இணையத்தில் பட்டையை கிளப்பும் ஆர்யாவின் "கடம்பன்" திரைப்பட டீசர்..!!

1:17 AM |
மேலும் வாசிக்க…

ஆர்யா , அமலா பால் திடீர் திருமணம் அதிர்ச்சியில் திரைஉலகம்..!!

2:48 AM |
மேலும் வாசிக்க…

பாலா இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரகதி..!!

1:52 AM |
பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகனாக யுவனும், நாயகியாக பிரகதியும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

‘தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து தனது படத்தில் கவனம் செலுத்தி வந்தார் இயக்குநர் பாலா, வேல.ராமமூர்த்தி எழுதிய புத்தக்கத்திலிருந்து சிறுபகுதியை எடுத்து திரைக்கதையை அமைத்து படமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா உள்ளிட்டவர்களைக் கொண்டு இப்படம் தொடங்கவிருப்பதாக பாலா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார் இந்நிலையில், அப்படத்துக்கு முன்பாக முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டார் பாலா.

இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது, இறுதியில் படத்தின் நாயகனாக ‘சாட்டை’ படத்தில் நடித்த யுவன் நடிக்க உள்ளார், நாயகியாக பிரகதி குருபிரசாத் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘சுப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் பிரகதி, அவரை ‘பரதேசி’ படத்தின் மூலமாக பாடகராகவும் அறிமுகப்படுத்திய பாலா, தற்போது நாயகியாகவும் அறிமுகப்படுத்துகிறார்.
மேலும் வாசிக்க…

விஷால் ஆர்யாவால் வாக்குசாவடியில் பரபரப்பு..!!

10:34 PM |
பிரபல நடிகர் விஷால், ஆர்யா இருவரும் ஒன்றாக இணைந்து சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்தனர். சரியாக 11 மணிக்கு அவர்கள் வர பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

உடனடியாக காவல்துறையினர் இரண்டு பேரையும் பாதுகாப்பாக வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, புகைப்படக்காரர்கள் விஷாலையும், ஆர்யாவையும் படம் எடுக்க முயன்றபோது பூத் அதிகாரிகள் தடுத்தனர்.

இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து புகைப்படக்காரர்களை அங்கிருந்து வெளியேற்றினர். விஷால் 59வது பூத்தில் வாக்களிக்க சென்ற பொது வரிசையில் அதிகம் மக்கள் நின்றதால் நேராக சென்று வாக்களித்தார் ,

ஆனால் ஆர்யா 51வது வாக்குசவடியில் மக்களோடு மக்களாக நின்று வாக்களித்தார். வாக்கு பதிவு செய்த பின் அங்கு கூடி இருந்த மக்கள் ஆர்யா விஷாலுடன் செல்பி எடுத்து கொண்டனர்.
மேலும் வாசிக்க…

த்ரிஷாவை “என்னுடைய குஞ்சுமணி” எண்டு ஆபாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஹீரோ..!!

12:25 AM |
ஆர்யா பற்றி அறிமுகம் அவசியமில்லை.

பெண்களை குறிப்பாக கதாநாயகி நடிகைகளை சுகிப்பதற்காகவே சினிமாவுக்கு வந்தவர்போல் எந்நேரமும் ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’யாகவே திரிந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடன் நடிக்கும் நடிகைகளை வளைப்பதிலும், வசப்படுத்துவதிலும் ஆர்யா கில்லாடி என்று அவரது நெருங்கிய நண்பரான விஷாலே நற்சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.

படப்பிடிப்பு இருக்கும் நேரங்களில் மட்டுமல்ல, படப்பிடிப்பு இல்லாத நேரங்களிலும் நடிகைகளுடன் நட்சத்திர ஹோட்டல்களில் தென்படுவார் ஆர்யா.

ஒருமுறை அனுஷ்கா உடன் ஹயாத் ஹோட்டலுக்கு காரில் வந்து இறங்க, அந்த நேரம் பார்த்து அங்கே நடைபெற்ற பிரஸ்மீட்டை முடித்துவிட்டு பத்திரிகையாளர்கள் வெளியே வர..

அதிர்ச்சியடைந்த அனுஷ்காவும், ஆர்யாவும் அங்கிருந்து எஸ்கேப்பானார்கள்.

இப்படியாக, சக கதாநாயகர்கள் பொறமைத்தீயில் பொசுங்கிப்போகும் அளவுக்கு, ஒரு நடிகையையும் ஆர்யா விட்டு வைத்ததில்லை என்பதே உண்மை.

இந்தப் பட்டியலில் த்ரிஷாவும் இருக்கக் கூடும் என்பதே இப்போதைய தகவல்.

இப்படியொரு சந்தேகம்  இன்றைக்கு ஏற்பட என்ன காரணம்?

த்ரிஷாவுக்கு இன்று பிறந்தநாள்…

நேரிலும், தொலைபேசியிலும், ட்விட்டரிலும் த்ரிஷாவை பலரும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

ட்விட்டரில் த்ரிஷாவுக்கு பிறந்த நாள் தெரிவித்திருக்கிறார் ஆர்யா.

அவர் த்ரிஷாவை ‘எப்படி’ வாழ்த்தினார் என்பதுதான் இந்த செய்திக்கான அடிப்படை.



Happy birthday my darling my sweetheart my Kunjumani @trishtrashers 😘😘😘😘😍😍😍 have the best year forward with loads of love fun grt health 💪😘👍
என்று த்ரிஷாவை வாழ்த்தி இருக்கிறார்.

மை டார்லிங்…. மை ஸ்வீட்ஹார்ட்…. என்று வாழ்த்திய ஆர்யா ஒருபடி மேலேபோய் மை குஞ்சுமணி என்றும் த்ரிஷாவை ஆபாசமாக குறிப்பிட்டிருக்கிறார்.

குஞ்சுமணி என்ற வார்த்தைக்கான அர்த்தம் ஒருவேளை நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் த்ரிஷாவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஒருவேளை தெரியாமல் இருந்திருந்தால் ஆர்யா நிச்சயமாக சொல்லிக் கொடுத்திருப்பார்.
மேலும் வாசிக்க…

நயன்தாராவை கர்ப்பமாக்கிய இளம் இயக்குனர்; அதிர்ச்சியில் திரையுலகம்..!!

