஷ்டக்கார கதாநாயகிகள் பட்டியலில் இருக்கிறார்கள். 30 வயதை தாண்டினால் கதாநாயகியாக நிலைக்க முடியாது என்ற கணிப்பை இவர்கள் உடைத்து விட்டனர். 4 பேரும் கைநிறைய படங்கள் வைத்து ஒரு நிமிடமும் ஓய்வில்லாமல் நடிக்கின்றனர். இளம் கதாநாயகிகள் இவர்களுடன் போட்டியிட முடியாமல் தவிக்கின்றனர்.

நயன்தாரா

நயன்தாரா 30 வயதை தாண்டி இருக்கிறார். ஆனாலும் சினிமாவில் அவரது மார்க்கெட் குறையவில்லை. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி இவர்தான். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து நம்பர்-1 இடத்தில் இருக்கிறார். கடந்த வருடம் நண்பேன்டா, மாஸ், தனிஒருவன், மாயா, நானும் ரவுடிதான் ஆகிய 5 படங்கள் இவர் நடித்து வந்தன. மலையாளத்திலும் பாஸ்கர் த ராஸ்கல் படம் வெளியானது.

இந்த வருடமும் அவரிடம் கைநிறைய படங்கள் இருக்கிறது. தமிழில் ஜீவாவுடன் திருநாள், சிம்புவுடன் இது நம்ம ஆளு, கார்த்தியுடன் காஷ்மோரா, விக்ரமுடன் இருமுகன் என்று 5 படங்கள் வைத்து இருக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியின் 150-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அனுஷ்கா 

அனுஷ்கா 34 வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் சினிமாவுக்கு வந்து 11 வருடங்கள் ஆகிறது. அனுஷ்காவுக்காகவே புதுபுது கதாபாத்திரங்களை இயக்குனர்கள் உருவாக்குகிறார்கள். 2015 அனுஷ்காவுக்கு மறக்க முடியாத வருடமாக அமைந்தது. பாகுபலி, ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய 3 படங்கள் வந்தன. பாகுபலியையும் ருத்ரமாதேவியையும் ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். இவை சரித்திர படங்கள் என்பதால் ராணி வேடம், வாள் சண்டைகள் என்று கஷ்டப்பட்டார். இஞ்சி இடுப்பழகிக்காக உடம்பை குண்டாக்கினார்.

தற்போது சூர்யாவுடன் சிங்கம்-3 மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கில் ‘பாக்மதி’ என்ற படத்தின் கதையை எழுதி அனுஷ்கா கால்ஷீட்டுக்காக காத்து இருக்கிறார்கள்.

திரிஷா

திரிஷா சினிமாவுக்கு வந்த புதிதில் எப்படி இருந்தாரோ அப்படியே 32 வயதிலும் இருக்கிறார். முகத்தில் முதிர்ச்சி தெரியவில்லை. முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இன்னும் இருக்கிறார். பட வாய்ப்புகளும் குவிகிறது. முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘நாயகி’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலுக்கு 30 வயது ஆகிறது. தமிழில் 2 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கில் பவன் கல்யாண், மகேஷ்பாபு ஆகியோருடன் நடிக்கிறார். இந்தியில் ஒரு படம் வைத்துள்ளார். முன்னணி கதாநாயகர்களோடு இளம் நாயகிகளை ஜோடிகளாக பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை இதனால்தான் இந்த 30 வயதை தாண்டிய 4 நடிகைகள் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசுகிறது.
மேலும் வாசிக்க…

அடப்பாவிகளா... பாகுபலிய இப்படி கேவலமாவா கலாய்ப்பீங்க???

2:20 AM |
பிரமாண்ட வெற்றிப் பெற்ற  பாகுபலி. பாகுபலி படத்தின் க்ளைமாக்ஸ் 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான்?' என்ற கேள்வியோடு முடியும்.

இப்போது யாராவது இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் காதிலிருந்து ரத்தம் வராத குறைதான்.இப்போது இதே கேள்வியை மையப்படுத்தி ஒரு வீடியோ தயாரித்துள்ளது.

இந்தக் கேள்வியை ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமாக்காரர்கள் என பலரும் கேட்டு, அதுவே இணையத்தில் கேலிப் பொருளாகவும் ஆக்கப்பட்டுவிட்டது.

