'விஜய் 60' பாடலுக்கான டியூன்களை ஸ்பெஷலாக கேட்கும் விஜய்..!!

1:58 AM |
பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி மூன்று நாட்கள் மட்டும் நடைபெற்றது. இந்நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் மே இரண்டாம் தேதி சென்னை பின்னி மில்லில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

இதில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் மாஸ் ஓபனிங் பாடல் படமாகவுள்ளது. விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது இதுவே முதல்முறையாகும். முதலில் டியூன் ரெடியானதும் அதை அவர் விஜய்யிடம் போட்டு காட்டுகிறாராம்.

மேலும் விஜய் ஓகே சொன்ன பிறகே இசைக்கோர்ப்பு பணிகளை தொடங்குகிறாராம். அந்தவகையில் விஜய் ஓகே செய்த அந்த ஓபனிங் பாடல்தான் வரும் மே 2-ம் தேதி படமாகவுள்ளது.
மேலும் வாசிக்க…

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 13 வரை விடுமுறை

5:41 PM |
சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 13-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பள்ளி, கல்லூரி வளாகங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சென்னை, காஞ்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 13 வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு

கடலோர தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கேரளா, லட்சத்தீவுகள், உள் தமிழகத்தில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில முறை மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 29 மற்றும் 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க…

நாளை முதல் சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: பி.பி.சி. எச்சரிக்கை

12:40 AM |
தமிழக தலைநகரான சென்னையில் கடந்த இருநாட்களாக வெள்ளம் லேசாக வடியத்தொடங்கி இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் நாளை (புதன்கிழமை) முதல் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இங்கிலாந்தின் பிரபல செய்தி நிறுவனமான பி.பி.சி. எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்துக்கு வானிலை எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். தென்தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் தவிர்த்து பிற மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

சென்னைக்குட்பட்ட சில பகுதிகளில் அவ்வப்போது லேசாக மழை பெய்யும். கடலுக்குள் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க…

சென்னை நகரில் வரலாறு காணாத மழை கொட்ட காரணம் என்ன? புதிய தகவல்கள்

10:45 PM |
சென்னை நகரில் வரலாறு காணாத மழை பெய்ததற்கான காரணம் பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரலாறு காணாத மழை

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகம் அதிக மழைப்பொழிவை பெறுகிறது. இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாட்டுக்கு சராசரியாக 44 செ.மீ. மழை கிடைக்கும். ஆனால் இதுவரை சுமார் 65 செ.மீ. மழை பெய்து உள்ளது.

சென்னை மாவட்டத்தில் இந்த பருவ காலத்தில் 79 செ.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 158 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த 1-ந்தேதி ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு 49 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத மழை அளவாகும். அதற்கு 2 நாட்கள் கழித்து 4-ந்தேதி 40 செ.மீ. மழை பதிவானது. இதுவும் ஒரு சாதனை என்றாலும் மக்கள் பெரும் வேதனையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

எல் நினோ பருவநிலை மாற்றம்

உலக அளவில் இந்த ஆண்டு (2015) அதிக வெப்பம் கொண்ட ஆண்டாக திகழ்ந்ததால், கடல் நீரின் வெப்ப அளவும் அதிகரித்தது. இதை உறுதி செய்யும் வகையில், இந்திய பெருங்கடலின் வெப்ப அளவு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க கடல் மற்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

‘எல் நினோ’ எனப்படும் பருவநிலை மாற்றம் குறித்து உலக வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்த நிலையில், இந்தியாவில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்யும் என்றும், வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது.

அதிக வெப்பமான கடல்

எல் நினோ எனப்படும் ஸ்பெயின் வார்த்தைக்கு தமிழில் ‘சின்னப்பையன்’ என்று அர்த்தம். தென் அமெரிக்காவுக்கு மேற்கே பசிபிக் கடல் நீர்மட்டத்தின் வெப்பம் பொதுவாக 60 முதல் 70 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும். இந்த வெப்பநிலை 80 டிகிரி அல்லது அதற்கு அதிகம் ஆகும் போது அந்த பகுதியில் கடுமையான வானிலை மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த எல் நினோ பருவநிலை மாற்றத்தின் காரணமாக தென்கிழக்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளிலும் வழக்கமான வானிலை மாறி வெப்பம் அதிகரிக்கும். எல் நினோ விளைவின் காரணமாக இந்த பகுதிகளிலும் கடல் நீரின் வெப்பமும் கூடும்.

அதன்படி இந்த ஆண்டில் வடகிழக்கு பருமழை காலத்தில் இந்தியப் பெருங்கடல் அளவுக்கு அதிகமாக வெப்பம் அடைந்தது. இதனால் தெற்கு வங்க கடல் பகுதியில் வெப்பத்தின் அளவு மிகவும் அதிகரித்து வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் அடுத்தடுத்து உருவாயின. இதனால் கடல் நீர் அதிக அளவில் ஆவியாகி தீவிர மழை மேகங்களை அதிக அளவில் நிலப்பகுதியை நோக்கி தள்ளியது.

எச்சரிக்கை

இதன் காரணமாகத்தான் வழக்கத்தை விட இந்த ஆண்டில் சென்னையிலும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்ததாக வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். எல் நினோவின் தாக்கம் சில மாதங்கள் வரை நீடிக்கும் என்பதால் மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர்.
மேலும் வாசிக்க…

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்….! நாசா வீடியோ வெளியீடு.!

5:39 PM |
அடுத்த  இப்போ பெய்த மழையைவிட பலமடங்கு மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜப்பானிய வான்வெளி ஆய்வு முகவர் ஒருவரும் நாசாவும் வெளீயிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் பெய்வது மழை அல்ல  EL Nino சூழற்சிப்  புயல் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கிட்டத்தட்ட 250 Cm வரைக்கும் பெய்த இந்த சுழற்சிப் புயல் மீண்டும் சென்னையை தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையே முழுகி போக வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதனால் சென்னை கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனே நகரும்படி பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாசா வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும் இதுவரை அடித்த சுழற்சிப் புயலால் பெய்த மழையினால் தென் இந்தியாவின் அதாவது தமிழ்நாட்டு கடற்கரையோரங்கள் குறிப்பாக சென்னை நகரம் கடுமையாக  பாதிக்கப்பட்டதுடன், 260 க்கும் மேற்பட்டோர் இக்கடும் மழை வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்ததாகவும் மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மேலும் தென் இந்தியாவை தாக்கிய இச் சுழற்சிப் புயல் இலங்கையையும் தாக்கும் எனவும் நாசா மேலும் வெளியிட்டுள்ளது.


இந்நிலையில்  இலங்கையில் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் அவசர அவசரமாக திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் சாலைகளும் வீதிகளும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

மட்டக்களப்பு-பொலநறுவை நெடுஞ்சாலையில் மன்னம்பிட்டிய மற்றும் கல்லல ஆகிய இடங்களிலும், மன்னார்-புத்தளம் சாலையில் எழுவான்குளத்திலும் இப்படியான நிலை காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றது.


புத்தளம், மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பாதுப்புகள் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான அறிக்கை பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ளது.

வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மழையுடன் கூடிய கால நிலை இலங்கையிலும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com