1:13 AM |
நயன்தாரா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சிம்புவிடம் காதல் தோல்வி, பின் பிரபுதேவாவிடம் தன் வாழ்க்கையையே பறிகொடுத்தது, தற்போது ஆர்யாவுடன் காதல் கிசுகிசு என சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் நயன்தாரா. இவ்வளுவு சர்ச்சைகள் பின் தொடர்ந்தும் கூட, நயன்தாராவிற்கு மார்க்கெட் உயர்ந்துகொண்டே தான் செல்கின்றது.

ராஜா ராணி, ஆரம்பம் என ஹிட் கொடுத்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் நயன்தாரா. பெரிய ஹீரோக்களுடன் மட்டும் நடிக்காமல் ‘அனாமிகா’ போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடிகின்றார். இதற்கு காரணம் பாலிவுட் நடிகை வித்யா  பாலனை முந்த வேண்டும் என்பதே. இதற்காக சிறிய ஹீரோக்களுடன் நடித்தாலும் பரவாயில்லை, என ஒப்புக்கொள்கின்றார். அப்படி ஒப்புக்கொண்ட படம் தான், அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கும் புதிய படம். இப்படம் திகில் நிறைந்த பேய் படமாம். இதில் முழுக்க முழுக்க நயன்தாராவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரமாம். இந்த படத்தில் ஒரு கைக்குழந்தைக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

தற்பொழுது நயன்தாரா இந்த படத்தில் கர்பிணிப்பெண்ணாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம் இளம் இயக்குனர் அஷ்வின் சரவணன் தானாம். கர்ப்பிணி பெண்ணாக நடிப்பதன் மூலம், ரசிகர்களின் அனுதாபம் அதிகமாக கிடைக்கும் என கூறி நயன்தாராவை கர்ப்பமாக்க முடிவு செய்துள்ளார். ஒரு புதிய இயக்குனர் படத்தில், நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும், கர்ப்பிணி பெண்ணாகவும் நடிக்க சம்மதித்துள்ளது திரை பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் வாசிக்க…

விஷால், கார்த்தியுடன் நடிக்கும் சூர்யா..!!

10:20 PM |
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி ஒரு படத்தில் இணைந்து நடிக்க திட்டமிட்டிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் தேவைப்பட்டால் இந்த படத்தில் நானும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தயார் என நடிகர் சூர்யா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதேபோல் ஜீவா, ஆர்யா, ஜெயம்ரவி ஆகியோரும் இதில் நடிக்க ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

”விஷாலுக்கு பொண்ணு கெடைக்கலைன்னா நானும் விஷாலும், கல்யாணம் பண்ணிப்போம்” - ஆர்யா..!!

12:53 AM |
திருச்சி டைகர்ஸ் (சிவகார்த்திகேயன்), சென்னை சிங்கம்ஸ் (சூர்யா), ராம்நாட் ரைனோஸ் (விஜய் சேதுபதி), கோவை கிங்க்ஸ் (கார்த்தி), சேலம் சீட்டாஸ் (ஆர்யா), மதுரை காளைஸ் (விஷால்), தஞ்சை வாரியர்ஸ் (ஜீவா), நெல்லை டிராகன்ஸ் (ஜெயம் ரவி) ஆகிய எட்டு அணிகள் பங்குபெற்றன. குலுக்கல் முறையில் எதிரணிகள் தேர்வு செய்யப்பட்டு லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டது.

முதல்போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ், சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணியை வென்றது. அதன்பின், விஜய் சேதுபதியின் ராம்நாட் ரைனோஸ், கார்த்தியின் கோவை கிங்ஸ் அணியை வென்றது. ஆர்யாவின் சேலம் சீட்டாஸ், விஷாலின் மதுரை காளைஸ் அணியை வென்றது. ஜீவாவின் தஞ்சை  வாரியர்ஸ் அணி, ஜெயம் ரவி நெல்லை டிராகன்ஸ் அணியை வென்றது.

அரையிறுதிப் போட்டியில், சேலம் சீட்டாஸை, சென்னை சிங்கம் வீழ்த்தியது. ராம்நாட் ரைனோஸை, தஞ்சை வாரியர்ஸ் அணி வென்றது.

இறுதிப் போட்டியில் ஜீவாவின், தஞ்சை வாரியர்ஸ் 6 ஓவர்களில் 83/2 ஓட்டங்கள் எடுக்க, சென்னை சிங்கம்ஸ் -  விக்ராந்த் (7 பந்தில் 20 ஓட்டங்கள்), உதயா (12 பந்தில் 24 ஓட்டங்கள்) ஆகியோரின் அதிரடியில் 5வது ஓவரில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

எல்.பி.டபிள்யூ இல்லை, நோ பால், வைடுக்கு இரண்டு ரன்கள், ஒரு ஆட்டக்காரர் 20 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தால் அவர் வெளியேறி அடுத்த ஆட்டக்காரர் விளையாடவேண்டும் என்பது போன்று குறைந்த ஓவர் கிரிக்கெட்டுக்காக, விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.

ஏனோதானோவென்று ஆட்டம் இருக்கும் என்று நினைத்தவர்களுக்கு கொஞ்சம் இன்ப அதிர்ச்சிதான்.  சிலரின் பேட்டிங், பவுலிங் எல்லாம் ப்ரொஃபஷனல் லெவலில் இருந்தது. ஒருமாதிரி சீரியஸான மனோபாவத்தில் ஆடினாலும், தோற்றபோதும் சிரிப்புக்கோ, கைகுலுக்கல்களுக்கோ குறைவிருக்கவில்லை. விஷால் மட்டும் கொஞ்சம் உர்ர்ரென்றிருந்தார். நிகழ்ச்சி நல்லபடியாக முடியவேண்டுமென்ற டென்ஷனாக இருக்கலாம்.

வந்திருந்த ஸ்டார்களை வரவேற்பதிலிருந்து, இளைஞர்களை உற்சாகப்படுத்துவது வரை எல்லாவற்றையும் அழகாக கையாண்டார் நடிகர் சங்கத் தலைவர் நாசர்.

கமல் வந்த சிலநிமிடங்களில் ரஜினி வந்ததும், மகிழ்ந்து போயினர் அனைத்து நடிகர்களும். ரஜினி, கமலுக்கு அனைத்து அணியின் கேப்டன்களும் தங்கள் அணி வீரர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.

நாட்டுப்புற கலைகளான கரகாட்டம் தப்பாட்டம் தவில் போன்றவை எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு கொதிக்கும் வெயிலில் கலைஞர்கள் இவற்றை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.

