ரஜினி நடித்து வரும் கபாலி படம் சென்ற வருடம் மலேசியாவில் படமாக்கியபோது பல்வேறு புகைப்படங்கள் வெளியானதால் படக்குழு கடும் அதிருப்தியில் இருந்தது.
மேலும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கும் படங்களை யாரும் வெளியிடவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
ரஜினி மீண்டும் சென்ற வாரம் மலேசியா சென்றபோது சில படங்கள் வைரலாக பரவியது.
இப்போது அங்கு எடுக்கவேண்டிய பகுதிகள் அனைத்தும் படமாக்கபட்டுவிட்டதால் படக்குழு நேற்று இந்தியாவுக்கு வந்துவிட்டது.
அதனால் இனி கபாலி படம் பற்றிய புகைப்படங்கள் இனி வராது என தெரிகிறது.
மேலும் ரஜினி அடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ள 2.0 படம் அடுத்த வாரம் தொடங்குகிறதாம். கபாலி போல் படங்கள் எதுவும் லீக் ஆக கூடாது என்பதற்காக, கடும் உத்தரவுகளை பிறப்பிதுள்ளாராம் ஷங்கர்.
நடிகர்கள் கூட செல் போன் கொண்டு செல்ல அனுமதி இல்லையாம்.
Tags:
Cinema
,
Kabali
,
Rajini
,
கபாலி
,
சினிமா
,
ரஜினி
,
ஷங்கர்