அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா, கேத்தரின் தெரசா நடித்திருக்கும் கணிதன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், முரளி சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். காரணம் அவர் தனது கேரியரில் பல புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதேபோல் விஜய், அஜித்தும் தனது கேரியரில் பல புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு அடுத்து அதர்வா தான் தற்போது இளம் இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அவர் தொடர்ந்து இதை செய்து வரவேண்டும் என கூறியுள்ளார்.
இப்படத்தின் இயக்குனர் சந்தோஷ், ஏழாம் அறிவு, துப்பாக்கி படங்களின் போது ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
அதர்வா
,
அஜித்
,
சினிமா
,
துப்பாக்கி
,
முருகதாஸ்
,
விஜய்