ரஜினி, கமல், பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா, வெங்கடேஷ், அம்பரீஷ், மம்முட்டி, மோகன் பாபு, சிவராஜ்குமார், சுதீப் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய முன்னணி நடிகர்களும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

’ஆடலும் பாடலும் போட்டே ஆகணும்’ என்ற சிவகார்த்திகேயனின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீகாந்த் தேவாவின் ஆர்கெஸ்ட்ரா சிறிது நேரம் நடைபெற்றது.

ஐபிஎல்லின் போது, சென்னை அணி சார்பாக பங்குபெற்றதைப் போலவே, டிரம்ஸ் சிவமணி போட்டிகளின்போது தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.  டிரம்ஸ் சிவமணியுடன், கமலும் இணைந்து சிறிது நேரம் டிரம்ஸ் இசைத்தார்.லீக் ஆட்டங்கள் முடிந்த இடைவெளியில், மம்முட்டி, கமல், வெங்கடேஷ், விக்ரம், சுதீப் உள்ளிட்டோர் நாட்டுப்புறக் கலைஞர்களுடன் இணைந்து பறை அடித்து மகிழ்ந்தனர். அதிலும் ‘பர்த்டே பாய்’ விக்ரம் வேற வெலவில் கலக்கினார்!

பாலகிருஷ்ணா, வெயில்தாங்காமல் சட்டையைக் கழட்டி முண்டா பனியனோடு செம கேஷுவலாக இருந்தார். அவர் ஸ்டைலிலேயே, ‘சென்னை என் ஊரு’ என்று பெருமைப்பட்டுக் கொண்டார். சிவராஜ்குமாரும், ‘நான் பொறந்தது, படிச்சதெல்லாம் இங்கதானே. விஷால், கார்த்தி கூப்டப்ப, ‘என் ஊருக்கு நான் வராமயா?’ன்னுதான் சொன்னேன்’ என்றார்.

சிவராஜ்குமார் ஒன்றிரண்டு முறை ‘சிவகார்த்திகேயனை ரொம்ப பிடிக்கும்’ என்றார்.

சத்யராஜ், ‘பல பேருக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது. எனக்கு கிரிக்கெட் பார்க்கவே தெரியாது’ எனக் கூறி சிரிப்புமூட்டினார்.

சரத்குமார், ராதாரவி, விஜய், அஜித் ஆகியோர் வரவில்லை. ஆனால் சரத்குமார் மகள் வரலட்சுமி இறுதிவரை இருந்தார். அதேபோல, நடிகர்சஙகத் தேர்தலில் சரத்குமார் அணியில் இருந்த விஜயகுமாரும் வந்திருந்தார்.
 
சேலம் சீட்டாஸ் சார்பில் விளையாடிய கார்த்திக் இளம் நடிகர்களுக்கும் டஃப் போட்டி கொடுத்தார். நேர்கோட்டில் ஸ்லோ பால் வீசி, மிரளவைத்தார். கடும்வெயிலிலும் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார். ’அவர் அப்பவே இந்த மாதிரி கிரிக்கெட்லாம் விளையாடிருக்கார்’ என்றார் நடிகர் சுரேஷ்.

விக்ரமின் பிறந்தநாள் என்பதால் சர்ப்ரைஸாக பெரிய சைஸ் கேக் வரவழைக்கப்பட்டு மைதானத்திலேயே கொண்டாடப்பட்டது.

சேலம் சீட்டாஸின் ஆர்யா, நிகழ்ச்சி முழுவதுமே செம ரகளையாகத் திரிந்தார்.  விஷாலை கலாய்த்துக் கொண்டே இருந்தார் ‘எப்போ கல்யாணம் ஆர்யா?’ என்று வரலட்சுமி கேட்டதற்கு ‘நடிகர் சங்கக் கட்டடத்தில மொதல்ல அண்ணன் விஷாலுக்கு கல்யாணம். அடுத்ததா நான் பண்ணிப்பேன். அப்டி அவனுக்கு பொண்ணு கெடைக்கலைன்னா, நாங்க ரெண்டு பேரும் பண்ணிப்போம்’ என்று கலாய்த்தார்.  லீகில், விஷால் அணியை வென்றதும், ‘புரட்சித்தளபதி விஷாலைப் போட்டுத் தள்ளீட்டோம்’ என்றார்.

நடிகர் சங்கத்துக்கும், சங்கத்தின் மூலம் வேறு சிலருக்கும் என சில நல்ல காரியங்கள் அரங்கேறின. நிகழ்ச்சியின் ஆரம்பமாக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நடிகர் சங்கம் சார்பாக ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டக் குழந்தைகளுக்கு வழங்கினர். அதே சமயம் சன் டிவி நடிகர் சங்கத்துக்கு 1.75 கோடிக்கு காசோலையும், சங்கத்தின் அறக்கட்டளைக்கு 7.25 கோடிக்கான காசோலையும் என மொத்தம் ஒன்பது கோடியை வழங்கினர்.

மேலும் ஸ்பான்சர்களின் பணங்களும் சங்கத்துக்கு வழங்கப்பட்டது.  ஆட்டநாயகன் விருதை வாங்கிய விக்ராந்த், அதற்காக தனக்கு அளிக்கப்பட்ட புது காரை நடிகர் சங்கத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதே போல இறுதியில் விஷால் பேசுகையில், ‘நலிந்த நாடகக் கலைஞர்கள் உட்பட பலர் இதனால் பயன்பெறப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இங்கு வந்த அனைவருக்கும் நன்றி’ என்றார்.

முன்னதாக ரஜினி, கமலை பேட்டி கண்ட சுஹாசினி, ‘சினிமால சரிசமமா இருக்கற ரெண்டு பேர் ஒற்றுமையா இருக்கறதுக்கு நீங்க ரெண்டு பேரும் பெரிய உதாரணம்! எப்படி இப்படி?’ என்று கேட்க, ‘கமல்தான் முன்னோடி’ என்று மைக்கை கமலிடம் கொடுத்தார் ரஜினி.  கமல், ‘இது நாங்க மனதார தெரிஞ்சே எடுத்த முடிவு. ரெண்டு பேரோட தொழில் போட்டி ஒருபக்கம்... யாரார் என்னென்ன சொல்லுவாங்கன்னெல்லாமே எங்களுக்கு தெரியும். இது எதுவுமே எங்க நட்பை பாதிக்க கூடாதுன்னு இருந்தோம். நல்லவேளை சின்ன வயசுலயே இந்த முடிவ எடுத்தோம். இப்ப சொல்லிக்கப் பெருமையா இருக்கு’ என்றார்.
மேலும் வாசிக்க…

இதுதான் அஜித்தின் உண்மை முகம் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

10:32 PM |
நடிகர் சங்க கட்டட நிதிக்காக வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மிகப்பெரிய அளவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. இதில் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோர் கேப்டன்களாக களமிறங்குகிறார்கள்.

