பெண்களே இது உங்களுக்கான செய்தி கொஞ்சம் உஷாராக இருங்கள்…??

8:46 AM |
ROHYPNOL” மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்…!

Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு குடுத்தால்சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார்.
இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…!

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும்கண்டு புடிக்க முடியாது.

மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால்அடிமை ஆகி விடுவார்களாம்.

அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன்வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது.

மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும்என்கின்றனர் மருத்துவர்கள்.

இதைப் போன்றநிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..!

மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம்இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள்.

மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும்குடிக்காதீர்கள்…!

ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம்இவை ஏற்றப்படலாம்….!

குறிப்பாக இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நிலையில் பல தென்னிலங்கை முகவர்களால் இம் மாத்திரை பல இடங்களில் வினியோகிக்கப் பட்டுள்ளதுடன் கொழும்பின் அதிகமான இடங்களில் இம் மாத்திரையின் பயன் பாடு அதிகரித்துள்ளது.

அத்துடன் வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப் பட்டுள்ள இம் மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது.

வடக்கில் உள்ள சிலர் தென்னிலங்கை போதைக் கும்பலுடன் தொடர்புடைய பலர் மூலம் இவற்றை விற்பனை செய்வதும் குறிப்பிடத் தக்கது விரைவில் முழுமை விபரம்…..!!

இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும்
பகிர்ந்து கொள்ளுங்கள் !! விழிப்புணர்வு செய்யுங்கள் !!!
நன்றி…பொது நலம் கருதி வெளியிடுவோர்…
மேலும் வாசிக்க…

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 13 வரை விடுமுறை

5:41 PM |
சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 13-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பள்ளி, கல்லூரி வளாகங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சென்னை, காஞ்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 13 வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு

கடலோர தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கேரளா, லட்சத்தீவுகள், உள் தமிழகத்தில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில முறை மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 29 மற்றும் 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க…

நியூயார்க், லண்டன், மும்பை போன்ற உலகின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்!!

7:38 AM |
அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் பிரதேசங்கள் ஆகிய தென், வட துருவங்கள் புவி வெப்பமடைந்து வருவதால் மிக வேகமாக உருகி வருகிறது.

இதனால் வரும் அரை நூற்றாண்டுக்குள் இவை முழுவதுமாக உருகிவிடும். மேலும் கடல்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆழ்கடலில் மூழ்கிய பண்டையக் காலத்து அற்புத நகரங்கள்!!!

இவ்விரண்டு துருவங்கள் மட்டுமின்றி கிரீன்லாந்து பனிப்படலங்களும் கூட அதிவேகமாக உருகி வருகின்றன. ஒருவேளை இந்த கிரீன்லாந்து பனிப்படலங்களும் முழுவதுமாக உருகிவிட்டால் உலகின் மிக முக்கியமான நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் நிலை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எட்டு அங்குலம் உயர்ந்துள்ளது ஏற்கனவே, புவி வெப்பமயம் ஆதல் காரணத்தினால், நமது உலகில் கடலின் உயரம் எட்டு அங்குலம் வரை உயர்ந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனால் பல கடலோர பகுதிகள் மற்றும் தீவுகளின் கடற்கரை மட்டம் உயர்ந்து வருகிறது

கிரீன்லாந்து பனிப்படலங்கள் உருகிவிட்டால் ஒருவேளை இப்போது வேகமாக உருகி வரும் கிரீன்லாந்து பனிப்படலங்களும் முழுமையாக உருகிவிட்டால் தற்போது உள்ளதை விட 23 அடி வரை வர கடல் மட்டம் உயரலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் உலகின் முக்கிய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றன.

ஷாங்காய் சீனாவின் மிக முக்கியமான நகராக திகழ்ந்து வருகிறது ஷாங்காய். ஏறத்தாழ இரண்டு கோடியே நாற்பத்தி ஐந்து இலட்சம் மக்கள் வாழ்ந்து வரும் உலகின் பெரும் நகரம். வர்த்தக ரீதியாக உலகின் முக்கிய நகராக விளங்கிவரும் இந்த நகரம் கடலில் மூழ்கிவிடும் அபாயத்தில் இருக்கிறது.

நியூயார்க் வர்த்தக ரீதியில் உலகின் மற்றுமொரு முக்கிய நகராக திகழ்ந்து வருகிறது அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க். ஏறத்தாழ இந்த நகரில் 90 இலட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். கிரீன்லாந்து பனிப்படலம் முற்றிலுமாக உருகினால் இந்நகரமும் கடலில் முற்றிலுமாக மூழ்கிவிடும்.

சிட்னி ஆஸ்திரேலியாவின் நியூ சௌத்வேல்ஸ் பகுதியின் தலைமை இடம் சிட்னி. இங்கு ஏறத்தாழ ஐம்பது இலட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். உலக சந்தை பொருளாதாரத்தில் முக்கியமான நகராக திகழ்ந்து வரும் சிட்னியும் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறது.

