உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு இப்போது
கபாலி பீவர். ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த கபாலி பீவர் எப்போது போகும் என்பதை படக்குழுவினர் தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் இன்னும் படம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்நிலையில்
ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் தான் ரஜினி ரசிகர் என்பதை காட்டிக் கொண்டே இருக்கிறார்.
தற்போது அவர் கபாலி படம் போட்ட டீசர்ட்டுக்களை அணிந்து கொண்டுதான் வெளியே செல்கிறாராம். சமீபத்தில் கூட அவர் 'நெருப்புடா' என்று ரஜினி படம் போட்ட டீசர்ட்டை அணிந்து வெளியே சுற்றியிருக்கிறார்.
அந்த புகைப்படம் தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags:
Cinema
,
கபாலி
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
தீவிர ரசிகன்
,
நெருப்புடா
,
ரஜினி