தமிழகம் முழுவதும்... இல்லையில்லை உலகம் முழுவதும் இன்று கபாலி தினமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது..ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் கபாலி படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு ஆவலாக அடித்துப்பிடித்து தியேட்டர்களுக்கு வரும் நிகழ்வு சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களுக்கு மட்டுமே நடக்க கூடியது.
நம் ஊர் இளவட்ட பிரபலங்கலான சித்தார்த், அனிருத், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் இவர்கள் எல்லோருமே
வெற்றிவேல் தியேட்டரில் அதிகாலை காட்சியை பார்க்க வந்துவிட்டனர்.. ஆனால் இதையும் மிஞ்சு வகையில்
மலையாள நடிகர் ஜெயராம் தனது
மகன் காளிதாசுடன் அதிகாலை 2 மணிக்கே
காசி தியேட்டரில் கபாலி படம் பார்க்க வந்துவிட்டார்.
வாசலில் இருந்த கூட்டத்தை கடந்து ஒரு ரசிகனை போலவே அவர் முண்டியடித்துக்கொண்டு நீந்தி சென்றதை பார்க்கும்போது ரஜினியின் வீச்சிற்கு எப்பேர்ப்பட்ட நடிகர்களும் தப்புவதில்லை என்பது தெரிந்தது.. தியேட்டருக்குள் செல்வதற்கு முன் மீடியாவிடம் பேசிய ஜெயராம், “என்னால் படமே பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.. இதை என்ஜாய் பண்ண முடியுதில்லையா.. நான் வந்ததே இதை என்ஜாய் பண்ணத்தான் இதுபோன்ற காட்சியை இந்தியாவில் வேறு எங்கேயாவது பார்க்கமுடியுமா” என ஒரு ரசிகனாகவே மாறி பரவசத்துடன் பேசினார்.. பின்னர் தனது மகனுடன் அமர்ந்து படத்தை ரசித்துப்பார்த்து, படம் முடிந்தபின்னரே கிளம்பினர் ஜெயராம்.
Tags:
Cinema
,
அனிருத்
,
கபாலி
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
விக்னேஷ் சிவன்
,
ஜெயராம்