மேலும் இந்திய அளவில் இருந்து அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் போன்ற சூப்பர்ஸ்டார்கள் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். ரஜினி, கமல் ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களும் இதில் பங்கேற்கிறார்கள். அந்தவகையில் அஜித்துக்கும் இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார்களாம். ஆனால் அஜித், நடிகர் சங்கத்துக்காக எதுக்கு மக்களிடம் பணம் வசூலிக்க வேண்டும், நடிகர்களிடமே வசூலித்தால் போதும் என கூறியதாக ஒரு செய்தி வெளியானது.

நடிகர் சங்க உறுப்பினர்கள் மத்தியில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அஜித்தின் கருத்துக்கு எதிரான கடிதம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அவை இங்கே:

ஒரு பால் வியாபாரம் செய்பவர் பால் விற்பனை செய்து அதன் மூலம் அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். ஒரு தொலை தொடர்பு தகவல் சேவை மையம் POST PAID ,PREPAID, NET PACK, CALLER TUNE வசதிகளை அறிமுகம் செய்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.

அதே போல தான் நடிகர்கள் நடிகைகள் நலிந்த நாடக நடிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களின் வாழ்வு மேம்பட நட்சத்திர கிரிகெட் ஏற்பாடு செய்து அதன் மூலம் நலிந்த நாடக நடிகர்களின் வருமானத்திற்கு வழி செய்ய ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைக்கோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ஒன்று.

இதை நட்சத்திர கிரிகெட்டில் பங்குபெறும், ஆதரிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் தனது சொந்த செலவிலே கட்ட முடியும், ஆனால் நலிந்த நடிகர்களின் பங்கு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் நடிகர்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க உள்ளனர்.

ஒரு சில நடிகர்கள் தங்களது பண வசதியைக் காட்டவும், பொதுக் குழுவில் கலந்து கொள்ளாமலும், தனது ரசிகர்களைக் கொண்டு தனது திரை குடும்பத்தையே விட்டுகொடுத்து அவர்கள் சுய விளம்பரம் செய்கிறார்கள். கலைத் துறை சார்ந்த எந்த ஒரு விழாக்களையும் முதலில் புறக்கணித்து வருபவர்களும் அவர்களே. நட்சத்திர கிரிக்கெட்டால் மக்களின் பணம் சுரண்டப் படுகிறது, நடிகர் சங்கம் பிச்சை எடுக்கிறது என்று தனது ரசிகர்களை தூண்டிவிட்டு விளம்பரம் செய்வதால் என்ன பயன்? நடிகர் நடிகைகள் பிச்சைக்காரர்கள் அல்ல. அவர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி நாடக நடிகர்கள் வாழ்வு முன்னேற அன்றைய தங்களது வருமானத்தை விட்டுவிட்டு நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனர். தனது ரசிகர்களுக்குக்கூட முக்கியத்துவம் தராத ஒரு சில நடிகர்களுக்கு, நாடக நடிகர்களின் முக்கியத்துவம் தெரிய வாய்ப்பு இல்லை. ஒரு சில நடிகர்களின் ரசிகர்கள் யார் எந்த நல்லது செய்தாலும் முதலில் அவர்களை கேலி செய்வதற்கு ஒதுக்கும் நேரத்தில் நலிந்த நாடக நடிகர்களின் வாழ்க்கை அறிய வேண்டும். தன்னால் செய்ய முடியாத நல்ல காரியங்களை நல்ல மனம் படைத்த சில நடிகர்கள் செய்யும் போது அவர்களை வாழ்த்த வேண்டாம்.

அவர்களை வருந்தச் செய்யாமல் இருந்தாலே போதும். பழங்காலத்தில் நாம் செய்யும் உதவி யாருக்கும் தெரியாதவாறு செய்யவேண்டும் என்றனர். ஆனால் இக்கால சூழ்நிலையில் நாம் செய்யும் உதவி அடுத்தவருக்கு தெரியவேண்டும்,

அப்போதுதான் அதை அறிந்து நான்கு பேர் மற்றவருக்கு உதவுவார்கள். இங்குள்ள அனைத்து நடிகர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்பதை அந்த நடிகர்கள் அறியவேண்டும். அந்த ரசிகர்களுக்கு பகுத்தறிவு, வேலை, நல்ல மனம் உள்ளதால் அவர்கள் அவர் வழியில் செல்கின்றனர்..

அவர்களுக்கு அடுத்தவர்களை குறை கூறவோ, பழி சொல்லவோ அவசியம் இல்லை. சில நடிகர்கள், நடிகர் சங்கக் கட்டிடம் நடிகர்களின் சொந்தச் செலவில் கட்டப்படவேண்டும் மக்களைச் சுரண்டக் கூடாது என்கின்றார்களே. அவர்கள் நடித்த படம் பார்க்க ரசிகர்கள் பணம் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிய பிறகுதானே திரையரங்கம் உள்ளே விடுகிறார்கள்.

அந்நேரம் அந்த நடிகர்கள் என் ரசிகர்களிடம், மக்களிடம் காசு வாங்காதீர் என்று அறிக்கை விட வேண்டியது தானே? அல்லது தங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்டப் படக்கூடாது என்று நினைத்தால் இலவசமாகப் படம் நடித்து திரையிட வேண்டியது தானே? இந்திய கிரிகெட் அணி விளையாட்டை காண நுழைவு கட்டணம் பெற்றுத் தான் செல்லவேண்டும்.

அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்டப் படுகிறது என்று குற்றம் சாற்றுவார்களா? தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்து தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறியமுடியும்? சினிமா என்பது ஒரு பொழுது போக்கு? அவர்கள் அவர்களது, திரைக் குடும்பத் தேவைகளைச் சரிசெய்ய அனைத்து நடிகர்களும் ஒன்றுகூடி நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனரே தவிர அவர்களது சொந்த செலவுக்கு அல்ல என்பதை அறியவேண்டும்.

விவாதம் செய்யும் நடிகர்கள் ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் முதலில் அவர்கள் அவர்களின் திரை குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ நாம் என்ன செய்தோம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.

