தெறி படத்தை முடித்த கையோடு நடிகர் விஜய், பரதன் இயக்கும் விஜய் 60 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் காஜல் அகர்வால் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது.
பின்னர் ரஜினி முருகன் கீர்த்தி சுரேஷ் இதில் முதல்முறையாக விஜய்யுடன் ஜோடி சேருவார் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் இந்த தகவலை நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் இதுகுறித்து இதுவரை யாரும் தன்னிடம் பேசவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
காஜல் அகர்வால்
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
ரஜினி முருகன்
,
விஜய்