சிம்புவுடன் தீடீர் நெருக்கம் காட்டி விஷாலை சீண்டிய வரலட்சுமி..!!

10:46 PM |
நடிகர் விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே காதல் இருந்ததாகவும், தனது தந்தை சரத்குமாரிடம் விஷால் முறைப்பு காட்டியதால், அந்த காதலுக்கு வரலட்சுமி முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் தமிழ் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றி விழாவை, அப்படத்தின் நாயகன் சிம்பு ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினர். இதில் த்ரிஷா, வரலட்சுமி, ரம்யா கிருஷ்ணன், ஏ.ஆர்.ரகுமான், படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, திரிஷா, சிம்பு, வரலட்சுமி ஆகியோர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்தனர். முக்கியமாக, சிம்புவும் வரலட்சுமியும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிம்புவும், வரலட்சுமியும் ‘போடா போடி’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.

சிம்புவிற்கும், விஷாலுக்கு ஆகவே ஆகாது. விஷாலிடம் இருந்து வரலட்சுமி விலகிய நிலையில், சிம்புவிடம் அவர் நெருக்கம் காட்டி வருவது, விஷால்  தரப்பிற்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் விஷால்..!!

1:16 AM |
விஷால் படங்களில் நடிப்பதை தாண்டி நடிகர் சங்கம் பொறுப்பு ஏற்று அதில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அண்மையில் இவர் தயாரிப்பாளர் சங்கத்தை குறை கூறியதாக பல பிரச்சனைகள் எழுந்தது.

இதுகுறித்து விஷாலும் நான் என்ன தவறு செய்தேன் என தெளிவாக சொல்லட்டும் பிறகு பதில் அளிக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் வாசிக்க…

தற்கொலை செய்துகொண்ட சபர்ணா தீவிர போதை பழக்கம் கொண்டவரா? அதிர்ச்சி தரும் தகவல்கள்

12:28 AM |
தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர், நடிகை என பன்முகம் கொண்டு விளங்கியவர் சபர்ணா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் துளசி தொடரில் வில்லியாக முத்திரை பதித்து வந்தார்.

மேலும் இவர் விஷாலின் பூஜை படத்தில் ஸ்ருதி ஹாசனின் தோழியாக நடித்து கவனம் ஈர்த்தவர். இந்நிலையில் நேற்று இவர் சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இறந்த நிலையில் காணப்பட்டார். இவரது உடலை மீட்ட போலீசார் இவர் மூன்று நாட்களுக்கு முன்பாகவே தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளனர்.

மேலும் இவரது உடல் அருகில் மதுபானங்கள், கஞ்சா, சிகரெட் போன்றவைகள் இருந்ததாம். இதனால் இவர் தீவிர போதை பழக்கம் கொண்டவரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் இவரது ஃபேஸ்புக் பக்கத்தை ஆராய்ந்த போது, இவர் கடந்த சில வாரங்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் உலகில் எல்லாரும் ஏமாற்றுகிறார்கள் போன்ற கருத்துக்களை பதிவு செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இவருக்கு காதல் தோல்வி அல்லது பண மோசடி ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
மேலும் வாசிக்க…

விஷாலை ஓவர்டேக் செய்த சூரி..!!

11:48 PM |
விஷாலுடன் பாண்டியநாடு, பாயும்புலி, பூஜை, மருது ஆகிய படங்களைத் தொடர்ந்து கத்திச்சண்டை படத்திலும் காமெடியனாக நடித்துள்ளார் சூரி. இதில் கத்திச்சண்டை படத்தில் வடிவேலுவும் காமெடியனாக நடித்துள்ளார். என்றாலும், அவருக்காக சூரியை டம்மி பண்ணவில்லையாம். விஷால் படங்களில் பெரும்பாலும் சூரியின் காமெடி மேலோங்கி நிற்பது போன்று இந்த படத்திலும் குறைவில்லாமல் இடம்பெற்றிருக்கிறதாம்.

மேலும், கத்திச்சண்டையில் பல காமெடி காட்சிகளில் ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசியிருக்கிறாராம் சூரி. ஆனால் தப்பு தப்பாக வார்த்தைகளை பேசி மாட்டிக் கொள்வாராம். அந்த காட்சிகள் தியேட்டர்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்குமாம். மேலும், காமெடி காட்சிகளில் விஷாலும் சூரியுடன் டிராவல் செய்தபோதும், அவரை பேசவே விடாமல் தான் மட்டுமே அதிகமாக ஸ்கோர் செய்துள்ளாராம் சூரி.