இஸ்தான்புல் துருக்கியின் மிக முக்கியமான நகர். வர்த்தக ரீதியில் மட்டுமின்றி, கலாச்சாரம், வரலாறு, நாட்டின் பொருளாதாரம் என அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் நகர் தான் இஸ்தான்புல். இந்நகரமும் கடலில் மூழ்கிவிடும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள். இந்த நகரில் ஏறத்தாழ 1.5 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

சான் பிரான்சிஸ்கோ வடக்கு கலிபோர்னியா பகுதியின் முக்கிய நகரம் சான் பிரான்சிஸ்கோ. கலாச்சாரம், வணிகம், பொருளாதாரம் போன்றவற்றில் இந்த நகரம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஐம்பது இலட்சம் பேர் வாழ்ந்து வரும் நகரான சான் பிரான்சிஸ்கோவும் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறது.

மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் நகரான மும்பை வர்த்தக ரீதியாக மாபெரும் நகராக விளங்கி வருகிறது. கடலோர பகுதியான மும்பையும் அபாயத்தில் இருக்கிறது. இங்கு ஏறத்தாழ இரண்டரை கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியா முழுவதிலும் இருந்து பல லட்சம் பேர் இங்கு குடிப்பெயர்ந்து வந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

லண்டன் இங்கிலாந்தின் மிகமுக்கியமான நகர் என்று லண்டனை குறிப்பிடலாம். இது மாபெரும் வரலாற்று பின்னணி கொண்ட நகரும் கூட. இங்கு ஏறத்தாழ 80 இலட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கும் நகரங்களில் லண்டனும் ஒன்று.

சிங்கப்பூர் எழுச்சியின் இலச்சினை என்று புகழப்படும் சிங்கப்பூரும் கூட கடலில் மூழ்கும் அபாயத்தில் தான் இருக்கிறது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான சிங்கப்பூரில் ஐம்பது லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள்.

அம்ஸ்ரடாம் நெதர்லாந்தின் முக்கிய நகர் அம்ஸ்ரடாம் இது ஒரு மெட்ரோபொலிட்டன் பகுதியாகும். இங்கு ஏறத்தாழ இருபது லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நகரும் கடலில் மூழ்கும் அபாயத்தில் தான் இருக்கிறது.
கேப் டவுன் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க்கிற்கு அடுத்து முக்கியமான நகராக விளங்கிவரும் கேப் டவுன் பகுதியும் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

துபாய் உலக சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்து வரும் துபாய். அதிவேகமாக வளர்ச்சி கண்ட பகுதி. உலக பணக்காரர்கள் இங்கு கோடிகளை கோடி வீடுகளை வாங்கி வருகிறார்கள். ஆனால், துபாயும் கடலில் மூழ்கும் அபாயத்தில் முதன்மை பகுதியாக இருக்கிறது.

டோக்கியோ ஜப்பானின் தலைநகர் மற்றும் பெரிய நகர் டோக்கியோ. இது ஒரு மாபெரும் தொழில்நுட்ப நகரம் என்று தான் குறிப்பிட வேண்டும். மக்கள் தொகை அதிகமாக இருக்கும் உலகின் பெரிய மெட்ரோபொலிட்டன் நகர் இது. இங்கு ஏறத்தாழ 1.3 கோடி பேர் வாழ்ந்து வருகிறார்கள். டோக்கியோவும் கடலில் மூழ்கும் அச்சத்தில் உள்ளது.

ரியோ டி ஜெனிரோ பிரேசிலின் இரண்டாவது பெரும் நகரம் ரியோ டி ஜெனிரோ. உல்லாச நகரம் என்று குறிப்பிடும் அளவில் இங்கு கொண்டாட்டங்களுக்கு குறைவே இருக்காது. உலக பாரம்பரிய நகர்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 1.2 கோடி பேர் வாழும் இந்த நகருமும் அழிந்துவிடும் அச்சத்தில் தான் இருக்கிறது.

சென்னை வெள்ளப்பெருக்குக்கே நிலைக்குலைந்து போன சென்னையும் இதற்கு தப்பாது. இயற்கையை சீர்குலைத்த நமது செயல்பாடுகளின் விளைவு தான் இது. இயற்கை இனி வரும் நாட்களில் அதற்கான தக்க பதிலடிகளை தரத்தான் போகிறது என்பது மட்டுமே உண்மை.

