காஜல் அகர்வாலின் முதல் உதட்டு முத்தத்தில் ஒளிந்துள்ள ரகசியம்..!!

11:40 PM |
கோலிவுட், டோலிவுட் ஆகிய திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் இதுவரை முத்தக்காட்சியில் குறிப்பாக லிப்கிஸ் காட்சியில் நடித்ததில்லை. விஜய்யின் 'துப்பாக்கி' படத்தில் ஒரு முத்தக்காட்சி வருவது போல் தோன்றும். ஆனால் வராது. இந்நிலையில் பாலிவுட்டில் காலடி எடுத்துவைத்த காஜல் அகர்வால் அவருக்கே தெரியாமல் ஒரு லிப்கிஸ் காட்சியில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ரன்தீப் ஹூடா, காஜல் அகர்வால் நடித்து வரும் ரொமான்ஸ் படம் Do Lafzon Ki Kahani’. தீபக் டிஜோரி இயக்கி வரும் இந்த படத்தின் எமோஷலான காதல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தபோது திடீரென ரன்தீப், காஜல் அகர்வாலுக்கு உதட்டு முத்தம் கொடுத்ததாகவும், இதை சற்றும் எதிர்பார்க்காத காஜல் அதிர்ச்சியாகி உடனே தன்னை விடுவித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த காட்சி குறித்து காஜல் அகர்வாலிடம் முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய காஜல், இந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டின்படி இந்த காட்சி முக்கியமானது என்று கூறி காஜலை இயக்குனர் சமாதானப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தில் காஜலின் லிப்கிஸ் காட்சி இடம்பிடித்துள்ளதா? இல்லையா? என்பதை படம் பார்த்துதான் ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் வாசிக்க…

இத்தனை கோடிக்கு விலைப்போகிறதா தெறி சாட்டிலைட்ஸ் ஆச்சரியத்தில் திரையுலகம்..!!

11:45 PM |
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை வாங்க பல முன்னணி தொலைக்காட்சிகள் போட்டிப்போட்டு வருகின்றது.

இந்நிலையில் விஜய்யின் துப்பாக்கி, நண்பன் படத்தை வாங்கிய தொலைக்காட்சியே இப்படத்தையும் வாங்க கடும் போட்டி கொடுக்கின்றதாம்.

ஏற்கனவே தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவை அந்த தொலைக்காட்சி தான் வாங்கியுள்ளது. தற்போது இப்படத்தின் சாட்டிலைட்ஸ் ரைட்ஸை ரூ 20 கோடி வரை கொடுத்து வாங்க அந்த தொலைக்காட்சி ரெடியாகவுள்ளதாம்.
மேலும் வாசிக்க…

விஜயிடமே தன் வேலையை காமித்த பிரபலத்தால் அதிர்ந்த தளபதி..!!

12:30 AM |
த்ரிஷாவுக்கு அடுத்து விஜய்யின் ஃபேவரைட் கதாநாயகியாக இருந்தவர் காஜல் அகர்வால்தான். துப்பாக்கி படத்தில் இணைந்து நடித்த பிறகு விஜய்க்கு பிடித்தமான நடிகையாக மாறிப்போனார்.

அந்த அடிப்படையில்தான் ஜில்லா படத்துக்கு யாரை கதாநாயகியாக புக் பண்ணுவது என்ற பேச்சு வந்தபோது, காஜல் அகர்வாலை சிபாரிசு செய்தார் விஜய். ஜில்லா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

ஒரு படம் தோல்வியடைந்துவிட்டால் அதில் பங்குபெற்றவர்களை மறுபடி அடுத்தடுத்த படத்தில் பணியாற்ற அழைக்க தயங்குவார்கள்.

இந்த சென்ட்டிமெண்ட்டையும் மீறி, ஏற்கனவே இரண்டு முறை தனக்கு ஜோடியாக நடித்தவர் என்பதையும் மீறி அடுத்து நடிக்க உள்ள படத்துக்கு (விஜய் 60) காஜல் அகர்வாலை விஜய் சிபாரிசு செய்தார்.

ஹீரோவின் சிபாரிசு தனக்கு ஸ்ட்ராங்காக இருப்பதை புரிந்து கொண்ட காஜல் அகர்வால் இரண்டு மடங்கு சம்பளம்கேட்டிருக்கிறார்.

கடுப்பான தயாரிப்பாளர் இந்த விஷயத்தை விஜய்யின் கவனத்துக்குக் கொண்டுபோனதோடு, காஜல் அகர்வாலை புக் பண்ண தனக்கு இஷ்டமில்லை என்பதையும் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

அதன் பிறகே கதாநாயகி விஷயத்தில் நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னாராம் விஜய்.
உடனே உற்சாகமானவர்கள் அவசர அவசரமாக கீர்த்தி சுரேஷை புக் பண்ணியுள்ளனர்.

ரஜினி முருகன் படம் பார்த்த பிறகு கீர்த்தி சுரேஷ் பற்றி விஜய்க்கு பாசிட்டிவ்வான கருத்து இருந்திருக்கிறது.
விஜய் 60 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு கூடிய விரைவில் விஜய்யின் ஃபேவரைட் நாயகியாக கீர்த்தி சுரேஷ் உருவெடுப்பார் என்று நம்பலாம்.

பரதன் இயக்கவிருக்கும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்க இருக்கிறது.
மேலும் வாசிக்க…

சூடு பிடிக்கும் தெறி வியாபாரம்: ரிலீசுக்கு முன்பே 100 கோடியை தொட்ட பிஸ்னெஸ்..!!