இதில் எந்தவொரு இடத்திலும் அஜித் பெயரை அவர்கள் குறிப்பிடவில்லை. எனினும் இந்த கடிதம் அஜித் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த சிம்பு ஆகியோரை தாக்கியே எழுதப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் வாசிக்க…

ஸ்டார் கிரிக்கெட்: 8 அணிகளும் அவற்றின் கேப்டன்களும்..!!

11:24 PM |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஏப்ரல் 17ஆம் தேதி பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பிரபல நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ள இந்த போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு அதன் கேப்டன்களும் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் எந்த அணிக்கு யார் கேப்டன்? என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சென்னை சிங்கம்ஸ் அணிக்கு சூர்யாவும், மதுரை காலேஜ் அணிக்கு விஷால் அவர்களும், கோவை கிங்ஸ் அணிக்கு கார்த்தியும், நெல்லை டிராகன்ஸ் அணிக்கு ஜெயம் ரவியும், ராம்நாடு ரினோஸ் விஜய் சேதுபதியும், தஞ்சை வாரியர்ஸ் அணிக்கு ஜீவாவும், சேலம் சேட்டாஸ்  ஆர்யாவும், திருச்சி டைகர்ஸ் அணிக்கு சிவகார்த்திகேயனும் கேப்டன்களாக இருப்பார்கள். இவர்கள் தலைமையில் விளையாடும் வீர்ர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

மேற்கண்ட அணிகளின் அறிமுகவிழா நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த அணிகளை சீயான் விக்ரம் அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

சோழ மன்னர் கதையில் அஜித்: எழுத்தாளர் பாலகுமாரன் உறுதி..!!

11:47 PM |
அஜித்துக்காக பணியாற்றி வரும் கதை சோழ மன்னரைப் பற்றியது என்று எழுத்தாளர் பாலகுமாரன் தெரிவித்திருக்கிறார்.

'பில்லா', 'ஆரம்பம்' ஆகிய படங்களில் அஜித்தை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். அவருடைய இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் வெளியான 'யட்சன்' போதிய வரவேற்பைப் பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் விஷ்ணுவர்தன், எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார். இதனை இயக்குநர் விஷ்ணுவர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார்.

மேலும், இப்படத்தின் நாயகனாக அஜித் நடிக்கவிருப்பதாகவும் அனைத்தும் முடிவானவுடன் முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின.

"அஜித்குமாருக்காக கதை எழுதுவது உண்மைதான். ஆனால் தஞ்சை பெரியகோயில் பற்றிய கதையோ, ராஜராஜ சோழனைப் பற்றிய கதையோ அல்ல. ஆனால் ஒரு சோழ மன்னரைப் பற்றிய கதை என்பதை மட்டும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியும்" என்று இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் பணியாற்றுவது குறித்து எழுத்தாளர் பாலகுமாரன் தெரிவித்திருக்கிறார்
மேலும் வாசிக்க…

ரஜினி பட டைட்டிலை கைப்பற்றிய ஆர்யா..!!

7:54 AM |
நடிகர் ஆர்யா அடுத்ததாக மஞ்சப்பை இயக்குனர் ராகவன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஜீவாவின் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு தனிக்காட்டு ராஜா என பெயர் சூட்டியுள்ளனர்.

இதே பெயரில் 1982-ம் ஆண்டு ரஜினி, ஸ்ரீ தேவி நடிப்பில் ஒரு படம் வெளியாகி வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் முழுக்க முழுக்க தமிழகத்தை சுற்றியுள்ள காடுகளில் உருவாகிறது.
மேலும் வாசிக்க…

ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்த ஸ்ரீதிவ்யா..!!

11:45 PM |
ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள பெங்களுர் நாட்கள் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இதில் தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசி நடித்துள்ள நடிகை ஸ்ரீ திவ்யாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதனால் உணர்ச்சிவசப்பட்ட நடிகை ஸ்ரீதிவ்யா, தன்னை பாராட்டி வாழ்த்திய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இனி எல்லா படங்களுக்கும் சொந்தக்குரலில் டப்பிங் பேச முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

பெங்களூர் நாட்கள் விமர்சனம் - Bangalore Naatkal Review

1:19 AM |
மலையாளத்தில் நிவின்பாலி, துல்கர் சல்மான், ஃப்கத் ஃபாஸில், நஸ்ரியா, நித்யா மேனன் என நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து வெளியாகி ஹிட்டடித்த ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் ரீ மேக்தான் ‘பெங்களூர் நாட்கள்’

‘கம்பியூட்டர் இன்சினியாரவோணும் நீயி’ என்ற அம்மா சரண்யாவின் ஆசைக்கேற்ப இஞ்சினியராகும் பாபி சிம்ஹா. ரெண்டு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணிக்கலைன்னா உங்க பொண்ணு ஓடிப்போய்டுவா’ என ஜோசியர் சொல்லிவிட, திருமண ஏற்பாடு செய்யும் பெற்றோர் சொல்படி திருமணத்திற்கு தயாராகும் ஸ்ரீதிவ்யா.

பிரிந்துவிட்ட அப்பா, அம்மாவால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட, தனக்குப் பிடித்த ரசனையான வாழ்க்கையை வாழும் செல்ஃபி ப்ரியர் - கம் - ரேஸ் பைக் மெக்கானிக் ஆர்யா. மூவரும் கஸின்கள் என்றாலும் டிகிரி தோஸ்துகள், பாபி சிம்ஹாவுக்கு வேலையும், ஸ்ரீதிவ்யாவுக்கு மாப்பிளையும் பெங்களூரிலேயே கிடைத்துவிட ஆர்யா வேறு அங்கிருப்பதால் சேர்ந்து கொட்டமடிக்கலாமே என்ற அவர்களின் சந்தோஷக் கும்மாளத்துடன் ஆரம்பிக்கிறது படம்.

ஸ்ரீதிவ்யாவை மணமுடிக்கும் ராணா, வேலை வேலை என்று அலையும் ரிசர்வ்ட் ஆசாமியாக இருக்க, வருத்தமடைகிறார் அவர். கிராமத்துப் பெயர் கொண்ட, ஆனால் கொஞ்சம் மாடர்னான, அழகான காதலியாக கிடைக்க வேண்டுமென்ற கவலையில் இருக்கும் பாபி சிம்ஹாவிற்கு, லட்டு போல ஏர் ஹோஸ்டஸ் ராய் லட்சுமி கிடைக்கிறார். நான் இப்படித்தான் என ஜாலி லைஃபில் வாழும் ஆர்யாவுக்கோ, ரேடியோ ஜாக்கி, பார்வதியின் குரலே எனர்ஜி பூஸ்டர்.

