நடிகை டாப்சி அளித்த பேட்டி வருமாறு:- ‘‘ரசிகர்களில் பல வகை இருக்கிறார்கள். சிலர் நடிகைகளுடன் ‘செல்பி’ எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். இன்னும் சிலர் ‘ஆட்டோகிராப்’ கேட்டு வாங்குவார்கள். மூன்றாவது ரக ரசிகர்கள் நடிகைகளை தொட்டுப்பார்க்கவும், அவர்களிடம் கைகுலுக்கவும் ஆசைப்படுவார்கள். இவர்களை தவிர இன்னொரு மோசமான வகை ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் போனில் அடிக்கடி பேசி தொந்தரவு கொடுப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு ரசிகரின் தொல்லையை நான் அனுபவித்தேன். எனது சகோதரியுடன் சேர்ந்து திருமணங்களை நடத்தி கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறேன். இதற்காக நிறைய பேர் எனக்கு போன் செய்கிறார்கள். அலுவலகத்துக்கும் பலர் இது சம்பந்தமாக போன் செய்து பேசுகிறார்கள்.
இதுமாதிரி எனக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் கொல்கத்தாவில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக்கொண்டார். தனது திருமணத்துக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுக்கும்படியும் அதற்கான கட்டணத்தை தந்து விடுவதாகவும் கூறினார். நான் சரி என்றேன்.
பிறகு அந்த நபர் இந்த வேலைக்கான ஒப்பந்தத்தை எனது நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்றால் நான் அவரது திருமணத்துக்கு சிறப்பு விருந்தினராக நேரில் வர வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். நான் மறுத்து விட்டேன். அதன் பிறகு அவருடைய போனை எடுக்கவில்லை.
விசாரித்தபோது அந்த நபருக்கு திருமணமே நிச்சயமாகவில்லை என்று தெரிந்தது. அதன்பிறகு வேறு நம்பரில் இருந்து குரலை மாற்றி பேசி, ‘‘நான் ஒரு தயாரிப்பாளர், உங்களை வைத்து படம் எடுக்க விரும்புகிறேன். டைரக்டரை அனுப்பி கதை சொல்ல வைக்கிறேன்’’ என்றார். அந்த ரசிகரின் போன் தொல்லையால் நிம்மதியில்லாமல் சில நாட்கள் கஷ்டப்பட்டேன்.’’ இவ்வாறு நடிகை டாப்சி கூறினார்.
Tags:
Cinema
,
ஆட்டோகிராப்
,
கொல்கத்தா
,
சினிமா
,
டாப்சி
,
ரசிகர்கள்