சென்னையில் உள்ள ஏவி.எம். ஸ்டுடியோவில் காலை முதல் நடைபெற்று வரும் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜனி நடிக்கும் கபாலி படத்திற்கான ஃபோட்டோ ஷுட் நடைபெற்று வருகின்றன.
இதில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே உள்ளிட்ட படக்குழுவினர் பங்குபெறும் இந்த ஃபோட்டோ ஷுட் ரசிகர்களும், மற்றவர்களும் நுழைந்து விட முடியாதபடி சிறப்புப் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.
இன்று நடைபெறும் ஃபோட்டோ ஷுட்டில் எடுக்கப்படும் புகைப்படங்களுடன் கூடிய கபாலி படத்தின் முதல் பார்வை அடுத்த மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. முதல் படப்பிடிப்பு மலேசியாவில் செப்டம்பர் மாதம் தொடக்க உள்ளது. ரஜினிகாந்த் வயதான தாதாவாக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் ரஞ்சித், தான் பார்த்த, கேட்டுப் பழகிய சில விஷயங்களை வைத்தே இந்தக் கதையை உருவாக்கியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
Tags:
Kabali
,
Kabali first look
,
Kabali Poster
,
Rajinikanth Kabali
,
Rajinikanth Kabali poster
,
Superstar Kabali