மலையாளத்தில் பெரும் வெற்றிப் பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல். மம்முட்டி- நயன்தாரா நடித்திருந்தனர். இந்தப் படத்தைப் பார்த்த ரஜினி, அதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க பெரிதும் ஆர்வம் காட்டினார். படத்தின் உரிமையை எஸ்எஸ் துரைராஜ் வைத்திருந்தார். ஏய், பாறை, சதுரங்கம் போன்ற படங்களைத் தயாரித்தவர். பாஸ்கர் தி ராஸ்கல் தமிழ்ப் பதிப்பை தானே தயாரிக்க விரும்பினார்.
ரஜினி ஆர்வம் காட்டுவதை அறிந்து அவரிடம் நேரில் பேசினார். ரஜினியும் சம்மதிக்கவே, படத்துக்கான பைனான்ஸ் வேலைகளில் தீவிரமானார் துரைராஜ். அப்போதுதான் ரஜினி கபாலியில் நடிக்க முன்னுரிமை தந்துவிட்டார்.
எனவே காத்திருக்க வேண்டிய நிலை. கபாலி முடிந்ததும் ரஜினி எந்திரன் 2-ல் நடிப்பதால், வேறு ஹீரோவைத் தேடினார் துரைராஜ். இந்தக் கதையில் ரஜினி அல்லது அஜீத் நடித்தால்தான் சரியாக வரும் என்பதில் உறுதியாக இருந்த துரைராஜுக்கு, இப்போது அதற்கான வாய்ப்பும் அமைந்திருக்கிறது.
மலையாளத்தில் இயக்கிய சித்திக்கே இந்தப் படத்தை தமிழிலும் இயக்குகிறார். கிரீடம் படத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கும் ரீமேக் படம் இது. காலில் அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு இந்தப் படத்தில் நடிக்கப் போகிறாராம் அஜீத்.
Tags:
Cinema
,
Vedhalam Movie Remake Film
,
சினிமா
,
தல ரசிகர்கள் அதிர்ச்சி
,
பாஸ்கர் தி ராஸ்கல்