     


மேலும் வாசிக்க…

தொழிலாளிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபாஸ்..!!

3:25 AM |
பாகுபலி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் மிகவும் பிஸியாக நடித்துவருகிறார் பிரபாஸ். இந்த பிஸியான வேலையில் தன்னிடம் பணிபுரியும் பணிப்பெண்ணின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

சந்தாநகரில் மிகவும் எளிய முறையில் நடத்ந அந்த திருமண நிகழ்ச்சியில் பிரபாஸை கண்டதும் அவரது குடும்பத்தார் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர்.

அங்கே பிரபாஸை கண்ட ரசிகர்கள் அனைவரும் புகைப்படங்கள் எடுத்து வலைதளங்களில் பரவி டிரண்ட் செய்தனர்.
மேலும் வாசிக்க…

தெறி ரிலீஸ் ஆகும் அதே தேதியில் இந்த பிரமாண்டமான படம் ரிலீஸா????

12:27 AM |
இந்தியாவின் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகவும், தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த படமாகவும் பெருமை பெற்ற எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி'க்கு விசுவாசமாக இருந்த கட்டப்பா, திடீரென பாகுபலியை கொலை செய்வதுடன் முதல்பாகம் முடிவடைந்திருக்கும். இந்த மர்மத்திற்கான விடையை தெரிந்து கொள்ள ஒரு வருடத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ல் விஜய்யின் 'தெறி' ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சரியாக ஒரு வருடம் கழித்து அதே ஏப்ரல் 14-ல் 'பாகுபலி 2' ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க…

நடிகையாக இருப்பதில் மகிழ்ச்சியே – தமன்னா..!!

5:51 AM |
பாகுபலியின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து நடிகை தமன்னாவின் மார்கெட் கடகடவென உயரத் தொடங்கியுள்ளது. அதன்விளைவாக தற்போது அவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 3 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், ” ஒரு நடிகையாக இருப்பதில் நான் மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். சினிமாவில் தான் தினமும் புது புது அனுபவங்கள் கிடைக்கிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பல கதாபாத்திரங்கள் அமைகிறது” என்றார்.
மேலும் வாசிக்க…

சீனாவில் பீகே சாதனையை முறியடித்த பாகுபலி..!!

10:10 PM |
கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகி சக்கைபோடு போட்ட பாகுபலி திரைப்படம் விரைவில் சீனாவில் 6000-க்கும் அதிகமான பிரிண்ட்களில் வெளியாகவுள்ளது. இதன்மூலம் ஆமிர்கானின் பீகே சாதனையை (5000 பிரிண்ட்கள்) பாகுபலி முறியடித்துள்ளது.

மேலும் அடுத்தடுத்த மாதங்களில் இப்படம் 30-க்கும் அதிகமான நாடுகளில் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பீகே படத்தை சீனாவில் வெளியிட்ட ஈ ஸ்டார்ஸ் நிறுவனம் தான் பாகுபலி படத்தையும் சீனாவில் வெளியீடு செய்கிறது.
மேலும் வாசிக்க…

150Kg எடைக்காக பிரபாஸ் என்னவெல்லாம் செய்கிறார் தெரியுமா????

11:06 PM |
பாகுபலி முதல் படத்தின் போது 62 கிலோவாக இருந்த தனது உடல் எடையை 130 கிலோவாக அதிகரித்து 6 அடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் நடித்து இருந்தார் பிரபாஸ். தற்போது பாகுபலி 2 படத்திற்காக இன்னும் 20 கிலோ எடையை அதிகரித்து சுமார் 150 கிலோ தோற்றத்துடன் பிரபாஸ் நடிக்க இருக்கிறார் என்று ஹைதராபாத் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிடோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியானது ‘பாகுபலி’. வெளியான அனைத்து மொழிகளிலும், இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ் – தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவான ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

பாகுபலி 2 படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறியுள்ள இயக்குநர் ராஜமவுலி இந்தப் படத்தின் 3ஆம் பாகமும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பாகுபலியின் கதை பெரியது. எனவே அது தொடரும். இது ஒரு பெரிய ஃப்ரான்சைஸ். நீண்ட நாட்களுக்கு இருக்கும் என்று கூறியுள்ளார்.

