சௌந்தர்யாவின் விவாகரத்து விவகாரம் - உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்! - தனுஸ் பதில்

12:46 AM |
சூப்பர்ஸ்டாருக்கு இரண்டு மகள்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவரின் இளைய மகளான சௌந்தர்யா விவகாரத்துசெய்யவுள்ளதாக தகவல் பரவியது. இதை அவரே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் சௌந்தர்யா உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என சௌந்தர்யாவின் அக்கா கணவரான தனுஷ் டிவிட் செய்துள்ளார்.

அதற்கு சௌந்தர்யாவும் அளவில்லாத உங்கள் ஆதரவுக்கு நன்றி மாமா என்று கூறியுள்ளார். மேலும் என் குடும்பம் தான் சிறந்தது என்ற ஹேஷ் டேக்கும் போட்டுள்ளார்.
மேலும் வாசிக்க…

சமரச விவகாரத்து கோரி அமலாபால் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!

1:51 AM |
இயக்குநர் விஜய் - நடிகை அமலாபால் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்கள். 2 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அமலா பால் திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்துவருவதால், இதுவிஷயமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அமலாபாலை விவகாரத்து செய்வது குறித்து இயக்குனர் விஜய்யும், அவரது தந்தை ஏ.எல்.அழகப்பனும் உறுதியாக கூறியிருந்தார்கள். இந்நிலையில், அமலாபால் இன்று சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இயக்குனர் விஜய்யுடன் சமரச விவாகரத்து செய்துதரக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நீதிபதி தீபிகா முன்னிலையில் விவாகரத்து செய்யப்போவதற்கான விருப்ப மனுவை நேரில் அளித்தார்

இவர்களது மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன்பிறகு, இவர்களது விவகாரத்து குறித்த விஷயங்கள் நீதிமன்றம் வாயிலாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனர் விஜய்-அமலாபால் விவகாரத்து செய்யப்போகும் செய்தி நீதிமன்றம் வரை சென்றிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com