இந்த தகவலை தெரிவித்துள்ள விஷால், இதுவரை எனது படங்களில் செய்த காமெடியை விட இந்த கத்திச்சண்டை படத்தில் காமெடி காட்சிகளில் அதிரடியாக நடித்திருக்கிறார் சூரி. அவரது நடிப்பு பிரமாதமாக இருந்ததால் அவருக்கு விட் டுக்கொடுத்து நடித்தேன். அதனால், காமெடி காட்சிகளில் சூரி இஷ்டத்துக்கு விளையாடியிருக்கிறார் என்கிறார்.
மேலும் வாசிக்க…

விஜய் சூர்யாவை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் ரொமான்ஸ் பண்ணபோகும் ஹீரோ..!!

12:15 AM |
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை நோக்கி பயணிக்கின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ரெமோ வசூல் வேட்டை நடத்திவிட்டது.

தற்போது இவர் விஜய் ஜோடியாக பைரவா படத்தில் நடிக்க, அடுத்து சூர்யாவிற்கு ஜோடியாக தானா சேர்ந்து கூட்டம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.இந்நிலையில் சண்டக்கோழி-2வில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

இப்படத்தை லிங்குசாமி இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
மேலும் வாசிக்க…

விஷால் என்னை கொல்லப்பார்க்கிறார்- கிளம்பிய குற்றச்சாட்டு..!!

11:00 PM |
நடிகர் சங்கம் தற்போது தான் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி செல்கின்றது. ஆனால், நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டியில் ஊழல் நடந்துவிட்டதாக வாராகி என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

இவர் கூறுகையில் ‘நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டியில் பல கோடி ஊழல் நடந்துள்ளது, இவை எனக்கு தெரியும், இதுக்குறித்து அவர்களிடம் கேட்டேன்.

என்னை நேரில் அழைத்தார்கள், அப்போது விஷாலின் பேச்சு மிக மோசமானது, பூச்சி முருகனின் ஆட்கள் என்னை தாக்க வந்தார்கள்.

அங்கிருந்து தப்பித்து வந்ததே போதும் என்றாகிவிட்டது’ என கூறியுள்ளார். இதுக்குறித்து நடிகர் சங்கமோ ‘முதலில் ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள், குழப்பத்தை உண்டாக்க இப்படியெல்லாம் செய்கிறார்’ என கூறிவிட்டது.
மேலும் வாசிக்க…

நடிகர் விஷால் சென்னையில் பயங்கர மோதல்..!!

11:50 PM |
தீபாவளிக்கு வெளியிட போவதாக அறிவித்து பின் நவம்பர் மாதத்திற்கு தள்ளி போன விஷாலின் கத்தி சண்டை படம் ஷூட்டிங் முழுமையாக தற்போது முடிவடைந்துள்ளது.

இதற்கான இறுதிக்கட்ட பட்டப்படிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது. இதில் விஷால் வில்லன்களை துரத்தி, துரத்தி அடிப்பது, வாகனங்களில் விட்டு மோதும் காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளது.

இதற்காக 7 பிரத்யேக கேமராக்கள் கொண்டு காட்சிகளை தீவிரமாக படமாக்கியுள்ளனர். பொதுவாக விஷாலின் படங்களில் ஸ்டண்ட் பயங்கரமாக இருக்கும். தற்போது இதை நேரில் பார்த்த சிலர் நிஜமான சண்டை தானோ? என திகைத்துள்ளனர்.
மேலும் வாசிக்க…

சிவகார்த்திகேயன் அழுகை: ஆக்ஷனில் குதிக்கும் விஷால்..!!

2:15 AM |
சிவகார்த்திகேயனின் புகாரின்பேரில் அவரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

ரெமோ சக்சஸ் மீட்டில் பேசிய சிவகார்த்திகேயன் சிலர் தன்னை மிரட்டுவதாகக் கூறி மேடையில் அழுதார்.

