நள்ளிரவில் ஹன்சிகா செய்த காரியம்: தீயாக பரவும் காணொளி..!!
ஹன்சிகா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். தமிழில் தற்போதைக்கு ஜெயம் ரவியுடன் இணைந்து போகன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு சமூக சேவைகளிலும் ஹன்சிகா ஈடுபட்டு வருகிறார். தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.அதோடு மட்டுமில்லாமல், ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், இன்று சமூக வலைத்தளங்களில் ஹன்சிகா, இரவு நேரத்தில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு போர்வை மற்றும் துணி மணிகளை கொடுப்பது போலவும். அவர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்குவது போலவும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
ஹன்சிகாவே நேரில் களத்தில் இறங்கி இந்த உதவிகளை செய்யும் காணொளி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காணொளியை பார்த்த பலரும் ஹன்சிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.