ஒரு படம் உருவாகும் அப்படத்தின் போஸ்டரை வைத்து இது எந்தப் படத்தின் காப்பி என்பதை கண்டுபிடித்து விடுகின்றனர் ரசிகர்கள். அந்த அளவு தொழில்நுட்பத்தை தங்கள் விரல் நுனியில் வைத்திருக்கின்றனர். அதுவும் பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படம் என்றால் ஏதாவது செய்தி கிடைக்காதா? என்ற சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி’ படம் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டிருக்கையில் படம் பற்றி ஒவ்வொரு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. இதில் சில பொய்யான தகவல்களும் கலந்து வருகின்றன.
புலி படத்தில் உள்ள குள்ள மனிதர்களின் காட்சியை ஒரு கொரியன் படத்தின் காப்பி என்று கூறி வந்தனர். தற்போது இது 1988ஆம் ஆண்டு வெளியான வில்லோவ் (Willow) என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என்று சத்தியம் செய்யாத குறையாக ஒரு வீடியோவை பதிவேற்றி உள்ளனர்.
அட அவசரத்த பாருங்களேன் இன்னும் ஜஸ்ட் ஒரு மாசம்தான். வெயிட் பண்ணி பார்த்திடுவோம்.
Tags:
Cinema
,
Puli Tamil Movie Online HD
,
சினிமா
,
புலி