என்னடா இவன் அடிக்கடி அழுகிறான் என நினைக்க வேண்டாம், உண்மையாக இருப்பதால் அழுகிறேன் என்றார். சிவகார்த்திகேயன் அழுதது குறித்து தான் தற்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


விஷால்

சிவகார்த்திகேயன் போன்று நானும் கஷ்டப்பட்டுள்ளேன். அவரது புகாரின்பேரில் அவரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

சிம்பு

சிவகார்த்திகேயனுக்கு விஷால் மட்டும் அல்ல சிம்புவும் ஆதரவு தெரிவித்துள்ளார். மிரட்டியவர்கள் யார் என எனக்கும் தெரியும். கடுமையாக உழையுங்கள், மற்றதை கடவுளிடம் விட்டுவிடுங்கள் என சிம்பு அறிவுரை வழங்கியுள்ளார்.

மதன்கள்

'வேந்தர் பிலிம்ஸ்' மதனும், 'எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்' மதனும் சிவகார்த்திகேயனுக்கு புதுப்படத்திற்காக முன்பணம் கொடுத்ததாக கூறுகிறார்கள். இதை சிவா மறுக்கிறார் என அழுகை குறித்து பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்கள்

சிவகார்த்திகேயன் மேடையில் அழுததை சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்கிறார்கள், சிலர் அவருக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க…

விஷால் ஜோடியாகும் சமந்தா – புது கூட்டணி..!!

2:13 AM |
மருது படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், சுராஜ் இயக்கத்தில் கத்தி சண்டை படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் பிஸியாக உள்ளது. மேலும் தீபாவளியில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இதைத்தொடர்ந்து விஷால், மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்துக்கு இரும்பு திரை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

தனது மேனேஜர் மூலம் 7 ஆண்டு கால காதலை முறித்துள்ளார் வரலட்சுமி..!!

11:22 PM |
நடிகர் விஷாலும், சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் காதலர்கள் என்பதும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதும் கோடம்பாக்கம் அறிந்த விஷயம். இருப்பினும் விஷாலுக்கும், சரத்குமாருக்கும் நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு பிரச்சினை வெடித்தது. அப்போது விஷாலுக்கு ஆதரவாக வரலட்சுமி இருந்தார்.

ஆனால் சமீபத்தில் சரத்குமாருக்கு ஆதரவாக வரலட்சுமி மாறியதாகவும், விஷாலுடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்டதாகவும் செய்தி பரவியது.

இந்நிலையில் வரலட்சுமி தனது ட்விட்டர் பதிவில் ’’காதல் முறிவுகள் தரம் தாழ்ந்துள்ளன..ஒரு ஆண் தனது மேனேஜர் மூலம் 7 ஆண்டு கால காதலை முறித்துள்ளார்…காதல் எங்கே? என பதிவிட்டுள்ளார். இதனால் விஷாலுடன் அவருக்குள்ள 7 ஆண்டு காதலில் பிரச்சினை என்று கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வருகிறது.
மேலும் வாசிக்க…

நடிகர் சங்கத்தில் சரத்குமார் நீக்கிய விவகாரம் - விஷாலை திட்டி தீர்த்த வரலட்சுமி..!!

1:14 AM |
ஆடு பகை, குட்டி உறவு என்பார்கள். அது போல சரத்குமார், ராதிகா இடையே மோதலில் இருக்கும் விஷால் அவர்களது மகளும் நடிகையுமான வரலட்சுமியை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்கும் விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை அதிரடியாக நீக்கினார்.

இதனை அறிந்த திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. சரத்குமாரின் மனைவி ராதிகா டுவிட்டரில் விஷாலை சூனியக்காரன் என திட்டி தீர்த்தார். சரத்குமாரோ இதனால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

இதனையெல்லாம் கூர்ந்து கவனித்த வரலட்சுமி தந்தையின் வருத்தத்தை பார்க்க முடியாமல் தவித்ததாக பேசப்பட்டது. இதனால் கோபமடைந்து விஷாலை திட்டியதாக சமூக வலைதளங்களில் நேற்று செய்திகள் பரவியது.

என் அப்பாவை சீண்டாதே தாங்க மாட்டே என வரலட்சுமி விஷாலிடம் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

பாலா இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரகதி..!!

1:52 AM |
பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகனாக யுவனும், நாயகியாக பிரகதியும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

‘தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து தனது படத்தில் கவனம் செலுத்தி வந்தார் இயக்குநர் பாலா, வேல.ராமமூர்த்தி எழுதிய புத்தக்கத்திலிருந்து சிறுபகுதியை எடுத்து திரைக்கதையை அமைத்து படமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா உள்ளிட்டவர்களைக் கொண்டு இப்படம் தொடங்கவிருப்பதாக பாலா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார் இந்நிலையில், அப்படத்துக்கு முன்பாக முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டார் பாலா.

இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது, இறுதியில் படத்தின் நாயகனாக ‘சாட்டை’ படத்தில் நடித்த யுவன் நடிக்க உள்ளார், நாயகியாக பிரகதி குருபிரசாத் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘சுப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் பிரகதி, அவரை ‘பரதேசி’ படத்தின் மூலமாக பாடகராகவும் அறிமுகப்படுத்திய பாலா, தற்போது நாயகியாகவும் அறிமுகப்படுத்துகிறார்.
மேலும் வாசிக்க…

விஷால் - வரலக்ஷ்மி திருமணம் விரைவில்..!!

11:21 PM |
நடிகை வரலட்சுமியுடன் தான் இணைந்து இருக்கும் புகைப்படத்தை, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள நடிகர் விஷால், 'இந்தப்படமே அனைத்தையும் சொல்லும்' என, கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், முன்னாள் தலைவர் சரத்குமார் அணியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் விஷால்.

தாய் பகையானாலும் குட்டி உறவு என்பது போல், சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியை, விஷால் காதலிப்பதாக கூறப்பட்டது. இதற்கு, இருதரப்பிலும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

மாறாக, பொது நிகழ்ச்சிகளுக்கு இருவரும் சேர்ந்தே சென்று வந்தனர். 'டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், இருவரும் இணைந்த புகைப்படங்களை, அவ்வப்போது வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், விஷாலும், வரலட்சுமியும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக பரவிய தகவலை தொடர்ந்து, நடிகர் விஷால், 'டுவிட்டரில்' நேற்று, வரலட்சுமி மற்றும் செல்ல நாயுடன் இணைந்து இருக்கும் படத்தை வெளியிட்டு, 'இது எல்லாவற்றையும் சொல்லும்' என, தகவல் வெளியிட்டு உள்ளார்.

விஷாலின் பதிவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி, நடிகர், நடிகையரும் வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

'தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில், 2018ல் கட்டி முடிக்கப்படும் திருமண மண்டபத்தில் நடைபெறும் முதல் திருமணம், விஷால் - வரலட்சுமி ஜோடியாக இருக்கலாம்' என, 'கோலிவுட்' எனப்படும் சென்னை, கோடம்பாக்கம் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
மேலும் வாசிக்க…

பரபரப்பை கிளப்பும் விஷால்-வரலட்சுமி ஃபோட்டோ..!!

12:56 AM |
விஷால், வரலட்சுமி இருவரும் நீண்ட நாளாகவே நட்புடன் பழகிவருகிறார்கள். இருவரையும் சேர்த்து பல கிசுகிசுக்கள் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில் விஷால் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷால் தன்னுடைய ட்விட்டர் கணக்கில், வரலட்சுமியுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபி ஒன்றை வெளியிட்டு, “இந்தப் புகைப்படம் எல்லாமே சொல்லும்” என்று ட்விட்டியிருக்கிறார். இந்தப் புகைப்படத்தையும், ட்விட்டையும் பார்த்த சக நடிகர்களும், ரசிகர்களும் விஷால், வரலட்சுமியை திருமணம் செய்யப்போகிறார் என்று நினைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதற்கு விஷால் தரப்பிலிருந்தோ, வரலட்சுமி தரப்பிலிருந்தோ எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. தவிர, என்னுடைய வாழ்வில் ஒரு லட்சுமி இருக்கிறார் என்று முன்னர் விழா ஒன்றில் விஷால் பேசியதும் நினைவுக்கூரத்தக்கது.

விஷால், வரலட்சுமி நடிப்பில் சுந்தர்.சி இயக்கிய “மதகஜராஜா” வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, ரிலீஸூக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 


மேலும் வாசிக்க…

விஷாலுக்கு பலத்த அடி- அதிர்ச்சியில் திரையுலகம்..!!

11:24 PM |
விஷால் கடந்த சில நாட்களாகவே பல அதிரடி திட்டங்களை செய்து வருகிறார். இதில் குறிப்பாக திருட்டு விசிடிக்கு எதிராக களத்தில் இறங்கி போராடுகிறார்.

இந்நிலையில் இவர் நடித்து வரும் கத்திச்சண்டை படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின் போது விஷாலுக்கு தோல்பட்டையில் பலத்த அடி விழுந்துள்ளது.

