செக்ஸ் உறவுக்கு அழைத்த தயாரிப்பாளரும், இயக்குனரும் - நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

12:38 AM |
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற கோலி சோடா படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது.இந்த படத்தில் நடிக்க நடிகை பிரியங்கா ஜெயின் ஒப்பந்தமாகியுள்ளார். மும்பை நடிகையான இவர் சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இது குறித்து பிரியங்கா ஜெயின் கூறும்போது, இரண்டு வருடத்துக்கு முன்னர் ரங்கி தரங்கா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினேன். அதன் பின்னர் பல வாய்ப்புகள் வந்தது ஆனால், என்னிடம் பட வாய்ப்புக்கள்  கேட்டு வந்த சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் என்னை பாலியல்  உறவுக்கு அழைத்தார்கள்.

மும்பையில் இருந்து வந்ததால் என்னை தவறாக கணக்கு போட்டுவிட்டார்கள். அது போன்ற பட வாய்ப்புகள் தேவையில்லை என்று மறுத்துவிட்டேன். சினிமாவில் எல்லா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இப்படி இல்லை.

 பல நல்ல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த தனக்கு கோலி சோடா வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
மேலும் வாசிக்க…

வயதான நடிகர்களுடன் நடிக்க புது கண்டிஷன் போடும் நடிகை..!!

12:39 AM |
வயதான நடிகர்களுடன் ஜோடி சேரவேண்டுமானால் தன்னுடைய கண்டிஷன்களுக்கு ஒத்துவந்தால் நடிக்க தயார் என்று முன்னணி நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோலிவுட், டோலிவுட் இரண்டிலும் கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் யாரென்று பார்த்தால் அவர் நயன நடிகை மட்டும்தான். இவர் தங்களுடைய படங்களில் நடிக்கிறார் என்றால் அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளத்தை கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.

 இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நயன்தாராவும் தனது கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார். தற்போது வயதான நடிகர்களுடன் நடிக்கவும் நயன்தாராவுக்கு நிறைய அழைப்புகள் வருகிறதாம். அப்படி வருபவர்களிடம் நயன நடிகை தற்போது புதிய கண்டிஷன்களை போட ஆரம்பித்திருக்கிறாராம்.

அதாவது, வயதான நடிகர்களுடன் நடிக்க வேண்டுமானால் தனக்கு சம்பளமாக ரூ.4 கோடி தரவேண்டும் என்பதுதான் அவருடைய கண்டிஷனாம். தயாரிப்பாளர்களும் இவருக்காக அந்த சம்பளத்தை கொடுக்க முன்வருகிறார்களாம். இதனால், நயன நடிகையின் காட்டில் தற்போது பயங்கரமான பண மழைதான் என்று சொல்லவேண்டும்.

மேலும் வாசிக்க…
2015 Thediko.com