60 கோடி மக்கள் கிரீன்லாந்து பனிப்படலங்கள் முற்றிலுமாக உருகி கடல்மட்டம் உயர்ந்தால் ஏறத்தாழ உலகில் 60 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் தருணம் ஏற்படும். இதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுமா???
மேலும் வாசிக்க…

நாளை முதல் சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: பி.பி.சி. எச்சரிக்கை

12:40 AM |
தமிழக தலைநகரான சென்னையில் கடந்த இருநாட்களாக வெள்ளம் லேசாக வடியத்தொடங்கி இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் நாளை (புதன்கிழமை) முதல் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இங்கிலாந்தின் பிரபல செய்தி நிறுவனமான பி.பி.சி. எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்துக்கு வானிலை எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். தென்தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் தவிர்த்து பிற மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

சென்னைக்குட்பட்ட சில பகுதிகளில் அவ்வப்போது லேசாக மழை பெய்யும். கடலுக்குள் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க…

சென்னை நகரில் வரலாறு காணாத மழை கொட்ட காரணம் என்ன? புதிய தகவல்கள்

10:45 PM |
சென்னை நகரில் வரலாறு காணாத மழை பெய்ததற்கான காரணம் பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரலாறு காணாத மழை

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகம் அதிக மழைப்பொழிவை பெறுகிறது. இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாட்டுக்கு சராசரியாக 44 செ.மீ. மழை கிடைக்கும். ஆனால் இதுவரை சுமார் 65 செ.மீ. மழை பெய்து உள்ளது.

சென்னை மாவட்டத்தில் இந்த பருவ காலத்தில் 79 செ.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 158 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த 1-ந்தேதி ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு 49 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத மழை அளவாகும். அதற்கு 2 நாட்கள் கழித்து 4-ந்தேதி 40 செ.மீ. மழை பதிவானது. இதுவும் ஒரு சாதனை என்றாலும் மக்கள் பெரும் வேதனையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

எல் நினோ பருவநிலை மாற்றம்

உலக அளவில் இந்த ஆண்டு (2015) அதிக வெப்பம் கொண்ட ஆண்டாக திகழ்ந்ததால், கடல் நீரின் வெப்ப அளவும் அதிகரித்தது. இதை உறுதி செய்யும் வகையில், இந்திய பெருங்கடலின் வெப்ப அளவு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க கடல் மற்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

‘எல் நினோ’ எனப்படும் பருவநிலை மாற்றம் குறித்து உலக வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்த நிலையில், இந்தியாவில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்யும் என்றும், வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது.

அதிக வெப்பமான கடல்

எல் நினோ எனப்படும் ஸ்பெயின் வார்த்தைக்கு தமிழில் ‘சின்னப்பையன்’ என்று அர்த்தம். தென் அமெரிக்காவுக்கு மேற்கே பசிபிக் கடல் நீர்மட்டத்தின் வெப்பம் பொதுவாக 60 முதல் 70 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும். இந்த வெப்பநிலை 80 டிகிரி அல்லது அதற்கு அதிகம் ஆகும் போது அந்த பகுதியில் கடுமையான வானிலை மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த எல் நினோ பருவநிலை மாற்றத்தின் காரணமாக தென்கிழக்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளிலும் வழக்கமான வானிலை மாறி வெப்பம் அதிகரிக்கும். எல் நினோ விளைவின் காரணமாக இந்த பகுதிகளிலும் கடல் நீரின் வெப்பமும் கூடும்.

அதன்படி இந்த ஆண்டில் வடகிழக்கு பருமழை காலத்தில் இந்தியப் பெருங்கடல் அளவுக்கு அதிகமாக வெப்பம் அடைந்தது. இதனால் தெற்கு வங்க கடல் பகுதியில் வெப்பத்தின் அளவு மிகவும் அதிகரித்து வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் அடுத்தடுத்து உருவாயின. இதனால் கடல் நீர் அதிக அளவில் ஆவியாகி தீவிர மழை மேகங்களை அதிக அளவில் நிலப்பகுதியை நோக்கி தள்ளியது.

எச்சரிக்கை

இதன் காரணமாகத்தான் வழக்கத்தை விட இந்த ஆண்டில் சென்னையிலும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்ததாக வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். எல் நினோவின் தாக்கம் சில மாதங்கள் வரை நீடிக்கும் என்பதால் மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர்.
மேலும் வாசிக்க…

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்….! நாசா வீடியோ வெளியீடு.!

5:39 PM |
அடுத்த  இப்போ பெய்த மழையைவிட பலமடங்கு மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜப்பானிய வான்வெளி ஆய்வு முகவர் ஒருவரும் நாசாவும் வெளீயிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் பெய்வது மழை அல்ல  EL Nino சூழற்சிப்  புயல் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கிட்டத்தட்ட 250 Cm வரைக்கும் பெய்த இந்த சுழற்சிப் புயல் மீண்டும் சென்னையை தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையே முழுகி போக வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதனால் சென்னை கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனே நகரும்படி பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாசா வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும் இதுவரை அடித்த சுழற்சிப் புயலால் பெய்த மழையினால் தென் இந்தியாவின் அதாவது தமிழ்நாட்டு கடற்கரையோரங்கள் குறிப்பாக சென்னை நகரம் கடுமையாக  பாதிக்கப்பட்டதுடன், 260 க்கும் மேற்பட்டோர் இக்கடும் மழை வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்ததாகவும் மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மேலும் தென் இந்தியாவை தாக்கிய இச் சுழற்சிப் புயல் இலங்கையையும் தாக்கும் எனவும் நாசா மேலும் வெளியிட்டுள்ளது.