வலி தாங்க முடியாமல் விஷால் துடிக்க, உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு விஷாலை அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
மேலும் வாசிக்க…

அஜித் இப்பிடித்தான்.. ஜெயலலிதாவுக்கே தெரிஞ்ச உண்மை… பரபரப்புத் தகவல்..!!

3:10 AM |
தேர்தல் திருவிழா முடிந்தாலும் செண்டை மேள கச்சேரி முடிய இன்னும் சில காலம் ஆகும் போலிருக்கிறது. 6 வது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொள்ளும் ஜெ.வை வாழ்த்த திரையுலகம் க்யூ கட்டி நிற்கிறது. அம்மா… தேவை ஒரே ஒரு அப்பாயினிட்மென்ட் என்று சினிமா சங்கங்கள் அத்தனையும் கடிதம் கொடுத்துவிட்டு காத்துக் கிடக்கின்றன. அது ஒருபுறமிருக்க, முதல்வர் பொறுப்பேற்றுக் கொள்ளும் அந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல், இளையராஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தன.

ஆனால் ரஜினி கமல் வராவிட்டாலும், விஷால் சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் வந்திருந்தார்கள். இங்குதான் ஒரு டவுட். அரசியலில் எப்பவும் அம்மாவுக்கு சப்போர்ட் என்று பொதுமக்களால் நம்பப்படும் அஜீத்துக்கு அழைப்பிதழ் போனதா இல்லையா?

நமக்கு கிடைத்த தகவலின்படி அவருக்கு அழைப்பிதழே செல்லவில்லையாம். பொதுவாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிற வழக்கம் அஜீத்திற்கு இல்லை என்பது கோட்டை வரைக்கும் எட்டியிருக்கிறதே? எதற்கு அவருக்கு தர்ம சங்கடத்தை கொடுப்பானேன் என்று நினைத்திருக்கலாம்.

அந்த வகையில் அஜீத்தண்ணே… உங்க குரல் வெயிட்டுதான்!
மேலும் வாசிக்க…

இராஜபாளையம் பெண்களின் அழகை ரசித்தேன். விஷால்..!!

11:10 PM |
விஷால், ஸ்ரீதிவ்யா, நடிப்பில் வெளியாகவுள்ள 'மருது' திரைப்படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்புகள் இராஜபாளையத்தில்தான் நடைபெற்றது. இயக்குனர் முத்தையாவின் சொந்த ஊர் என்பதால் அந்த ஊரின் இண்டு இடுக்கெல்லாம் அவருக்கு அத்துபடி, என்றும், அந்த ஊரையே அவர் ஒரு பிலிம் சிட்டியாக மாற்றிவிட்டதாகவும் விஷால் கூறியுள்ளார்.

மேலும் ராஜபாளையம் என்றாலே நாய்களுக்குப் புகழ்பெற்றது என்று கூறுவார்கள். ஆனால் அந்த ஊர் அழகான பெண்களுக்கும் பெயர் பெற்றது. அங்கு அழகழகான பெண்களைக் கண்டு வியந்தேன். ரசித்தேன்.

இந்த படத்தில் ராதாரவி, சூரி ஆகிய இருவருமே முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். ராதாரவியுடன் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கவும் இருந்ததில்லை. நடிகர் சங்க தேர்தலை அவர் ஒரு கோணத்தில் பார்த்தார். நான் ஒரு கோணத்தில் பார்த்தேன். அவ்வளவுதான்

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் பேய் என்றும் ராட்சசன் என்றும் கூறலாம். அந்த அளவுக்கு அவர் வெளுத்து வாங்கியுள்ளார். இந்த படம் எனக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் திருப்தியான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

மாஸ் ஹீரோ இப்படி செய்யலாமா? விஷாலை கிண்டல் செய்த வரலட்சுமி..!!

11:51 PM |
விஷால், வரலட்சுமி இருவருமே நல்ல நண்பர்கள். தாரை தப்பட்டை படம் பார்த்துவிட்டு வரலட்சுமியை மனம் திறந்து பாராட்டினார் விஷால்.

அதேபோல் தற்போது மருது படத்தை பார்த்த வரலட்சுமி ‘மருது படம் சூப்பர் ஹிட், ஆனால் ஒரு மாஸ் ஹீரோ செய்வதை நீங்களே பாருங்கள்’ என டுவிட் செய்தார்.

