நடிகை என்ற பந்தா இன்றி பக்கத்து வீட்டு பெண் போல இருப்பதால் பார்ப்பவர்கள் எல்லாருக்கும் இவரை பிடிக்கிறது கும்கியில் துவங்கி சுந்தரபாண்டி குட்டிபுலி பாண்டிநாடு மஞ்சப்பை கொம்பன் என தொடர் வெற்றிகளால் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர்.
வரும் தீபாவளிக்கு ரிலீசாகும் வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருக்கும் லட்சுமி மேனனுடன் ஒரு சந்திப்பு
வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக எப்படி நடிக்க ஒத்துக்கிட்டீங்க?
படத்தின் கதை பிடித்திருந்தது எனக்கான கேரக்டர் ரொம்ப பிடித்ததால் ஒப்புக் கொண்டேன் படம் பார்த்துவிட்டு வெளியில வரும் போது தமிழ் என்ற என் கேரக்டர் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
அஜித்திடம் கற்றுக் கொண்டது
அமைதியாக இருப்பது செட்டில் ஒரு ஹலோ ஹாய் அவ்வளவு தான் என் வேலை முடிந்ததும் போய் உட்கார்ந்திடுவேன் அஜித்தும் தேவை இருந்தால் மட்டுமே பேசுவார் மற்றபடி அமைதியாய் இருப்பார்.
கொம்பன் மாதிரி கிராமத்து கதைகளில் நடிக்க பிடிக்கிறதா; இல்லை, சிட்டி கதைகளில் நடிக்க விருப்பமா?
கிராமத்து கதைகள் எனக்கு பொருத்தமாக இருப்பதில்லை ஆனால் அதிகமான வாய்ப்பு கிராமத்து படங்களில் தான் வருகிறது எனக்கு மாடர்ன் சிட்டி கதைகளில் நடிக்கவே ஆசை.
இப்ப பேய் பட சீசனா இருக்கே; அப்படி ஒரு கதையில் நடிக்க, உங்களுக்கு ஆசை இல்லையா?
இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு வரல வந்தால் அந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என நினைச்சிருக்கேன் எந்தப் படமாக இருந்தாலும் எனக்கான கேரக்டர் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன்.
நீங்க நடித்ததில் பிடித்த படம்
நான் சிகப்பு மனிதன்.
நடிகை பரதம் ஆடுவீர்கள் இப்போது, பாடகியாகவும் பல நல்ல படங்களில் பாடுகிறீர்களே?
நடிப்பதை விட பாட்டு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் இமான் தமன் இசையில் பாடியிருக்கேன் யார் பாட கூப்பிட்டாலும் கண்டிப்பாக பாடுவேன் பாடி முடித்து அதை முழுமையாக கேட்கும் போது உள்ள சுகமே தனி தான்.
உங்களை எந்த மாதிரியான காஸ்ட்யூம்ல ரசிகர்கள் பார்க்க விரும்புறாங்க?
எனக்கு தெரிஞ்சு அதிகம் பேர் பாவாடை தாவணி தான் நல்லா இருக்குன்னு சொல்றாங்க.
எவ்வளவு நாளைக்கு தான் கோடம்பாக்கத்தில் ஹோம்லி ரோலில் ஓட்ட முடியும் கிளாமர் பக்கம் மாற ஐடியாவே இல்லையா?
அப்படி எல்லாம் இல்லை கிளாமர் ரோலில் நடிப்பேன்.
நீச்சல் உடையில் நடிக்கச் சொன்னால் சம்மதிப்பீர்களா?
படத்தோட கதைக்கு அந்த மாதிரி டிரஸ் தேவை என்றால் கண்டிப்பாக நடிப்பேன் காட்சியோட முக்கியத்துவம் தெரிந்த பின் தவிர்க்க மாட்டேன்.
நீங்க நடித்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதே சந்தோஷமா இல்லை பதட்டமா?
பதட்டமே இல்லை என் கேரக்டரே எப்போதும் டென்ஷன் இல்லாமல் இருப்பது தான். படத்தை முடித்துக் கொடுத்து விட்டால் அவ்ளோ தான் அடுத்த படத்தை நோக்கி போய் விடுவேன் தீபாவளிக்கு, வேதாளம் படம் ரிலீஸ் ஆவது சந்தோஷமே.
உங்க பேஷன் டிசைன் படிப்பு என்ன ஆச்சு?
என் ஆசை அது தான் ஆனால் அதை படிக்க வேண்டும் என்றால் மும்பை செல்ல வேண்டும் எனக்கு இப்போது கொச்சியை விட்டு போக விருப்பம் இல்லை அதனால் இங்கேயே, பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறேன்.
ஷூட்டிங்கிற்காக சென்னை போன்ற இடங்களுக்கு வந்து போக சிரமமாக இல்லையா?
எனக்கு சென்னையில் செட்டில் ஆகிற எண்ணம் இல்லை முன்னாடி எல்லாம் அம்மா தான் கூட வருவாங்க இப்போதெல்லாம் நானே தனியா வந்திடுறேன் பாட்டி எப்போதாவது கூட வருவாங்க வந்து போறது எல்லாம் எனக்கு சிரமமாக இல்லை.
திருமணம் எப்போது காதல் திருமணமாக இருக்குமா?
அய்யோ கல்யாணமே வேணாம்ன்னு தோணுது திருமணம் ஆனாலும் அது லவ் மேரேஜா இருக்காது அப்பா அம்மா பார்த்து தான் செய்வாங்க.
அப்பா அம்மா யார் செல்லம் நீங்க?
ரெண்டு பேர் செல்லமும் கிடையாது அப்பா அம்மா இரண்டு பேர் மேலேயும் ரொம்ப அதிகமான அன்பு வைக்க மாட்டேன் அவங்க கூட நான் பேசுறதே கொஞ்சம் தான். என் அறைக்குள் போய்விட்டால் வெளியில வரவே மாட்டேன் எந்த ரகசியமும் என்னிடம் கிடையாது எல்லாத்தையும் வெளிப்படையாக சொல்லிடுவேன்.
படங்களை ரொம்ப குறைச்சிட்டீங்களே?
வர்ற எல்லா படங்களிலும் நடிக்க விருப்பம் இல்லை பிடித்த படங்களை செலக்ட் பண்ணியே நடிக்கிறேன் வேதாளத்தை அடுத்து ரவியுடன் மிருதன் படத்தில் நடிக்கிறேன் அவ்ளோ தான்.
Tags:
அஜித்
,
சினிமா
,
நீச்சல் உடையில் நடிக்க தயார் லட்சுமி மேனன்
,
லட்சுமி மேனன்