ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் ரெமோ. சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து வெளியான இப்படத்தின் டிரைலரும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று சென்சார் சென்ற இப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், குடும்பத்துடன் பார்க்கும் விதமாக சிறந்த பொழுதுபோக்கு படம் என இப்படத்தை பாராட்டி கிளீன் யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் நடிப்பை பார்த்து சென்சார் அதிகாரிகள் மிரண்டுபோய் விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
Tags:
Cinema
,
கீர்த்தி சுரேஷ்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
ரஜினி முருகன்
,
ரெமோ