இந்நிலையில்  இலங்கையில் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் அவசர அவசரமாக திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் சாலைகளும் வீதிகளும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

மட்டக்களப்பு-பொலநறுவை நெடுஞ்சாலையில் மன்னம்பிட்டிய மற்றும் கல்லல ஆகிய இடங்களிலும், மன்னார்-புத்தளம் சாலையில் எழுவான்குளத்திலும் இப்படியான நிலை காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றது.


புத்தளம், மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பாதுப்புகள் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான அறிக்கை பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ளது.

வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மழையுடன் கூடிய கால நிலை இலங்கையிலும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க…

தந்தையானதை அறிவித்தார் ஷக்கர்பேர்க்: மகளுக்காக உலகத்தை மாற்ற பல கோடிகள்..!!

11:11 PM |
பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷக்கர்பேர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸ்ஸிலா தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழந்தைக்கு மெக்ஸ் என பெயரிட்டுள்ளனர்.  இது தொடர்பாக உணர்ச்சிபூர்வமான நிலைத்தகவலொன்றை மார்க் ஷக்கர்பேர்க் தனது உத்தியோகபூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல் குழந்தையின் வருகை எந்தவொரு பெற்றோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது. மார்க் ஷக்கர்பேர்க் மட்டும் என்ன விதிவிலக்கா? ஆம், தனது குழந்தையின் பிறப்பு தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன் ஷக்கர்பேர்க் தம்பதிகள் பேஸ்புக் நிறுவனத்தில் தமது பங்கில் 99% நற்காரியங்களின் பொருட்டு அறக்கட்டளைக்கு வழங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதன்பெறுமதி சுமார் 45 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது பிள்ளை வளர்வதற்கான சிறந்த இடமாக உலகை மாற்றும் பொருட்டை இம்முடிவை தான் எடுத்துள்ளதாக ஷக்கர்பேர்க் தெரிவிக்கின்றார்.
குழந்தை கடந்தவாரம் பிறந்த போதிலும் இவ்வாரமே அவர் அறிவிப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

குழந்தைக்காக 2 மாதம் விடுப்பில் செல்லும் பேஸ்புக் அதிபர்..!!

11:03 PM |
பேஸ்புக் அதிபர் மார்க் ஜீக்கர்பெர்க், பிறக்கவிருக்கும் தமது குழந்தையை பராமரிக்கும் பொருட்டு 2 மாதம் விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மார்க் ஜீக்கர்பெர்க்(Mark Zuckerberg), பிரிசில்லாவும்(Priscilla) தாமும் தங்களது குழந்தையின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.

மேலும், குழந்தைக்கென்று பிரத்யேகமான புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை சேகரிக்க துவங்கியுள்ளோம்.

குழந்தை பிறந்த அந்த முதல் மாதத்தினை எப்படி எதிர்கொள்வது எனவும் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.

அவளை பராமரிப்பதற்காக இரண்டு மாதங்கள் விடுப்பில் செல்லவும் திட்டமிட்டுள்ளதாக தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பணிபுரிந்து வரும் பெற்றோர்கள் தங்களது புதிதாய் பிறந்த குழந்தையுடன் அதிக நேரத்தை பங்கிட்டுக்கொள்வது, அந்த குழந்தைக்கும் குடும்பத்திற்கும் நன்மை பயக்கும் என ஆய்வுகள் கூறுவதாக தெரிவித்துள்ள மார்க்,

தமது பேஸ்புக் ஊழியர்களுக்கும் குழந்தை பிறக்கும் போது நான்கு மாதம் வரை ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

31 வயதான மார்க் மற்றும் பிரிசில்லா தம்பதியருக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

மர்மப் பொருள் விண்ணிலிருந்து விழும் காட்சி வெளிவந்துள்ளது.!! - வீடியோ

7:25 PM |

விண்பொருளை அவதானித்ததாக சில ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இலங்கைற்கு தெற்கே விண்பொருள் விழும் என பெரும் எண்ணிக்கையிலான விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் காத்திருந்த போதும், அந்த விண் பொருள் விழவில்லை என தெரிவிக்கப்பட்டது.

எனினும் மேகக் கூட்டங்கள் அதிகளவில் காணப்பட்டதனால் இந்த விண் பொருள் விழுவதனை நிலத்திலிருந்து அவதானிக்க முடியவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

WT1190F என இந்த விண்பொருளுக்கு பெயரிடப்பட்டிருந்தது.  சுமார் ஏழு நீளமான விண்பொருள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக முன்னதாகவே எதிர்வு கூறப்பட்டிருந்தது.

விண்கலமொன்றின் பாகமாக இந்தப் பொருள் இருக்கலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச வானியல் ஆய்வு மையம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய வானியல் முகவர் நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் இந்த விண்பொருளை படமெடுத்துள்ளனர்.

