அப்துல் கலாமுக்கு பாம்பன் கடலில் பிரமாண்ட சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது. இதுகுறித்த மாதிரி படம் தற்போது ’வாட்ஸ்அப்’பில் பரவி வருகிறது.
கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவருக்கு உலகமே வியக்கும் வண்ணம் 133 அடி உயர சிலை அமைக்கப் பட்டுள்ளது.
அதேபோன்று மறைந்த முன்னாள் ஜானதிபதி அப்துல் கலா மின் உருவச்சிலையை ராமேசுவரம் தீவில் உள்ள பாம்பன் கடலில் நிறுவி இருப்பதுபோன்ற தோற் றத்தில் அடையாளம் தெரி யாத இளைஞர் கிராபிக்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இப்படி ஒரு சிலை இந்த இடத்தில் இருந்தால் இந்தியாவுக்கு பெருமை. ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் அந்த சிலையை பார்த்து பிரமிப்பு அடைவார்கள். இதுபோன்ற தோற்றத்தில் சிலை நிறுவ வேண்டும் என்று அதனை விளக்கும் மாதிரி படம் ’வாட்ஸ்அப்’பில் பரவி வரு கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் ரெயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தென்னக ரெயில்வே துறை சார்பில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசும்போது, பாம்பன் பாலத்தால் 3 பகுதிகளை சேர்ந்த (பாபன், தங்கச்சி மடம், ராமேசுவரம்) பல லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறு வருகிறார்கள் என்றும், இந்த ரெயில் பாத்தைபாம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் ராமேசுவரம்-ன்னை அகல ரெயில்பா அமைப்பதற்கு அப்துல் கலாம் தூண்டுகோலாக இருந்தார். எனவே ப£ம்பன் கடலில் அப்துல்கலாமின் பிரமாண்ட சிலையை நிறுவ வேண்டும் என்ற இளைஞர்களின் கனவு நிறைவேறுமா..?
Tags:
News
,
செய்தி