தமிழ், தெலுங்கு பட உலகில் நயன்தாரா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நடித்த படங்கள் வெற்றி கரமாக ஓடி வசூல் ஈட்டுகின்றன. இதனால் ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அது போல் காஜல் அகர்வாலும் சம்பளத்தை தற்போது உயர்த்தி இருக்கிறார். காஜல் அகர்வால் ஏற்கனவே விஜய் ஜோடியாக நடித்த துப்பாக்கி படம் வசூல் சாதனை படைத்தது. ஜில்லா படமும் வெற்றிகரமாக ஓடியது.
கடந்த வருடம் மாரி, பாயும்புலி படங்கள் அவரது நடிப்பில் வெளிவந்தன. தெலுங்கில் டெம்பர் என்ற படம் வெளியானது. தற்போது 'கவலை வேண்டாம் மற்றும் தமிழ், தெலுங்கில் தயாராகும் பிரம்மோற்சவம் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தி படமொன்றிலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் தமிழில் புதிய படமொன்றில் நடிக்க தயாரிப்பாளர் ஒருவர் காஜல் அகர்வாலை அணுகியதாகவும் அவர் ரூ. 2 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டதாகவும் இணைய தளங்களில் தகவல்கள் பரவி உள்ளன.
அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்வதா அல்லது வேறு கதாநாயகியை தேர்வு செய்வதா என்று அந்த தயாரிப்பாளர் யோசித்துக்கொண்டு இருக்கிறார்.
Tags:
Cinema
,
Kajal Agarwal
,
Nayanthara
,
காஜல் அகர்வால்
,
சினிமா
,
துப்பாக்கி
,
நயன்தாரா