ராணா அலுவல் காரணமாக வெளிநாடு போய்விட, இவர்கள் மூவரும்  சந்திப்பதே ஸ்ரீதிவ்யாவுக்கு ரிலாக்ஸாக இருக்கிறது. ராணா இருக்கும்போது வீட்டுக்குச் சென்றாலும், இவர்களைப் பார்த்தாலே சைலன்ஸாகிறார் ராணா. அதுவும் பாபி சிம்ஹா ராணாவை அண்ணா என அழைக்க, ‘என்னடி அண்ணன்கறான்? அப்ப நீ யாரு அம்மு?’என ஸ்ரீதிவ்யாவிடம் கிண்டலடிக்கும் ஆர்யாவைக் கண்டாலே பார்வை மாறுகிறது ராணாவுக்கு.

அடுத்ததாக, அதிர்ச்சி வெர்ஷன்கள். எப்போதும் தன் அறையைப் பூட்டி வைத்திருக்கும் ராணா, ஒருநாள் சாவியை வைத்துவிட்டுச் சென்றுவிட, அந்த அறைக்குள் சென்று பார்க்கும் ஸ்ரீதிவ்யாவிற்கு ஓர் அதிர்ச்சி. தன் ப்ரிய ஆர் ஜே, பார்வதியை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுக்க நினைக்கிற ஆர்யாவிற்கு ஓர் அதிர்ச்சி. சைட்டடித்த ராய் லட்சுமி, பால்கனியில் அமர்ந்து ஹெட் மசாஜ் செய்துவிடுமளவிற்கு க்ளோஸானாலும், பாபி சிம்ஹாவிற்கும் - ராய் லட்சுமி வீட்டில் ஓர் அதிர்ச்சி.

அந்த அதிர்ச்சிகள் என்ன, மூவரும் அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள், முடிவில் என்ன ஆனது என்பதையெல்லாம்... ஆ. , அஸ்கு புஸ்கு... என்னைக்கு நாங்க கதை சொல்லிருக்கோம்.. இந்தப் பழைய பாட்டு புக்லலாம் போடுவாங்களே.. ஆங்.. அதேதான்.. வெள்ளித்திரையில் காண்க!

படிய வாரிய தலையுடன், தயக்கமாய் ஆரம்பித்து அடுக்குமொழி ஆங்கிலத்தில் இண்டர்வ்யூவில் அசத்தும் பாபிசிம்ஹா நடிப்பில் அசரடிக்கிறார். ‘போடா போடா எனக்கென்ன’ கேரக்டரை கேஷுவலாகவே செய்திருக்கிறார், ஆர்யா. இவர்களிடையே மாட்டிக் கொண்டு ஸ்கோர் செய்யாமல் அல்லது செய்ய முடியாமல் தவிக்கிறார் ஸ்ரீதிவ்யா. ராணா தியேட்டரில் வரும் சீனிலெல்லாம் பெண் ரசிகைகளுக்கு கண்களில் ஆட்டோமேடிக்காக ஆர்ட்டின் சிம்பல் மின்னுகிறது.

அதேபோல க்ளைமாக்ஸில் ராணா காரை எடுக்கும்போது, ஸ்லோவா ஓட்டுவாரே என்று மூவரும் தயங்க, டாப் கியரில் அவர் பறக்கையில் தியேட்டரில் க்ளாப்ஸ் மழை. பார்வதி, ராய் லட்சுமி, ப்ரகாஷ் ராஜ், சமந்தா என அனைவருமே தங்களுக்கு ஏற்ற பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருந்தாலும் சரண்யா பொன்வண்ணன் ஃப்ரீ ஹிட்டில் சிக்ஸரடித்திருக்கிறார்.

இடைவெளைக்குப் பிறகு தியேட்டரை கலகலப்பாக்க வைக்கிறது அவர் வரும் காட்சிகள் எல்லாம். கணவர் எம். எஸ். பாஸ்கர் வீட்டை விட்டுப் போய்விட, வேலையை விட்டு கோவைக்கே வரத்தயாராக இருப்பதாய் பாபி சிம்ஹா சொல்ல, அவரை தனியே அழைத்துப் போய் ‘டேய்.. நான் பெங்களூர் வர்றேண்டா.. இங்க எவ இருக்கறது..’ எனக் கறாராகச் சொல்லிவிட்டு சொந்தக்காரர்கள் மத்தியில் சோக சீன் போடுவதாகட்டும்,

பெங்களூர் அபார்ட்மெண்டில் தன் நண்பிகளுடன் சீட்டுக்கச்சேரியில் அமர்ந்துகொண்டு பசிக்கிறதென புலம்பும் பாபி சிம்ஹாவிடம், ‘காலைல இருந்து கார்டே செட் ஆகலடா.. இப்பதான் ரம்மி சிக்கீருக்கு. பீட்சா ஆர்டர் பண்ணிக்கோ’ என அதகளம் பண்ணுவதாகட்டும், ‘உன் அக்கா அமெரிக்கா வரச்சொல்றாடா’ பந்தா விட்டு விமான நிலையத்தில் கூலிங்க்ளாஸை இறக்கி டாடா செல்வதாகட்டும்.. சரண்யா - சக்ஸஸ்யா!

படத்தின் முதல்பாதி ஆமைவேகம். நடிப்பது தெரிய, நடித்திருக்கிறார்களோ என எண்ண வைக்கிறது ஆரம்பகாட்சிகள். இடைவேளை வரை மெதுவாக நகரும் படம், இரண்டாம்பாதியில் நம்மை என்கேஜ்டாக்குகிறது. அதுவும் ராணாவின் ஃப்ளாஷ்பேக் தெரிந்து, ஸ்ரீதிவ்யா எடுக்கும் முடிவு லைக்ஸ் அள்ளுகிறதென்றால், பார்வதி - ஆர்யாவின் ‘ஐ லவ் யூ’ சொல்லிக் கொள்ளாத ரொமாண்டிக் மீட்டிங்குகள் ரீஷேர் செய்யத் தூண்டுகிற ரகம்.

குகனின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. ஆனால் இசையில் ஏதோ மிஸ்ஸிங்.