பாகுபலி 2வில் அமரேந்திர பாகுபலியான பிரபாஸ் உடல் 150 கிலோவாக அதிகரிக்கப் போகிறது. தனது உடல் எடையை அதிகரிப்பதற்காக இன்னும் ஒரு மாதத்திற்கு தினசரி 50 முட்டை வெள்ளைக்கருவும், அரைக்கிலோ கோழிக்கறியும் சாப்பிடப்போகிறாராம் பிரபாஸ்.

காய்கறிகள், பழங்கள் சாலட்கள், பழுப்பு அரிசி சாப்பாடு, 100 நிமிட உடற்பயிற்சி என இரும்பு போல உடலை மாற்றப்போகிறாராம் . இதற்காகவே கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ்.

முதல் பகுதியில் அதிக காட்சிகளில் சிவடுவாக நடித்த பிரபாஸ், இரண்டாவது பகுதியில் அமரேந்திர பாகுபலியாக அதிக காட்சிகளில் நடிக்கப் போகிறார். அதற்கேற்ப உடலமைப்பு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே இப்படி பயிற்சி செய்யப் போகிறாராம்.

பாகுபலி படத்தை விட பாகுபலி 2 படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுஷ்காவின் அழகிற்கு ஏற்ப பிரபாஸ் தோற்றம் இருக்க வேண்டும் என்பதில் ரொம்பவே மெனக்கெடுகிறாராம் இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி. அதெல்லாம் சரிதான் கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்னு இதிலாவது சொல்வாரா? அல்லது 3வது பகுதியில் சொல்வேன் என்று கூறுவாரா ராஜமவுலி?
மேலும் வாசிக்க…

ஜூலையில் புது வடிவத்தில் வெளியாகும் பாகுபலி..!!

11:54 PM |
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை ருசித்த படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா நடிப்பில் இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

இந்நிலையில் குழந்தைகளை குதூகலப்படுத்த இப்படத்தை காமிக் புத்தமாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். இந்த காமிக் புத்தகத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இதன் முதல் காமிக் புத்தகம் வரும் ஜூலையில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க…

IIFA விருது விழாவில் நடந்த அதிர்ச்சி- பின்னணியில் யார்???

1:11 AM |
ஒவ்வொரு சினிமா கலைஞர்களுக்கும் படைப்புக்களை தாண்டி அதற்கு விருது கிடைக்கும் போது தான் அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த IIFA விருதில் பாகுபலி படத்திற்கு 6 விருதுகள் கிடைத்தது.

பாகுபலி என்ன தான் தமிழிலும் எடுத்தார்கள் என்று சொன்னாலும் விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும் அது நேரடி தமிழ் படம் தானா என்று, மேலும், இதில் பிரபலங்கள் என்ற அடிப்படையில் தான் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

கடந்த வருடம் காக்கா முட்டை, குற்றம் கடிதல், கிருமி போன்ற பல சிறந்த படங்கள் வந்தும் அதற்கு ஒரு விருது கூட இல்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுப்போன்று விருதுகள் ஏதோ விளம்பரத்திற்கு கொடுப்பது இதற்கு பின்னணியில் தனி ஒருவன் ஸ்டைலில் பல அரசியல்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால், தனி ஒருவனுக்கு 3 விருதுகள் இதில் கிடைத்தது தான் கொஞ்சம் ஆறுதல்.
மேலும் வாசிக்க…

பாகுபலி படத்திற்க்கு 6 விருதுகள்..!!

8:31 PM |
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (ஐபா) கடந்த 15 வருடங்களாக இந்தி படங்களுக்கான விருது வழங்கும் விழாவை வெளிநாடுகளில் நடத்தி வருகிறது.

இப்போது முதன் முறையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென் இந்திய படங்களை கொண்டாடும் வகையில் ஐபா உற்சவம் என்ற பெயரில் விழா நடத்துகிறது.

இந்த விழா நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், ராணா, நடிகைகள் மீனா, ரம்யாகிருஷ்ணன், தமன்னா, ஸ்ரேயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஐபா உற்சாகம் படவிழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியான பாகுபலி சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடித்த சத்தியராஜ், ரம்யாகிருஷ்ணன் ஆகியோரும் விருது பெற்றனர்.
இந்த படத்துக்கு மொத்தம் 6 விருதுகள் கிடைத்தன. நின்னு, என்னுண்டே மைதீன், பிரேமம் ஆகிய படங்கள் தலா 5 விருதுகளை பெற்றன.

