கவர்ச்சி காட்ட சொல்லி என் பெயரை கெடுத்து விட்டனர்..!!

11:59 PM |
தமிழில், ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்சி. வந்தான் வென்றான், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா-2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. தெலுங்கிலும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். இதனால் இந்தியில் வாய்ப்பு தேடி வந்திருக்கிறார். இங்கு 2 இந்தி படங்களில் அவர் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டு இருக்கிறார்.

டாப்சி அளித்த பேட்டி வருமாறு:- 

“நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் பட உலகம் பற்றி அதிகம் தெரிந்து இருக்கவில்லை. கதைகள் தேர்விலும் அக்கறை இல்லாமல் இருந்தேன். நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளில் நடித்தேன். நிறைய படங்களில் என்னை கவர்ச்சியாகவே நடிக்க வைத்தார்கள். தெலுங்கு படங்களில் அப்படித்தான் நான் வந்தேன். இதனால் என் மீதான மதிப்பு குறைந்தது. கவர்ச்சி வேடங்களில் நடிக்கவே வாய்ப்புகள் வந்தன.

எனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையாமல் போனது. ஆனால் இப்போது இந்தியில் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வந்துள்ளன. இதன் மூலம் எனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன்.

இந்தியில் சிறந்த நடிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் போட்டியை சமாளித்து நிலைத்து இருப்பது கஷ்டம். ஆனாலும் நான் எனக்குரிய இடத்தை பிடிக்க கஷ்டப்பட்டு போராடுகிறேன். இந்தியில் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கிய பிறகு மற்ற மொழி படங்களிலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன்.” இவ்வாறு டாப்சி கூறினார்.
மேலும் வாசிக்க…

தொல்லையால் அவதிப்பட்டேன் - டாப்சி அளித்த பேட்டி..!!

1:54 AM |
நடிகை டாப்சி அளித்த பேட்டி வருமாறு:- ‘‘ரசிகர்களில் பல வகை இருக்கிறார்கள். சிலர் நடிகைகளுடன் ‘செல்பி’ எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். இன்னும் சிலர் ‘ஆட்டோகிராப்’ கேட்டு வாங்குவார்கள். மூன்றாவது ரக ரசிகர்கள் நடிகைகளை தொட்டுப்பார்க்கவும், அவர்களிடம் கைகுலுக்கவும் ஆசைப்படுவார்கள். இவர்களை தவிர இன்னொரு மோசமான வகை ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் போனில் அடிக்கடி பேசி தொந்தரவு கொடுப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு ரசிகரின் தொல்லையை நான் அனுபவித்தேன். எனது சகோதரியுடன் சேர்ந்து திருமணங்களை நடத்தி கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறேன். இதற்காக நிறைய பேர் எனக்கு போன் செய்கிறார்கள். அலுவலகத்துக்கும் பலர் இது சம்பந்தமாக போன் செய்து பேசுகிறார்கள்.

இதுமாதிரி எனக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் கொல்கத்தாவில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக்கொண்டார். தனது திருமணத்துக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுக்கும்படியும் அதற்கான கட்டணத்தை தந்து விடுவதாகவும் கூறினார். நான் சரி என்றேன்.

பிறகு அந்த நபர் இந்த வேலைக்கான ஒப்பந்தத்தை எனது நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்றால் நான் அவரது திருமணத்துக்கு சிறப்பு விருந்தினராக நேரில் வர வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். நான் மறுத்து விட்டேன். அதன் பிறகு அவருடைய போனை எடுக்கவில்லை.

விசாரித்தபோது அந்த நபருக்கு திருமணமே நிச்சயமாகவில்லை என்று தெரிந்தது. அதன்பிறகு வேறு நம்பரில் இருந்து குரலை மாற்றி பேசி, ‘‘நான் ஒரு தயாரிப்பாளர், உங்களை வைத்து படம் எடுக்க விரும்புகிறேன். டைரக்டரை அனுப்பி கதை சொல்ல வைக்கிறேன்’’ என்றார். அந்த ரசிகரின் போன் தொல்லையால் நிம்மதியில்லாமல் சில நாட்கள் கஷ்டப்பட்டேன்.’’ இவ்வாறு நடிகை டாப்சி கூறினார்.
மேலும் வாசிக்க…

அனைவரையும் கவர்ந்த டாப்சி பன்னு வின் வித்தியாசமான உடை! வீடியோ..!!

7:45 AM |
மேலும் வாசிக்க…

நடிகை டாப்சியின் கையை பிடித்து இழுத்த சேலம் ரசிகை..போலீஸ் தடியடி

12:46 AM |
மாம்பழம் நகரமான சேலத்திற்கு வந்த வெள்ளாவி நடிகை டாப்சியை காண ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். கூட்டத்தில் நடிகை டாப்சியின் கையை பிடித்து  ரசிகை ஒருவர் இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் ஸ்வர்ணபுரியில், தனியார் நகை கடை திறப்பு விழாவுக்கு, ஆடுகளம் திரைப்பட நடிகை டாப்சி வந்திருந்தார். அவரை காண்பதற்காக, காலை முதலே, சாலையின் இருபுறமும் ரசிகர்கள் கூட்டம் வரிசை கட்டி நின்றது. கடை திறப்பு விழா முடித்து டாப்சி வெளியே வந்தபோது, அங்கு ரசிகர்களும், திருநங்கையர்களும் போட்டி போட்டு, டாப்சி அருகே நெருங்க முயன்றனர்.

கையை பிடித்த ரசிகை
கூட்டத்தில் ஒரு பெண், திடீரென டாப்சியின் கையை பிடித்து இழுத்தார். பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை தள்ளினர். அதையடுத்து, கூட்டத்தை கலைக்க போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.

நெரிசலில் சிக்கிய நடிகை
கூட்ட நெரிசலில் சிக்கிய டாப்சியை ஒருவழியாக போலீசார் மீட்டனர். அதன்பின், வேகமாக காரில் ஏறிய டாப்சி உடனடியாக தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றார்.

நடிகைகளை காண ஆவல்
சேலத்திற்கு வரும், முன்னணி நடிகைகளை பார்க்க, ஆளாய் பறக்கும் கூட்டமும், போலீசார் தடியடி நடத்தி கலைப்பதும் சகஜமாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தனியார் ஜவுளிக் கடை திறப்பு விழாவுக்கு, நடிகை நயன்தாரா வந்திருந்தார்.

போலீஸ் தடியடி
நயன்தாராவைப் பார்ப்பதற்காக, ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் நின்றது. இதனால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களும் காயம்பட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்தது நினைவிருக்கலாம்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com