இயக்குனராக பொம்மரில்லு பாஸ்கருக்கு தமிழில் முதல் படம். ஆனால் பாஸ், அதே கதை. அதே காட்சிகள் மலையாளத்தை அப்படியே பிட் அடித்திருக்க வேண்டாம். துல்கரின் கேரக்டரை Graffitiயாக மலையாளத்தில் சித்தரித்திருப்பார்கள். அதாவது நாடோடியாக செல்லுமிடமெல்லாம் சுவற்றில் அனுமதி இல்லாமல் சித்திரம் வரைந்துவிட்டு போலீஸிடமிருந்து ஓடும் பாத்திரம்.

இதில் ஆர்யா செல்ஃபி ப்ரியராக வருகிறார். ஆபத்தான இடங்களிலெல்லாம் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். அது ஒன்றுதான் வித்தியாசம் என்றாலும், துல்கரின் கேரக்டரை அந்தப் பாத்திரம் பதியவைக்கிற அளவு செல்ஃபி ப்ரியராக ஆர்யாவின் பாத்திரத்தில் அழுத்தம் இல்லை. இப்பொதெல்லாம் எல்லாருமே அப்படித்தானே இருக்கிறார்கள் என்பதாலும்கூட இருக்கலாம்.

ஒரு க்ராண்ட் எக்ஸிபிஷனை எதிர்பார்த்து போனால், வெறும் ப்ளாஸ்டிக் கடைகளும், சின்னச் சின்ன ராட்டினங்களும் இருக்கிற அரசாங்க கண்காட்சியாக இருக்குமே... அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும் அதிலொன்றும் குறையில்லைதான். நல்ல கதை, இடைவேளைக்குப் பின்னான வேகம் ஆகியவை படத்தை காப்பாற்றுகிறது. படத்தின் முதல்பாதி நீளத்தை மட்டும் கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால், இன்னும் பட பட பட்டாசாக வந்திருக்கும்.
மேலும் வாசிக்க…

ஆர்யாவை செல்லப்பெயர் வைத்து வாழ்த்திய த்ரிஷா..!!

1:39 AM |
நடிகர் ஆர்யாவும் த்ரிஷாவும் நீண்ட காலமாகவே நெருங்கிய நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இன்று ஆர்யா நடித்துள்ள பெங்களூர் நாட்கள் வெளியாகியுள்ள நிலையில் அவரை நடிகை த்ரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் வித்தியாசமாக வாழ்த்தியுள்ளார்.

அவரது ட்வீட் இங்கே: ” குஞ்சுமணி ஆர்யாவுக்கு என் வாழ்த்துக்கள். 2016-ல் வெளியாகும் உன் முதல் படமான பெங்களூர் நாட்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார். இவர்கள் இருவரும் சர்வம் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் வாசிக்க…

சிபிராஜின் கன்னத்தில் ஓங்கி அறைந்த ஜீவா..!!

12:09 AM |
மார்க்கெட்டில் வேண்டுமானால் சிபிராஜின் லெவல் சின்னதாக இருக்கலாம். ஆனால் நட்பு வட்டாரத்தில் அவர் எல்லாருக்கும் ஸ்பெஷலானவர். ஆர்யா, ஜீவா, விஷால், ஜெயம்ரவி கூட்டணியில் சிபிராஜுக்கும் ஜித்தன் ரமேஷுக்கும் தனி நாற்காலி போட்டு அமர வைத்திருக்கிறது அந்த தோழர்ஸ் மனசு! இந்த நிலையில்தான் நட்புக்கு இலக்கணமாக இருந்த ஜீவாவும் சிபிராஜும் கைகலப்பில் இறங்கி கன்னத்தை பழுக்க வைத்துக் கொண்டார்களாம். இது குறித்த தகவல்கள் வருமாறு-

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வரும் படம் ‘போக்கிரி ராஜா’. இதில் ஜீவாவுக்கும் ஹன்சிகாவுக்குமான காதலை புகுந்து கெடுக்கும் வாலிபரின் கேரக்டரில் நடித்திருக்கிறார் சிபிராஜ். இந்த கதையை அவர் ஜீவாவிடம் சொல்லி கால்ஷீட் வாங்கிய பின், சிபிராஜை சந்தித்து கதையை சொன்னாராம். ஆனால் அப்போது ஜீவாவின் கேரக்டரை பற்றி மூச்சு விடாமல் சிபிராஜின் சீன்களை மட்டும் சொல்லியிருக்கிறார். “எனக்கு இந்த சீன்கள் ஓ.கே. அவனுக்கு?” என்று கேட்டாராம் சிபிராஜ். அதற்கப்புறம் இவர் ஜீவாவின் ரோலை பற்றி விவரிக்க, உடனே ஜீவாவுக்கு போன் போட்டு, “மச்சி சூப்பர்டா” என்றாராம் சிபி.

அப்படியொரு நட்பிலிருந்த இருவருக்கும் நடுவில்தான் ஷுட்டிங் ஸ்பாட்டில் கைகலப்பு. கதைப்படி ஒரு பைட் சீன். சிபிராஜ் ஜீவாவை அடிக்க வேண்டும். அவர் அடித்து இவரை கீழே தள்ள, அதில் ஒரு சுரத்தும் இல்லையே என்று பீல் பண்ணினாராம் ராம்பிரகாஷ் ராயப்பா. இன்னும் நல்லா அடிங்க சிபி. நீங்க அடிக்கிற அடியில் அவர் நிஜமாகவே போய் தூர விழணும் என்று கேட்க, அதற்கப்புறம் தாமதிக்கவில்லை சிபி. ஓங்கி ஒரே எத்து. சுவர் ஓரமாக போய் விழுந்தாராம் ஜீவா. அதற்கப்புறம் சமாளித்து எழுந்து வந்தவர், வந்த வேகத்தில் சிபிராஜின் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட, யூனிட்டே திகைப்பில் ஆழ்ந்ததாம்.

சீன்ல இப்படியெல்லாம் இல்லையே என்று குழம்பிப் போன ராம்பிரகாஷ் ராயப்பா, இருவரையும் கவலையோடு பார்க்க, அன்று போடப்பட்டதாம் நட்புக்கு முழுக்கு. இருவரும் இன்று வரை பேசிக் கொள்வதில்லையாம். இந்த அறை நிஜமாகவே ஷுட்டிங் ஸ்பாட்டில் தேவையான பைட்டுக்காக விழுந்ததா? அல்லது ஷுட்டிங்குக்கு வெளியே நடந்த வேறு ஏதேனும் பிரச்சனைக்காக விழுந்ததா? அறை கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் அது!
மேலும் வாசிக்க…

ஸ்ரீதிவ்யா இவ்வளவு பேசுவாரா? அசந்துபோன ஆர்யா..!!