பிரிதிவிராஜ், பார்வதி ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. தனி ஒருவன் படத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. நயன்தாராவுக்கு  படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

காஞ்சனா சிறந்த திகில் காமெடி படமாக தேர்வு பெற்றது. இதில் நடித்த கோவை சரளாவுக்கு சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருது கிடைத்தது. தனி ஒருவன் படத்தில் நடித்த அரவிந்த்சாமி சிறந்த வில்லனாக தேர்வு பெற்றார். கத்தி படத்துக்கு இசை அமைத்த அனிருத் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை பெற்றார்.

சிறந்த பாடகருக்கான விருது ஹரிசரண், பாடகி விருது கீதாமாதுரி ஆகியோருக்கு கிடைத்தது. விழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் நடிகர் நடிகைகள் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
மேலும் வாசிக்க…

பாகுபலி படத்தில் ஐட்டம் பாட்டுக்கு நடனமாடிய பெண் பொது இடத்தில் நடனம்

1:21 AM |
மேலும் வாசிக்க…

அப்துல் கலாமை பின் தள்ளிய பாகுபலி..!!

12:38 AM |
இந்தியாவில் ஆண்டுதோறும் வெளியாகும் கூகுளின் டிரெண்ட் பட்டியலில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமைவிட பாகுபலி திரைப்படம் முன்னிலையில் உள்ளது. வழக்கமாக முன்னணி இடம் பிடிக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் நிகழ்வும் இந்த ஆண்டு பின் தங்கியுள்ளது.

ஐ.பி.எல் போட்டியின் இடத்தை இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் பிடித்துக் கொண்டுள்ளது. 2015-ம் ஆண்டு கூகுளில் அதிக அளவு டிரெண்ட்டிங்கில் இருந்த டாப்-10 நிகழ்வுகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், ஐ.சி.சி உலகக் கோப்பை போட்டி முதலிடத்தையும், பாகுபலி, பஜ்ரங்கி பாய்ஜான், ப்ரேம் ரதன் தான் பியோ (மெய் மறந்தேன் பாராயோ) ஆகிய திரைப்படங்கள் அடுத்த 3 இடங்களையும் பிடித்துள்ளது. 5 வது இடத்தில் ஐ.பி.எல் உள்ளது.

மறைந்த மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 6 வது இடத்தைப் பிடித்துள்ளார். சிவில் சர்வீசஸ் தேர்வு, பிக் பாஸ் 9 தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஹாட் ஸ்டார் இணையதளம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஆகியவை முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
மேலும் வாசிக்க…

பாகுபலியில் பிரபாஸ் நடிக்கப்போவதில்லை - ராஜமௌலி..!!

11:08 PM |
பாகுபலி படம் பிரமாண்ட வெற்றியடைந்தது அனைவரும் அறிந்ததே.

இப்படத்தில் பாகுபலியாக நடித்து ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர் பிரபாஸ்.

ஆனால், இவர் பாகுபலியில் இல்லை என்றால் நம்ப முடியவில்லையா...ஆம், ராஜமௌலி பாகுபலி-2 முடிந்த பிறகு 3ம் பாகத்தையும் எடுக்கவுள்ளாராம்.

ஆனால், அதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா என்று யாரும் இல்லையாம், வேறு ஒரு நடிகர் பட்டாளத்துடன் ராஜமௌலி களம் இறங்கவுள்ளாராம்.
மேலும் வாசிக்க…

பாகுபலி 2 குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

2:19 AM |
பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் பாகுபலி.

இப்படம் பல சாதனைகளை செய்து முடிக்க, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அனைவரும் வெயிட்டிங்.

இந்நிலையில் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக இருந்தது.

ஆனால், சமீபத்தில் வந்த தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பாகுபலி-2 படப்பிடிப்பு பாதி முடிந்தாலும், இன்னும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக படக்குழு கடுமையாக உழைத்து வருகிறதாம்.

இதனால், படம் 2017ம் ஆண்டு தான் திரைக்கு வர வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com