‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை நாளை முதல் சிங்கப்பூரில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக ரஜினி இன்று சென்னை விமான நிலையம் வந்திருந்தார். ஆனால் வரும் அவசரத்தில் அவர் தனது பாஸ்போர்ட்டை வீட்டிலேயே வைத்து விட்டு வந்துள்ளார். இதனால் சிறிது நேரம் அவர் விமான நிலையத்திலேயே தவித்து போனார். பிறகு அவரது உதவியாளர் சென்று பாஸ்போர்ட்டை எடுத்து வந்துள்ளார்.
Tags:
Kabali
,
Rajini. Cinema
,
கபாலி
,
சினிமா
,
ரஜினி