பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷக்கர்பேர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸ்ஸிலா தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழந்தைக்கு மெக்ஸ் என பெயரிட்டுள்ளனர். இது தொடர்பாக உணர்ச்சிபூர்வமான நிலைத்தகவலொன்றை மார்க் ஷக்கர்பேர்க் தனது உத்தியோகபூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல் குழந்தையின் வருகை எந்தவொரு பெற்றோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது. மார்க் ஷக்கர்பேர்க் மட்டும் என்ன விதிவிலக்கா? ஆம், தனது குழந்தையின் பிறப்பு தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன் ஷக்கர்பேர்க் தம்பதிகள் பேஸ்புக் நிறுவனத்தில் தமது பங்கில் 99% நற்காரியங்களின் பொருட்டு அறக்கட்டளைக்கு வழங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதன்பெறுமதி சுமார் 45 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது பிள்ளை வளர்வதற்கான சிறந்த இடமாக உலகை மாற்றும் பொருட்டை இம்முடிவை தான் எடுத்துள்ளதாக ஷக்கர்பேர்க் தெரிவிக்கின்றார்.
குழந்தை கடந்தவாரம் பிறந்த போதிலும் இவ்வாரமே அவர் அறிவிப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags:
News
,
செய்தி
,
தந்தையானதை அறிவித்தார் ஷக்கர்பேர்க்
,
மார்க்