பாலியல் தொல்லை கொடுத்ததாக புதுமுக இயக்குனர் மீது நடிகை அதிதி முறைப்பாடு செய்துள்ளார். நெடுநல் வாடை என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் அதிதி.
இவர் கேரளாவை சேர்ந்தவர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் செல்வ கண்ணன் இயக்குகின்றார்.
பட்டதாரி என்ற இன்னொரு படத்திலும் அதிதி நாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் இயக்குனர் செல்வ கண்ணன் மீது அதிதி, நடிகர் சங்கத்திலும், பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் விளம்பர படமொன்றில் அதிதி நடித்துக்கொண்டு இருந்தபோது செல்வ கண்ணன் அடியாட்களுடன் சென்று அவரை தாக்க முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் நடிகை தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. இவை அனைத்துக்கும் இயக்குனரின் லீலையே காரணமென சுட்டிக்காட்டப்படுகின்றது.
Tags:
Cinema
,
அதிதி
,
இயக்குனர்
,
சினிமா
,
தற்கொலை
,
பிரபல நடிகை
,
லீலைகள்