அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் தெறி விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய், அழகிய தமிழ்மகன் இயக்குனர் பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ள விஜய்60 படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை மே மாதம் தொடங்கவிருக்கின்றனர்.
தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம். பொதுவாகவே விஜய்க்கு பொங்கல் பண்டிகையில் வெளிவரும் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.
"போக்கிரி", "நண்பன்", "காவலன்", "ஜில்லா" ஆகிய படங்கள் விஜய்க்கு பெரிய ஹிட் கொடுத்துள்ளன. அதன்படி, இந்த படத்தையும் பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
அட்லி
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
தெறி
,
போக்கிரி
,
விஜய்
,
விஜய்60