விமானமொன்றில் பயணித்தவாரே இந்த விண்பொருள் விழுவதனை படமெடுத்துள்ளனர்.

இந்து சமுத்திரப் பகுதியில் வைத்து இந்த விண்பொருளை குறித்த ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.

இந்த விண்பொருள் தொடர்பிலான வீடியோ மற்றும் புகைப்பட தகவல்களை ஆய்வாளர்கள் திரட்டியுள்ளனர்.

இந்த விண்பொருள் வீழ்ந்தமை தொடர்பில் ஆய்வு நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க…

நீதிமன்றத்தின் உத்தரவின் படி டிக்கெட் விலை குறைந்துள்ளது – ரசிகர்கள் உற்சாகம்..!!!

5:43 AM |
தமிழ் சினிமா பட்ஜெட் அதிகமாக அதிகமாக தியேட்டர் டிக்கெட்டுகளின் விலையும் ஏறிக்கொண்டு இருக்கின்றது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் ரூ 120 டிக்கெட் விலை நிர்ணயக்கப்படுகின்றது.

இந்த விலை ரசிகர்களுக்கு மிகவும் அதிகம் என்பதால் தற்போது நீதிமன்றத்தின் உத்தரவின் படி டிக்கெட் விலை குறைந்துள்ளது. இனி அனைத்து மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளிலும் டிக்கெட் விலை ரூ 85 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மல்டிப்ளக்ஸ் நிர்வாகிகள் பலரும் இது எங்களுக்கு கட்டுப்படியாகாத நிலைதான் என்றாலும் நீதிமன்றம் கூறிய தீர்ப்பிற்கு தலை வணங்குகிறோம் என கூறியுள்ளனர்.
மேலும் வாசிக்க…

WT 1190 F விண் பொருள் அல்ல : நாளை அதிகாலை கிரக நகர்வுகளால் வானில் விநோதம்..!!!

10:03 AM |
நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கையின் தென்பகுதிக் கடலில் விழக்கூடிய சாத்தியம் உள்ளதாகக் கூறப்படும் செய்மதிச் சிதைவு, விண் பொருள் அல்லவென அடையாளம் காணப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

WT 1190 F எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிதைவு குறித்து பிரித்தானியாவின் டெய்லி மெயில் உள்ளிட்ட பல்வேறு இணையத்தளங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.

இந்த சிதைவு தொடர்பில் வினவியபோது, 2012ஆம் ஆண்டிலிருந்து அந்த பொருள் விண்வெளியில் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அதனடிப்படையிலான ஆராய்ச்சிகளின் பிரகாரம் அது விண்பொருள் அல்லவென உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆதர் சீ கிளார்க் நிலையத்தின் விஞ்ஞானி ஒருவர் குறிப்பிட்டார்.

நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கை நேரப்படி முற்பகல் 11.50 அளவில் தென்பகுதி கரையோரத்திலிருந்து 65 கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள கடலில் இந்த பாகம் விழக்கூடிய சாத்தியமுள்ளதாகவும், அது விழக்கூடிய சரியான இடம் தொடர்பில் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிதைவின் நகர்வு குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சிலர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும், இந்த சிதைவினால் இலங்கைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்பட மாட்டாதென நட்சத்திர சாஸ்திரவியலாளர்கள் கருதுகின்றனர்.

நட்சத்திர சாஸ்திரவியல் தொடர்பில் ஆர்வம் காட்டுகின்றவர்களுக்கு நாளை அதிகாலை அபூர்வ சந்தர்ப்பமொன்று கிட்டவுள்ளது.

மூன்று கிரகங்கள் ஒன்றுக்கொண்டு மிகவும் நெருக்கமாக பயணிக்கும் அபூர்வ காட்சியை அவதானிக்கும் சந்தர்ப்பம் நாளை அமையவுள்ளது.

இதன் பிரகாரம் வியாழன், செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்கள் ஒன்றுக்கொன்று மிக அருகில் நகருமென ஆதர் சீ கிளார்க் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாளை அதிகாலை 4 மணியளவில் கிழக்கு வான் பரப்பிலிருந்து 15 முதல் 20 பாகைக்கு இடையில் இந்த கிரக நகர்வுகளைக் கண்காணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முக்கோண வடிவிலான இந்த கிரகங்களின் அமைவினை சாதாரண கண்காளால் பார்வையிட முடியும் எனவும் ஆதர் சீ கிளார்க் நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

Kalyan Jewellers Selling Fake Gold

9:05 AM |



Kalyan Jewellers Selling Fake Gold, Actor Prabhu Should Take Moral Responsibility And Stop Promoting It

கல்யாண் ஜுவல்லர்ஸ் விற்பனை செய்யும் தங்க நகைகளில் கலப்படம் செய்யப்படுவதாக கூறி தந்தை பெரியார் கழகம் மற்றும் மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கு விளம்பர தூதராக உள்ள நடிகர் பிரபுவிற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Kalyan Jewellers Selling Fake Gold, Actor Prabhu Should Take Moral Responsibility

மக்களை ஏமாற்றும் கல்யாண ஜ்வெல்லெர்யின் அதிர்ச்சி வீடியோ. ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.!!
மேலும் வாசிக்க…

கன்னியா குமரியில் பாதிரியார் பெண்களுடன் உல்லாசத்தில் ஈடுபடும்போது கைது வீடியோ..!!

