தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற கோலி சோடா படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது.இந்த படத்தில் நடிக்க நடிகை பிரியங்கா ஜெயின் ஒப்பந்தமாகியுள்ளார். மும்பை நடிகையான இவர் சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இது குறித்து பிரியங்கா ஜெயின் கூறும்போது, இரண்டு வருடத்துக்கு முன்னர் ரங்கி தரங்கா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினேன். அதன் பின்னர் பல வாய்ப்புகள் வந்தது ஆனால், என்னிடம் பட வாய்ப்புக்கள் கேட்டு வந்த சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் என்னை பாலியல் உறவுக்கு அழைத்தார்கள்.
மும்பையில் இருந்து வந்ததால் என்னை தவறாக கணக்கு போட்டுவிட்டார்கள். அது போன்ற பட வாய்ப்புகள் தேவையில்லை என்று மறுத்துவிட்டேன். சினிமாவில் எல்லா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இப்படி இல்லை.
பல நல்ல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த தனக்கு கோலி சோடா வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
Tags:
Cinema
,
இயக்குனர்கள்
,
கோலி சோடா
,
சினிமா
,
தயாரிப்பாளர்கள்
,
பிரியங்கா ஜெயின்