விஜய் நடிப்பில் அவரது 59-வது படமாக உருவாகி வரும் ‘தெறி’ தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். அட்லி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவிருக்கிறது.
இதையடுத்து விஜய் தனது 60-வது படமாக ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஏப்ரல் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால், இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
ஆனால், தற்போது காஜலை எப்படியாவது இந்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துவிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விஜய்யின் அடுத்த படத்தில் காஜல் அகர்வால்தான் கதாநாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது.
காஜல் அகர்வால் ஏற்கெனவே விஜய் நடிப்பில் வெளிவந்த ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. அதனாலேயே ராசியான நடிகை என்ற செண்டிமென்டில் இந்த படத்தில் காஜலை ஒப்பந்தம் செய்ய படக்குழுவினர் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
KajalAgrwal
,
ஏமி ஜாக்சன்
,
சமந்தா
,
சினிமா
,
துப்பாக்கி
,
தெறி
,
விஜய்