7:18 AM |

கன்னியா குமரியில் பாதிரியார் பெண்களுடன் உல்லாசத்தில் ஈடுபடும்போது கைது வீடியோ..!!


மேலும் வாசிக்க…

இளைஞர்களின் மனதில் விதையாய் புதைந்த அப்துல் கலாம் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!!

7:56 PM |
அக்டோபர் 15, பிறந்தநாள்... 

ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம். இதுதான் கலாமின் முழுப் பெயர். அக்டோபர் 15,1931-ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். தந்தை ஜெயுனுல்லாபுதீன், தாய் ஆஷியம்மா. தந்தையார் படகு கட்டும் தொழில் செய்துவந்தார். கலாம் படிக்கும் காலத்தில் செய்தித்தாள் போட்டும், புளியங்கொட்டை விற்றும் வீட்டுக்கு உதவினார். நேர்மையான பண்பை தன் அப்பாவிடம் இருந்து பெற்றதாக சிலாகிப்பார் கலாம்.

 உயர்நிலைக் கல்வியை முடித்தப் பின், திருச்சியில் ஒரு கல்லூரியில் இயற்பியல் துறையில் பயின்றார். எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் ஏரோனாடிக்கல் பொறியியல் துறையில் இடம் கிடைத்து, பணம் கட்ட முடியாமல் இருந்தபொழுது இவரின் சகோதரிதான் நகைகளைக் கொடுத்து படிக்க அனுப்பினார். கல்லூரி வந்த சில நாட்களிலேயே, தொழிலில் ஏற்பட்ட பாதிப்பில் அப்பா, திரும்ப ஊருக்கு வரச்சொல்லியதால் தன் புத்தகங்களை  எடைக்கு போட்டு பணம் திரட்டப்போன இடத்தில் புத்தகங்களை வாங்காமல் பணத்தை மட்டும் கொடுத்து மேலே படிக்கச் சொன்ன பேப்பர்காரரை இன்னமும் நன்றியோடு குறிப்பிடுவார் கலாம்.

கல்லூரியில் உணவுச் செலவை குறைக்க சைவத்துக்கு மாறினார். அதுவே இப்போதும் தொடர்கிறது. பொறியியல் கல்வியை முடித்ததும் விமானி ஆகவே ஆசைப்பட்டார். ஆனால், ஓர் இடம் பின்தங்கி வாய்ப்பை இழந்தார். கண்ணீரோடு நின்றவரை சுவாமி சிவானந்தரின் ''இதைவிட பெரிதான ஒன்றுக்காக நீ அனுப்பப்பட்டு இருக்கிறாய்'' என்ற வரிகள் உத்வேகப்படுத்தின.

விக்ரம் சாராபாயின் ஊக்கத்தில் இந்திய விண்வெளிக் கழகத்தில் இணைந்தார். அங்கேதான் முதல் சுதேசி விண்கலமான எஸ்.எல்.வியை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ரோகினி, திரிசூல், ப்ரித்வி, ஆகாஷ் என இந்தியாவின் விஞ்ஞான வலிமையை உலகுக்கு உரக்கச் சொல்லும் ஏவுகணைகளை உருவாக்கி 'இந்தியாவின் ஏவுகணைத் தொழில்நுட்பத் தந்தை’ என அழைக்கப்பட்டார்.

புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் அதிகம்.திருக்குறள், குரான் எப்பொழுதும் உடன் இருக்கும். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள் பிடிக்கும். வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.



பிடித்த நிறம் கருநீலம். ஆடைகள் அதே நிறத்தில் இருக்கும். எளிமையான ஆடைகளையே அணிவார். எஸ்.எல்.வி-3 வெற்றிக்குப் பிறகு இந்திரா காந்தி, கலாமைச் சந்திக்க நினைத்தார். அப்பொழுது ''என்னிடம் நல்ல ஆடைகளே இல்லையே'' என கலாம் சொல்ல, ''வெற்றி என்கிற அழகான ஆடையை அணிந்து இருக்கிறீர்கள்!' என  மூத்த விஞ்ஞானி சதீஷ் தவான் சொன்னார்.

இந்தியா முழுக்க மாணவர்களை சந்திப்பதிலும் பாடம் நடத்துவதிலும் தன் நேரத்தை செலவழித்து வந்தார். தன்னிடம் அற்புதமான ஒரு கேள்வி கேட்டதற்காக தமிழ்நாட்டு சுட்டி ஒருவரை டெல்லி வரை அழைத்து மரியாதை செய்தார்.  

