நான் உங்களுடன் படுக்கட்டுமா? பிரபல நடிகையிடம் கேட்ட ஐஸ்வர்யாராயின் கணவர்..!!

11:21 PM |
பிரபல பாலிவுட் நடிகை ஜீனத் அமனை பார்த்து நான் உங்களுடன் படுத்துக் கொள்ளவா என நடிகர் அபிஷேக் பச்சன் கேட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அதாங்க ஐஸ்வர்யா ராயின் கணவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தான் சிறுவனாக இருக்கும்போது நடந்த சம்பவம் பற்றி அவர் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,

எனக்கு 5 வயது இருக்கும்போது என் தந்தை அமிதாப் பச்சனுடன் படப்பிடிப்புக்கு சென்றேன். படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. அந்த படத்தில் ஜீனத் அமன் நடித்தார்.

அன்றைய தினம் படப்பிடிப்பு முடிந்த பிறகு இரவில் தூங்க ஜீனத் அமன் தனது அறைக்கு கிளம்பினார். அவரை பார்த்து நீங்கள் தனியாகவா தூங்கப் போகிறீர்கள் என்று கேட்டேன். அவரும் ஆமாம் என்றார்.

நான் உங்களுடன் வந்து தூங்கட்டுமா என்று கேட்டேன். அதற்கு அவர் இன்னும் கொஞ்சம் பெரியவனான பிறகு என்று சிரித்துக் கொண்டே சொன்னார் என்றார்.
மேலும் வாசிக்க…

பாகுபலி படப்பிடிப்பு தளத்திற்கு நம்மை அழைத்து செல்லும் 360° வீடியோ

11:01 PM |
மேலும் வாசிக்க…

டாப்ஸியை பின் தொடர்ந்த மர்ம நபர்..!!

2:31 AM |
தன்னைப் பின்தொடர்ந்து வீட்டுக்குள் புக முயன்ற நபரால் தான் அதிர்ச்சியடைந்ததாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கை விபரம் வருமாறு:

ஒரு நடிகையாக ரசிகர்களால் விரும்பப்படுவதை  நாங்கள் விரும்பக் கூடியவர்கள்தான். ஆனால் எங்களை சிறப்பு கவனத்துக்கு உரியவர் என்று உணரச் செய்வதற்கும், அச்சமூட்டுவதற்கும் சிறிய வேறுபாடுதான் உள்ளது.

அந்த வகையில் என்னுடைய  படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருக்கும் பாதுகாப்பு வளையத்தையும் மீறி  இந்த நபர் என்னை முதலில் சந்திக்க வந்த பொழுது நான் அதிர்ச்சியடைந்தேன்.  என்னைப்  பார்க்க வரும் ரசிகர்களையும், என்னுடைய நடிப்பை பாராட்டுபவர்களையும் நான் மதிக்கிறேன்.  அனால் என்னுடைய அந்தரங்கத்தையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த நபருடன் நான் நல்ல முறையில்தான் பேசிவந்தேன். ஆனால் என்னுடைய வீட்டுக்குள் அவர் நுழைய முயன்ற பொழுதுதான் நான் எச்சரிக்கை  அடைந்தேன்.

இது தொடர்பாக நான் காவல் துறையிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை.ஆனால் மீண்டுமொரு முறை அவர் இவ்வாறு நடந்து கொண்டால் அவரால் எனக்கு ஆபத்து என்று காவல்துறையிடம்ம் புகார் செய்ய வேண்டி வரும்.

இவ்வாறு டாப்ஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் வாசிக்க…

பாகுபலி படப்பிடிப்பில் நடிகை தமன்னா பறந்து போகையில் நடந்தது தற்போது வெளியானது..!!

1:34 AM |
மேலும் வாசிக்க…

நடுவீதியில் நயன்தாராவின் கவர்ச்சி ஆட்டம்..!!

1:40 AM |
பொதுவாக சினிமா என்றாலே மக்களின் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. அப்படியிருக்கையில் படப்பிடிப்பு என்றால் அந்த இடத்தில் கூட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது.

மக்கள் ஆர்வத்துடன் நடிகர், நடிகைகளை காண்பதற்கு என்றே நெரிசலில் சிக்கித் திணறுவார்கள். ஆனால் இந்த படப்பிடிப்பில் அப்படி எந்தவொரு அறிகுறியும் இல்லை என்றே கூறலாம்.

நடிகை நயன்தாரா படப்பிடிப்பு ஒன்றில் நடுவீதியில் ஆடிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாய் பரவி வருகிறது. ஆனால் இந்த படப்பிடிப்பு எந்த படம் என்ற தகவல் ஏதும் தெரியவில்லை. இருந்தாலும் நெரிசலில் சிக்காதவாறு அமர்ந்த இடத்தில் படப்பிடிப்பினை பார்ப்பதற்கு எத்தனை பேருக்கு கொடுத்து வைத்திருக்கும்?...
மேலும் வாசிக்க…

காயத்தை பொருட்படுத்தாது படப்பிடிப்பை முடித்த அஜித்..!!

12:37 AM |
'வேதாளம்' படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பின் போது, காலில் அடிப்பட்ட போதும் முழு படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்திருக்கிறார் அஜித்.

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார் 'சிறுத்தை' சிவா. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு அக்டோபர் 15ம் தேதி நடைபெற்றது. அஜித் நடனமாடும் சில காட்சிகளை படமாக்கினார்கள். அப்போது அவருக்கு காலில் அடிபட்டது.

'ஆரம்பம்' படத்தின் போது காலில் அடிபட்டு, ப்ளேட் வைக்கப்பட்டது. அதே இடத்திலேயே மீண்டும் அடிபட்டதால் வலியால் துடித்தார் அஜித். படக்குழு உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்தது.

இறுதிநாள் படப்பிடிப்பு நிறுத்த வேண்டாம், ஒரு மணி நேரம் கழித்து ஆரம்பிக்கலாம் என்று கூறிவிட்டு ஒய்வெடுத்திருக்கிறார்.

அதற்கு பிறகு, மீண்டும் கால் வலியோடு முழுப் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டு கிளம்பியிருக்கிறார் அஜித்.

காலில் அடிபட்டதால், நேற்று 'வேதாளம்' படப்பிடிப்பில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

'வேதாளம்' படத்தின் முதல் பாதி டப்பிங் பணிகளை முடித்துவிட்டார் அஜித். இரண்டாம் பாதி டப்பிங் பணிகள் மட்டுமே பாக்கியிருக்கிறது. படம் தீபாவளிக்கு திரைக்கு வரவருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com