சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 13-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
பள்ளி, கல்லூரி வளாகங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சென்னை, காஞ்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 13 வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
கடலோர தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கேரளா, லட்சத்தீவுகள், உள் தமிழகத்தில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில முறை மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 29 மற்றும் 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags:
News
,
காஞ்சி
,
செய்தி
,
சென்னை
,
திருவள்ளூர்