ஜனாதிபதியாக இருந்தபோது, ராஷ்ட்ரபதி பவனில் இருக்கும் மொகல் தோட்டத்தை மக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டார். தன் பதவி ஏற்பு விழாவுக்கு சுட்டிகளை வரவழைத்தார். பதவிக் காலம் முடிந்து வெளியேறும்போது எந்த பரிசுப் பொருளையும் எடுத்து செல்லவில்லை. இரண்டே சூட்கேஸ்களில் அவரின் அத்தனை உடமைகளும் அடங்கிவிட்டன. தன் உறவினர்கள் டெல்லி வந்து தங்கியபோதுது அதற்கான செலவை ஜனாதிபதி மாளிகை கணக்கில் வைக்காமல் தானே செலுத்தினார்.

இந்தியாவின் உயரிய கௌரவமாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது பெற்றவர். ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் கிலோ கணக்கில் செயற்கை கால்களை அணிந்துகொண்டு இருந்த சுட்டிகளுக்கு வெறும் நானூறு கிராம் எடையில் செயற்கை கால்களை வடிவமைத்துத் தந்தார்.

தான் எழுதிய அக்னிச் சிறகுகள் நூலில் ''என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்த பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

- பூ.கொ.சரவணன் - நன்றி - Vikatan
மேலும் வாசிக்க…

அப்துல் கலாம் மரணத்தில் சந்தேகமா? திடிக்கிடும் தகவல்கள். பதறியது இந்தியா...!!!

8:22 AM |
அப்துல் கலாம் அய்யாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்ததாக சொன்ன தருனத்தையோ...

அந்த நேரத்தில் அவர் மருத்துவ மனைக்கு கூட்டிட்டு போனதையோ.....எந்த வீடியோவோயும் மீடியா மக்களிடம் ஏன் காட்டவில்லை ?

இரண்டு நாள் முழுவது திரும்பும் திசை எல்லாம் அவரை பற்றி மட்டும் செய்திகளை போட்டு கொண்டிருக்கும் மீடியா, ஒரு மாதமா உடல் நிலை சரி இல்லாததை சொல்லாமல் இருந்தது ஏன்?

இறப்பதற்கு முன்பே இறந்து விட்டார் என்று பிஜேபி அமைச்சர் அவர் படத்திற்கு மாலை போட என்ன காரணம்...?

அதே கட்சியை சார்ந்த ஒருவன் அவர் நல்ல வேலை இறந்து விட்டார்...

இந்திய ரகசியத்தை பாகிஸ்தானுக்கு சொல்லிருவாரோனு நாங்கள் பயந்தோம்னு ஒரு செய்தியை டுவிட்டரில் போட்டிருக்கான்...

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட அனைத்தும் நாளை விடுமுறை அறிவித்த நிலையில்....

யாகூப் மேனனுக்கு உடனே தூக்கு தண்டனை நிறைவேற்ற என்ன காரணம்?

அப்துல் கலாம் உடல் நிலை சரி இல்லாதவர் என்று தெரிந்த அரசு அவரை குளிர் பகுதிக்கு போதிய மருத்துவ வசதி இல்லாத ஒரு இடத்திற்கு செல்ல அனுமதித்தது ஏன்?

வெள்ளையா இருக்கும் அவர் முகம் இப்படி கருமை நிறத்தில் மாறியதற்கு காரணம்?

இப்படி பல சந்தேகம் எனக்கு வந்துகிட்டே இருக்கு ....

இது எனக்கு மட்டும் தான் வருதா உங்களுக்கும் வருதா தோழர்களே....

ப்ளீஸ் சொல்லுங்க... நான் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன்...

கலாமின் இழப்பை என்னால் தாங்க முடியவில்லை!!!!

அதேப்போல தோழர் யாகூபின் தூக்குதண்டனையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.....

முக்கியமான ஒரு டவூட்டு.....

அப்தில் கலாமின் இறப்பு...

இயற்கை மரணமா இல்லை திட்டமிட்ட அரசியல் கொலையா.....?

குழப்பத்தின் உச்சியில்....
மேலும் வாசிக்க…

ஈழத்து நடிகை மிதுனாவின் பெயரை களங்கப்படுத்தும் ஊடகங்கள்..!!!

2:43 AM |

இந்திய சினிமாவுக்கு நிகராக ஈழத்து சினிமாத்துறையில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் பல ஊடகங்கள் ஈழத்து கலைஞர்களின் குறும்படங்களை வெளியிட்டு, விமர்சனங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

எனினும், தற்போது ஈழத்து நடிகைகளை பழிவாங்கும் நோக்குடன் சில தனிநபர்களால் போலியான செய்திகள் பரப்பப்ட்டு  பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.