இதில் விஷால் குழந்தைகள் வரையும் பொம்மை படங்களில் கலர் செய்து கொண்டிருந்தார். இதோ உங்களுக்காக வரலட்சுமி டுவிட்...

மேலும் வாசிக்க…

மருது திரைவிமர்சனம் - Marudhu Review

2:38 AM |
விஷால் சமீப காலமாக சீவிவிட்ட காளையின் கொம்பு போல் கூராக உள்ளார். நடிகர் சங்க வெற்றி, திருட்டு விசிடி அதிரடி முடிவு என பம்பரமாக சுழலும் இவருக்கு படத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரம் அமைந்தால் எப்படியிருக்கும்?.

அப்படி ஒரு கதாபாத்திரத்தை குட்டிபுலி, கொம்பன் வெற்றிகளை தொடர்ந்து முத்தையா விஷாலுக்காக ரெடி செய்துள்ள படம் தான் மருது.

கதைக்களம்

ராஜபாளையத்தில் பெரிய தலைக்கட்டு ராதாரவி, இவர் கை காட்டியவர் தான் அந்த ஊரில் பல பதவிகளை பிடிக்கிறார்கள். ராதாரவியின் இடது கை போல் அவர் சொல்லும் அத்தனை அடிதடி, கட்டப்பஞ்சாயத்து வேலைகளை முடித்துக்கொடுப்பவர் ஆர்.கே.சுரேஷ்.

இவரை அடுத்த MLA ஆக்க ராதாரவி முயற்சி செய்து வருகிறார். இதே ஊரில் லோட் மேனாக (மூட்டை தூக்குபவர்) விஷால், தன் அப்பத்தாவின் வளர்ப்பில் வீரமாகவும், ஊரில் எந்த தவறு நடந்தாலும் முத்தையாவின் டெம்ப்ளைட் ஹீரோவாக வலம் வருகிறார்.

ஸ்ரீதிவ்யாவை ஒரு கோவிலில் பார்க்க, பார்த்தவுடன் மோதல் பிறகு காதல் என விஷாலின் வாழ்க்கை சந்தோஷமாக செல்ல, ஸ்ரீதிவ்யாவின் அம்மாவை ஒரு சில காரணங்களுக்காக ஆர்.கே.சுரேஷ் கொலை செய்தது விஷாலுக்கு தெரிய வருகிறது.

அவர் இறந்ததற்கு ஏதோ ஒரு விதத்தில் விஷாலும், அவருடைய அப்பத்தாவும் காரணமாக அமைய, பிறகு என்ன அப்பத்தா விஷாலுக்கு கொம்பை சீவி விட விஷால் ஆர்.கே.சுரேஷின் அநியாயங்களை அடக்குவது மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஷால் 6 அடி உயரம், 5 பேர் இல்லை 50 பேர் வந்தாலும் அடித்து நொறுக்குகிறார், அதை நம்பவும் முடிகின்றது. முரட்டு இளைஞன், பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர், அப்பத்தாவிற்கு செல்ல பேரன், அநியாயங்களை தட்டி கேட்பவர் என அனைத்திலும் புகுந்து விளையாடியுள்ளார்.

ஸ்ரீதிவ்யா முதன் முதலாக நிறைய நடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை வெறும் ஸ்கீரின் வந்து மட்டும் போகும், ஸ்ரீதிவ்யா இதில் விஷாலையே கை நீட்டி அடிக்கும் அளவிற்கு தைரியமான பெண். தென் மாவட்டத்து பெண்களுக்கே உரிய பாவனை.

யாருயா இந்த அப்பத்தா? என்று தான் படம் முடிந்து வெளியே வருபவர்கள் பலரும் கேட்கும் கேள்வி. படத்தின் மற்றொரு ஹீரோ என்று கூட கூறலாம், காமெடியில் ஆரம்பித்து விஷாலுக்கு வீரம் புகுட்டும் காட்சி வரை சரவெடி தான். அதிலும் விஷாலை, ஸ்ரீதிவ்யாவை காதலிக்க வைக்கும் காட்சி காமெடி கலக்கல். அதுமட்டுமில்லாமல், ‘என் பேரனுக்கு எந்த பதவியும் வேண்டாம், அவன் நினைச்சா எந்த பதவிலையும் அவனே போய் உட்காருவான்’ என பன்ச் வசனம் வேறு, தெரிந்து தான் பேசினாரா என்பது கேள்விக்குறி.