12:59 AM |
பாஸ்கர் இயக்கத்தில் கோபி சுந்தர் இசையில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, ராய் லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ள பெங்களூர் நாட்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகை ஸ்ரீ திவ்யா படக்குழுவினர் அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். பின்னர் பேசவந்த ஆர்யா, ” இன்று ஒரு அதிசயம் நடந்துள்ளது. ஸ்ரீ திவ்யாவால் இவ்வளவு பேச முடியுமா என்பது எனக்கு இன்றுதான் தெரியவந்துள்ளது.

விழாவுக்குள் அவர் நுழைந்ததும் கோபி சுந்தர் யார் என்று பாபி சிம்ஹாவிடம் கேட்டார். பின்னர் மேடையேறி பேசியபோது கோபி சுந்தருடன் பல காலம் பழகியது போல் அவரை புகழ்ந்து தள்ளினார். அவர் இவ்வளவு நேரம் பேசியதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
மேலும் வாசிக்க…

இயக்குனர் அமீர் அதிரடி: சிம்பு, ராணா, ஆர்யா வைத்து புதிய படம்..!!

10:11 PM |
இயக்குனர் அமிர் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த ’ஆதிபகவான்’ படம் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை. எனவே, அடுத்த படம் ஏதும் இயக்காமல் சில மாதங்கள் ஓய்வில் எடுத்து இருந்தார். இந்த ஓய்வில் கிடைத்த நாட்களில் மூன்று கதைகளை எழுதி முடித்து விட்டாராம்.

தற்போது அந்த கதைகளில் பிரபல நடிகர்களில் ஒருவரான சிம்பு, ராணா, ஆர்யா என 3 நாயகர்களுடன் இணைந்து அடுத்தடுத்து படங்களை இயக்க உள்ளாராம்.
மேலும் வாசிக்க…

இஞ்சி இடுப்பழகி: விமர்சனம்..!!

9:25 PM |
நடிகர் : ஆர்யா
நடிகை :அனுஷ்கா
இயக்குனர் : பிரகாஷ் கோவெலமுடி
இசை : கீரவாணி
ஓளிப்பதிவு : நீரவ் ஷா


அப்பா இல்லாத அனுஷ்கா, அம்மா ஊர்வசியின் அரவணைப்பில் வளர்கிறார். இவர் குண்டாக இருப்பதால் வரன் அமையாமல் இருக்கிறது. இந்நிலையில் அனுஷ்காவை பெண் பார்க்க வருகிறார் ஆர்யா. இருவருக்குமே இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லாததால் சமாதானமாக பேசி பிரிகிறார்கள்.

அதன்பிறகு அனுஷ்கா ஆர்யாவை அடிக்கடி சந்திக்க நேருகிறது. இதனால் இருவருக்கும் நட்பு மலர்கிறது. இந்த நட்பு நாளடைவில் அனுஷ்காவிற்கு காதலாக மாறுகிறது. தன் காதலை ஆர்யாவிடம் சொல்ல வரும் நிலையில் ஆர்யா மற்றொரு பெண்ணை காதலிப்பது தெரிந்து அதிர்ச்சியாகிறார்.

குண்டாக இருப்பதால்தான் ஏதும் கைகூட வில்லை என்று வருந்தும் அனுஷ்கா, பிரகாஷ் ராஜ் நடத்தும் சைஸ் ஜீரோ மூலம் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்குகிறார். ஆனால் சைஸ் ஜீரோ மூலம் அனுஷ்காவின் தோழியின் உடல் பாதிக்கப்படுகிறது. இதனால், பிரகாஷ் ராஜூக்கு எதிராக போராடுகிறார். இந்த போராட்டத்திற்கு ஆர்யாவும் உதவுகிறார். நாளடைவில் ஆர்யாவிற்கு அனுஷ்கா மீது காதல் வருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் அனுஷ்காவை திருமணம் செய்ய முயற்சி செய்கிறார். இறுதியில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரகாஷ் ராஜூடனான போராட்டத்தில் யார் வென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆர்யாவிற்கு, அதிக வேலை இல்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் கெஸ்ட் ரோல் போல் வந்து சென்றிருக்கிறார்.

இப்படத்திற்காக உடல் எடையை ஏற்றி, குறைத்து மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார் அனுஷ்கா. குண்டான பெண்களின் உணர்வுகளை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் தெளிவான திரைக்கதை இல்லாததால் இப்படம் அஷ்காவின் உழைப்புக்கு ஏற்ற படம் இல்லை என்று எண்ணத்தோன்றுகிறது.

உடல் குறைப்பு என்ற விஷயத்தை மையமாக வைத்து வழக்கமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் கோவெலமுடி. சிறந்த கதாபாத்திரங்களை வைத்து சிறந்த பொழுது போக்கு படமாக இயக்க தவறவிட்டிருக்கிறார். சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாதது படத்தின் பின்னடைவு. தமிழில் படம் பார்த்தாலும் பல இடங்களில் டப்பிங் படம் பார்ப்பது போல்தான் உள்ளது. முதல் பாதி நன்றாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி பொறுமையை சோதித்து பார்க்கிறது. தெலுங்கின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. படத்தின் தலைப்பு கவர்ந்தளவிற்கு படம் கவரவில்லை.

கீரவாணியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். நீரவ் ஷா தன் ஒளிப்பதிவால் அனுஷ்காவை அழகாக காண்பித்திருக்கிறார். இவருடைய ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘இஞ்சி இடுப்பழகி’ சுமாரான அழகி.
மேலும் வாசிக்க…

அனுஷ்கா, ஆர்யா நடிப்பில் 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் ட்ரெய்லர்..!!

1:16 AM |


அனுஷ்கா, ஆர்யா நடிப்பில் 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் ட்ரெய்லர்..!!

Tags: இஞ்சி இடுப்பழகி  , இஞ்சி இடுப்பழகி விமர்சனம் ,இஞ்சி இடுப்பழகி ரிலீஸ் தேதி , Inji Idupazhagi  Review , Inji Idupazhagi  Movie Online ,Inji Idupazhagi  Movie Release Date , Inji Idupazhagi  Movie Download ,Inji Idupazhagi  Movie Online TamilGun , இஞ்சி இடுப்பழகி திரை விமர்சனம் , Inji Idupazhagi  Movie






மேலும் வாசிக்க…
2015 Thediko.com