வாட்ஸ் அப், மற்றும் வைபரில் அதிவேகமாக பரவிவந்த ஈழத்து நடிகை திவ்யாவின் அந்தரங்க காணொளி தொடர்பாக பல போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன, குறித்த இணையத்தில் அக்காணொளி ஈழத்திலுள்ள போட்டியான நடிகை மிதுனாவினால் திட்டமிடப்பட்டு வெளிநாட்டிலுள்ளவர் மூலம் எடுக்கப்பட்டதாகவும், அந்நடிகையிலுள்ள போட்டி காரணமாக இச்செயலில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நாம் ஈழத்து நடிகை திவ்யாவிடமிருந்து எமக்கு வந்த காணொளி :ஈழத்தின் சினிமாத்துறையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு பங்களியுங்கள். இவ்வாறான ஈனச்செயல்களில் ஈடுபடவேண்டாம்


மேலும் வாசிக்க…

இந்து கோவிலில் குண்டுவெடிப்பு.!! வாலிபரை தாய்லாந்து போலீஸ் வலைவீசி தேடுகிறது..!!

2:31 AM |
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்து கோவில் வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில், வெடிகுண்டை வைத்துவிட்டு சென்றதாக சந்தேகத்திற்கு இடமான வாலிபரை தாய்லாந்து போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்உள்ள, பிரம்மதேவன் இந்து கோவில் வளாகத்தில் நேற்று மாலை, மறைத்து வைக்கப்பட்டு இருந்த சக்திவாய்ந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கு பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது. மாலை நேரம் என்பதால் தங்களுடைய பணிகள் முடிந்து ஏராளமானோர் அந்த பகுதி வழியாக நடந்து சென்றவர்கள் சிக்கிக்கொண்டனர். குண்டு வெடிப்பில் சிக்கியவர்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடிப்பில் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 120–க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இதனால் அந்த பகுதியே ரத்தக்காடாக காட்சியளித்தது. பெரும் பதற்றமும், குழப்பமும் நிலவியது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களும், போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்தனர். போலீசார் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். அங்கு பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தாய்லாந்து அரசு கருதுகிறது.

தலைநகர் பாங்காக்கில் இதுவரை பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குண்டுவெடிப்புக்கு முன்னதாக வாலிபர் ஒருவர், தான் கொண்டுவந்த  ‘பேக்’ ஒன்றை விட்டுச் சென்றதாகவும், அதிலிருந்து வெடிகுண்டு வெடித்து உள்ளது என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. இதனையடுத்து சந்தேகத்திற்கு இடமான வாலிபை தாய்லாந்து போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். குண்டு வெடிப்பு தொடர்பான காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகிஉள்ளது. அதில் சந்தேகத்திற்கு இடமான வாலிபரது புகைப்படம் இடம்பெற்று உள்ளது. “நாங்கள் வாலிபரை தேடிவருகிறோம்,” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குண்டு வெடிப்பை தொடர்ந்து தாய்லாந்து மந்திரிசபை கூட்டம் நடைபெற்று உள்ளது. சிலர் இணைந்துதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்றும் குண்டு வெடிப்புக்கான காரணம் என்னவென்று தெரியவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே அரபு நாட்டை சேர்ந்த வாலிபர் வெடிகுண்டு இருந்த ‘பேக்’கை விட்டு சென்றார் என்று அந்நாட்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது. ஆனால் அரசு தரப்பில் வெளியிட்டுள்ள தகவலில் வாலிபரின் தேசம் தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் வாசிக்க…

பிரபல சீரியல் நடிகை குடிபோதையில் செய்யும் அசிங்கத்தை பாருங்க! அதிர்ச்சி வீடியோ!

9:51 AM |

பிரபல சீரியல் நடிகை குடிபோதையில் செய்யும் அசிங்கத்தை பாருங்க! அதிர்ச்சி வீடியோ!
மேலும் வாசிக்க…

Vijay TV Jodi No 1 Show not enjoyed by Family Audience

6:45 PM |
Vijay TV’s Famous show Jodi No 1 has a huge audience and now Season 8 is going on. This show is almost in the final stage.

3 Finalists were already selected and during the wildcard show these finalist were conducted a cheap event by the anchors , in this the Jodies were asked to lift their pair and should cross the bar without keeping their pair down.

Whats the need of this in a dance show ? How can a Family sit together and watch such shows ? Vijay TV has its own respect and reach and they must take due care in maintaining that.

After this show Jodi No 1 will not be preferred by the Family audience as its will be a kind of disgusting for them.



மேலும் வாசிக்க…

நடிகர் பிரசன்னா - சினேகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது..!!

8:54 AM |
நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து மிகவும் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு சினேகா, சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும், ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 1 வருடங்களாகவே சினேகா, எந்தவித படப்பிடிப்பிலும் சினி விழாக்களிலும் கலந்துகொள்ளவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதால் அவர் எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், பிரசன்னா-சினேகா தம்பதியருக்கு நேற்று இரவு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். பிரசவத்திற்கு பிறகு தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

குழந்தை பிறந்ததால், நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்களது உறவினர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com