தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் பிரபல திரையரங்கில் நடந்து முடிந்தது. இதில் படக்குழுவினர்கள் திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்துக்கொண்டவர்.
இந்த விழாவின் ஹைலேட்
மீனாவின் மகள் நைனிகா தான், இவர் தான் முதலில் மேடையேறினார். தொகுப்பாளர் ரம்யா, மீனாவிடம் விஜய்யுடன் ஆடிய நடனத்தை பற்றி கேட்டார்.
விஜய்யுடன் நான் 5 படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன், அப்போது என் கைநிறைய படங்கள் அதனால் தான் நடிக்க முடியவில்லை, அவரின் காமெடி சென்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார்.
இதை தொடர்ந்து இவரின் மகள் நைனிகாவிற்கு
அன்புள்ள ரஜினிகாந்த் காட்சியை மீனா சொல்லிக்கொடுக்க, நைனிகா
‘விஜய் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க’ என கேட்டார்.
அதற்கு உடனே விஜய், ரஜினி ஸ்டைலில் எழுந்து கை அசைக்க, ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்தது, மேலும், விழாவில் நைனிகாவிற்கு தான் அப்லாஸ் அள்ளியது.
Tags:
Cinema
,
அன்புள்ள ரஜினிகாந்த்
,
சினிமா
,
தெறி
,
நைனிகா
,
ரஜினி
,
விஜய்