முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உடலை பார்த்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை நெகிழச் செய்தது.
இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தே.மு.தி. க தலைவர் விஜயகாந்த் மாலை 4.20 மணியளவில் அப்துல்கலாமின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அப்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, சுதீஷ் ஆகியோருடன் உடன் இருந்தனர்.
அப்துல் கலாமின் உடலுக்கு மலர் வளையம் வைக்கும் போது விஜயகாந்த் துக்கம் தாளாமல் அழுதார். அருகில் இருந்த அவரது மனைவி பிரேமலதாவும் அழுதார். இருவரையும் சுற்றியிருந்தவர்கள் தேற்றினர்.
Tags:
News
,
செய்தி