நள்ளிரவில் ஹன்சிகா செய்த காரியம்: தீயாக பரவும் காணொளி..!!

1:40 AM |
ஹன்சிகா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். தமிழில் தற்போதைக்கு ஜெயம் ரவியுடன் இணைந்து போகன்  படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு சமூக சேவைகளிலும் ஹன்சிகா ஈடுபட்டு வருகிறார். தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.அதோடு மட்டுமில்லாமல், ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், இன்று சமூக வலைத்தளங்களில் ஹன்சிகா, இரவு நேரத்தில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு போர்வை மற்றும் துணி மணிகளை கொடுப்பது போலவும். அவர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்குவது போலவும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

ஹன்சிகாவே நேரில் களத்தில் இறங்கி இந்த உதவிகளை செய்யும் காணொளி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காணொளியை பார்த்த பலரும் ஹன்சிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் வாசிக்க…

நட்சத்திர கிரிக்கெட், விஷால் பற்றி தவறான செய்தி... இணைய தளங்கள் மீது போலீசில் புகார்..!!

3:31 AM |
நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் விஷயத்தில் விஷால் பற்றி தவறான செய்திகளை வெளியிட்ட இணைய தளங்கள் மீது கமிஷனர் அலுவலகத்தின் இன்று புகார் தரப்பட்டுள்ளது.

நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு அஜீத் வராததால் அவர் பாடலை நிகழ்ச்சியில் போடக் கூடாது என விஷால் தடுத்ததாக ஒரு செய்தி. அடுத்து, நட்சத்திர கிரிக்கெட் தோற்றதற்கு மக்கள்தான் காரணம் என்று விஷால் பேட்டி அளித்ததாக இன்னொரு செய்தி.

இந்த இரு செய்திகளும் சில இணையதளங்களில் வெளியாகின. இரண்டுமே பொய்யானவை என விஷால் மறுத்த பிறகும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தன.

இந்த நிலையில் இதுகுறித்து விஷால் தலைமை ரசிகர் மன்றத்தின் தலைவர் ஜெயசீலன், செயலாளர் ஹரி ஆகியோர் சென்னை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், "தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் அவர்களைப் பற்றிய போலியான செய்தியை சில இணைய தளங்கள் வெளியிட்டுள்ளனர்.

அந்த செய்திகள் அனைத்தும் விஷாலை தவறாக சித்தரித்து எழுதப்பட்டுள்ளன.





இந்த செய்தி வெளியிட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு விஷால் ரசிகர் மன்றத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளனர். 

இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



மேலும் வாசிக்க…
2015 Thediko.com