12:44 AM |
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக விளங்கும் இளைய தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படம் "தெறி". கலைபுலி எஸ்.தாணு தயாரித்து வரும் இப்படத்தின் பாடல்கள் கூட வெளியாகத நிலையில் தற்போது வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

இப்படம் விஜய் - முருகதாஸ் - தாணு கூட்டணியில் வெளியான துப்பாக்கி படத்தின் வியாபாரத்தை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு படம் கோடை விடுமுறைக்கு வெளியாவதால் இப்படத்தின் விநியோக உரிமையை பெற கடும் போட்டி நிலவி வருகிறது.

தெறி படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமை சுமார் 60 கோடி ரூபாய்க்கும், சாட்டிலைட் உரிமை சுமார் 30 கோடி ரூபாய்க்கும், வெளிநாடு உரிமையும் 30 கோடி ரூபாய்க்கும் மற்ற மாநில உரிமைகள் 20 கோடி ரூபாய் வரைக்கும் பேசப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆக, வியாபாரத்திலேயே தெறி படம் சுமார் 100 கோடி ரூபாயைத் தாண்டிவிடும் என்கிறார்கள்.
மேலும் வாசிக்க…

விஜய்யின் அடுத்த புதிய படத்தின் கதாநாயகி உறுதியானது..!!

10:50 PM |
விஜய் தற்போது தனது 59-வது படமாக தெறி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு தனது 60-வது படமாக அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத முதல் வாரத்தில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

விஜய்யுடன் துப்பாக்கி ஜில்லா ஆகிய படங்களில் நடித்த காஜல் அகர்வாலையே இப்படத்திலும் ஹீரோயினாக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால், கடைசியில் அந்தவாய்ப்பு கீர்த்தி சுரேஷ் வசம் சென்றுள்ளது.

தற்போது விஜய்யின் 60-வது படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வ செய்தி உறுதியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ரஜினிமுருகன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து தனுஷுடன் இவர் நடித்து வரும் மிரட்டு படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் கீர்த்தி சுரேஷுக்கு இந்த விஜய் பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார். மதி ஒளிப்பதிவையும், பிரவீன் கே.எல். எடிட்டிங்கையும் செய்யவிருக்கிறார்கள்.
மேலும் வாசிக்க…

காஜல் அகர்வாலை மீண்டும் விஜய்க்கு ஜோடியாக்க முயற்சி..!!

1:11 AM |
விஜய் நடிப்பில் அவரது 59-வது படமாக உருவாகி வரும் ‘தெறி’ தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். அட்லி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவிருக்கிறது.

இதையடுத்து விஜய் தனது 60-வது படமாக ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஏப்ரல் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால், இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

ஆனால், தற்போது காஜலை எப்படியாவது இந்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துவிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விஜய்யின் அடுத்த படத்தில் காஜல் அகர்வால்தான் கதாநாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது.

காஜல் அகர்வால் ஏற்கெனவே விஜய் நடிப்பில் வெளிவந்த ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. அதனாலேயே ராசியான நடிகை என்ற செண்டிமென்டில் இந்த படத்தில் காஜலை ஒப்பந்தம் செய்ய படக்குழுவினர் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

விஜய், அஜித்துக்கு பிறகு அதர்வா தான் – ஏ.ஆர்.முருகதாஸ் புகழாரம்..!!

12:51 AM |
அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா, கேத்தரின் தெரசா நடித்திருக்கும் கணிதன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்,  முரளி சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். காரணம் அவர் தனது கேரியரில் பல புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதேபோல் விஜய், அஜித்தும் தனது கேரியரில் பல புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு அடுத்து அதர்வா தான் தற்போது இளம் இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அவர் தொடர்ந்து இதை செய்து வரவேண்டும் என கூறியுள்ளார்.

இப்படத்தின் இயக்குனர் சந்தோஷ், ஏழாம் அறிவு, துப்பாக்கி படங்களின் போது ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

நயன்தாராவுக்கு இணையாக சம்பளம் கேட்கும் காஜல் அகர்வால்..!!

10:41 PM |
தமிழ், தெலுங்கு பட உலகில் நயன்தாரா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நடித்த படங்கள் வெற்றி கரமாக ஓடி வசூல் ஈட்டுகின்றன. இதனால் ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது போல் காஜல் அகர்வாலும் சம்பளத்தை தற்போது உயர்த்தி இருக்கிறார். காஜல் அகர்வால் ஏற்கனவே விஜய் ஜோடியாக நடித்த துப்பாக்கி படம் வசூல் சாதனை படைத்தது. ஜில்லா படமும் வெற்றிகரமாக ஓடியது.

கடந்த வருடம் மாரி, பாயும்புலி படங்கள் அவரது நடிப்பில் வெளிவந்தன. தெலுங்கில் டெம்பர் என்ற படம் வெளியானது. தற்போது 'கவலை வேண்டாம் மற்றும் தமிழ், தெலுங்கில் தயாராகும் பிரம்மோற்சவம் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தி படமொன்றிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் தமிழில் புதிய படமொன்றில் நடிக்க தயாரிப்பாளர் ஒருவர் காஜல் அகர்வாலை அணுகியதாகவும் அவர் ரூ. 2 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டதாகவும் இணைய தளங்களில் தகவல்கள் பரவி உள்ளன.
அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்வதா அல்லது வேறு கதாநாயகியை தேர்வு செய்வதா என்று அந்த தயாரிப்பாளர் யோசித்துக்கொண்டு இருக்கிறார்.
மேலும் வாசிக்க…

விஜய்யின் ‘துப்பாக்கி 2’ உறுதியானது..!!

7:23 PM |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக அஜித் அல்லது விஜய்யை வைத்து தமிழில் ஒரு படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை இயக்கபோவதாக அறிவித்தார்.

இந்நிலையில் மகேஷ் பாபு படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைக்கப் போவதகவும் இது துப்பாக்கி இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தை கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com