சூரி காமெடி நீண்ட நாட்களுக்கு பிறகு சிரிப்பு வருகின்றது, கிராமத்து கதை என்றாலே சூரி கால்ஷிட் தான் போல இனி, அதே நேரத்தில் கிளைமேக்ஸில் செண்டிமெண்ட் காட்சிகளிலும் கலங்க வைத்துள்ளார். இதையெல்லாம் விடுங்க, ராதாரவி-விஷால் காம்பினேஷன் படத்தில் உள்ளது.

பலரும் எதிர்ப்பார்த்த காட்சி, பேசிய அளவிற்கு தான் இல்லை என்றாலும், விஷால் மனதில் தோன்றியதை படத்தில் கேட்டு விட்டார். ஆனால், முத்தையா இனி இதுப்போன்ற கதைகளையே தொடர்ந்து எடுக்க வேண்டுமா? என கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனெனில் அம்மா செண்டிமெண்ட், மாமனார் செண்டிமெண்ட், தற்போது அப்பத்தா செண்டிமெண்ட் ஒரே பாணியில் தான் அனைத்து படமும் இருக்கின்றது.

இந்த ஊரில் போலிஸ் எல்லாம் இருக்கிறார்களா? என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. சுரேஷ் அவர் வீட்டு ஆட்களை தவிர எல்லோரையும் வெட்டுகிறார், குத்துகிறார், லாஜிக் அத்துமீறல். இத்தனை வன்முறையா தேவையா முத்தையா சார்?. டி.இமான் இசையில் பாடல்கள் தாளம் போட வைத்தாலும் பின்னணி இசை காதை பதம் பார்க்கின்றது. வேல்ராஜ் ஒளிப்பதிவு என்று யாராவது சொன்னால் தான் தெரியும், ஏதோ சிறு பட்ஜெட் படம் போல் உள்ளது.

க்ளாப்ஸ்

விஷால் கிராமத்து இளைஞனாக இறங்கி அடித்துள்ளார், விஷால்-ராதாரவி சம்மந்தப்பட்ட காட்சிகள்.

அப்பத்தா முழுப்படத்தையும் தாங்கி செல்கிறார். தமிழ் சினிமாவிற்கு குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு.

படத்தின் முதல் பாதி சூரி காமெடி, விஷால் அடிதடி என விறுவிறுப்பாக செல்கின்றது. குறிப்பாக பெண்களை மதிக்கு வசனங்கள்.


பல்ப்ஸ்

லாஜிக் மீறல், சமூகத்திற்கு சில தேவையற்ற குறியீடு வசனங்கள், கண்டிப்பாக முத்தையா இதை அடுத்த படத்தில் மாற்ற வேண்டும்.

இரண்டாம் பாதி யூகிக்க கூடிய பல காட்சிகள், கிளைமேக்ஸ் உட்பட, பார்த்து பழகி போன கதைக்களம்.

மொத்தத்தில் மருது ஜனரஞ்சக படங்களை விரும்புவோர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கலாம்.


ரேட்டிங்- 2.5/5
மேலும் வாசிக்க…

விஷால் ஆர்யாவால் வாக்குசாவடியில் பரபரப்பு..!!

10:34 PM |
பிரபல நடிகர் விஷால், ஆர்யா இருவரும் ஒன்றாக இணைந்து சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்தனர். சரியாக 11 மணிக்கு அவர்கள் வர பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

உடனடியாக காவல்துறையினர் இரண்டு பேரையும் பாதுகாப்பாக வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, புகைப்படக்காரர்கள் விஷாலையும், ஆர்யாவையும் படம் எடுக்க முயன்றபோது பூத் அதிகாரிகள் தடுத்தனர்.

இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து புகைப்படக்காரர்களை அங்கிருந்து வெளியேற்றினர். விஷால் 59வது பூத்தில் வாக்களிக்க சென்ற பொது வரிசையில் அதிகம் மக்கள் நின்றதால் நேராக சென்று வாக்களித்தார் ,

ஆனால் ஆர்யா 51வது வாக்குசவடியில் மக்களோடு மக்களாக நின்று வாக்களித்தார். வாக்கு பதிவு செய்த பின் அங்கு கூடி இருந்த மக்கள் ஆர்யா விஷாலுடன் செல்பி எடுத்து கொண்டனர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com