யூ டியூப் ராஜாவான சிம்பு..!!

1:09 AM |
நடிகர் சிம்புவின் ரசிகர் பலம் நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் படங்கள் வெளிவராத காலங்களிலும் அவருக்கு பக்க பலமாக இருந்து அவரது ஸ்டார் அந்தஸ்துக்கு எந்தவித பிரச்சினையும் வராமல் பார்த்துக்கொண்டார்கள் அவரது ரசிகர்கள்.

அப்படி இருக்கும்போது தற்போது வாரம் ஒருமுறை அவர் படங்களின் பாடல்களோ அல்லது டிரைலர் காட்சிகளோ வெளியானால் சும்மாவா விடுவார்கள்.

அந்தவகையில் சிம்பு நடிப்பில் வெளியாகியிருக்கும் இது நம்ம ஆளு பட பாடல்கள், அச்சம் என்பது மடமையடா டிரைலர், தள்ளிப் போகாதே சிங்கிள் பாடல், தள்ளி போகாதே சிம்பு கவர் என பல வீடியோக்களை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டுகளித்து தற்போது அவரை யூ டியூப் ராஜாவாக்கி உள்ளனர்.
மேலும் வாசிக்க…

கூகுள் அலுவலகத்தில் கமல்ஹாசன்..!!

10:53 PM |
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றச் சென்ற கமல்ஹாசன் தொடர்ந்து அமெரிக்காவில் சில நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். பாஸ்டன் நகரில் உள்ள கூகுள் அலுவலகத்திற்கும் கமல்ஹாசன் சென்றுள்ளார். அங்குள்ள நிர்வாகிகளுடனும், பணியாளர்களுடனும் விவாதம் மற்றும் உரையாடலில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். கமலுடன் கூகுள் பணியாளர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர்.

அது பற்றிய புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கூகுள் அலுவலகப் பயணம் குறித்தும் கமல் கருத்து தெரிவித்துள்ளார். “கூகுளையே கூகுள் செய்து, சில கூகுளர்களுடனும் நிர்வகித்த போது,” என மகிழ்ச்சியுடன் கமல் பதிவிட்டிருக்கிறார். கமல்ஹாசன் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில்தான் டிவிட்டரில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் ‘உலகநாயகன் டியூப்’ என்ற யு டியூப் வீடியோ தளம் ஒன்றையும் வைத்திருக்கிறார்.

தொழில்நுட்பம் மாற மாற அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகர்களில் முதன்மையாக இருப்பவர் கமல்ஹாசன். ஆவிட் எடிட்டிங், டிஜிட்டல் சினிமாவில் இருந்து தற்போதைய டிவிட்டர் வரை தன் தனித்துவத்தில் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மேலும் வாசிக்க…

தெறி டீசர் குளறுபடி அம்பலம் விரக்தியில் விஜய் ரசிகர்கள்..!!

11:24 PM |
“தெறி” – பெயருக்கு ஏற்றாற்போல் டீசர் வெளியான இரண்டே நாட்களில் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என இந்தியாவின் அனைத்து டீசர்களின் சாதனைகளையும் ‘தெறி’க்கவிட்டுவிட்டது. ஆனால், அது அல்ல இப்போ விஷயம். டீசர் வெளியான நாளே காப்புரிமை பிரச்சனை காரணமாக தெறி டீசர் சில மணித்துளிகள் யூ-ட்யூபில் இருந்து நீக்கப்பட்டது.

இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி இது அஜித் ரசிகர்களின் வேலை தான் என்று சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டு கொண்டிருந்தனர். ஆனால், யூ-ட்யூப் நிர்வாகமோ தமிழ் டாக்கிஸ் என்ற நிறுவனம் இந்த காணொளி காட்சிக்கு காப்புரிமை கோரியதாகவும் அதனால் டீசர் தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.


தற்பொழுது கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படும் தகவலின் படி டீசரை தெறி படக்குழுவினரே முடக்கியதாக கூறப்படுகிறது. ஏனென்றால், டீசர் பல சாதனைகளை படைத்தும் இதனை பற்றி செய்தி வெளியிட இணைய ஊடகங்கள் தவிர எந்த முன்னணி பத்திரிகை தொலைக்காட்சி ஊடகங்களும் முன் வரவில்லை. இதனால், டீசரை சிறிது நேரம் முடக்கினால் இது பரபரப்பான செய்தியாகும் மற்றும் டீசரை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து ஏப்ரல் மாதம் வெளியாகும் படத்திற்கு இதுவும் ஒரு துணையாக அமையும் என்றே இப்படியான வேலைகளில் இறங்கியதாம் பட நிறுவனம். இதனால் விஜய் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், யூ-ட்யூப் நிறுவனத்திடம் முறையான ஆவணங்களை சமர்பிக்காமல் எந்த ஒரு வீடியோ-விற்கும் நாம் காப்புரிமை கோர முடியாது என்பது உலகறிந்த விஷயம். நிலைமை இப்படியிருக்க, தமிழ் டாக்கிஸ் என்ற நிருவனத்திற்க்கு படத்தயாரிப்பு நிறுவனத்தின் காப்புரிமை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எப்படி கிடைத்திருக்க முடியும் என்பன போன்ற கேள்விகளை முன் வைக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். பெரிய ஹீரோ, சிறந்த இயக்குனர் பிரபலமான குணசித்திர நடிகர் பட்டாளம் என இருந்தும்,

இப்படியான விளம்பரம் தேவைதானா? என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுகின்றனவாம். எது எப்படியோ, தெறி டீசர் தற்போதைய நிலவரப்படி 1,70,000+ லைக்குகளும் 40,000+ டிஸ்-லைக்குகளும் பெற்றுள்ளது.
மேலும் வாசிக்க…

யூடியூபில் (YouTube) இருந்து நீக்கப்பட்ட விஜய்யின் தெறி டீசர்! நடந்தது என்ன???

11:19 PM |
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தெறி படத்தின் டீஸர் நேற்றிரவு 12.00 மணிக்கு வெளியானது. வெளியான ஒரு மணிநேரத்திலேயே 2 லட்சம் பார்வையாளர்கள் டீஸரை பார்த்து ரசித்தனர்.

இந்த வீடியோவை தெறி பட தயாரிப்பாளர் தாணு தன்னுடைய யூடியூப் தளத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் தற்பொழுது டீஸர் காப்புரிமை (CopyRight) கேட்டு வீடியோவை யூடியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுபற்றி படத்தயாரிப்பாளர் தரப்பில் கேட்டபோது, “ யாரோ வேண்டுமென்றே காப்புரிமை கேட்டு இவ்வாறு செய்துவிட்டதாகவும், இன்னும் சிறிதுநேரத்தில் மீண்டும் வெளியாகும் என்று கூறுகின்றனர்.

இது பற்றி  இயக்குநர் அட்லியிடம் கேட்டபோது, வெளியிட்டதிலிருந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் டிரெய்லரை யாரோ சதி செய்து அகற்ரியிருக்கிறார்கள். அது யாரெனக் கண்டுபிடிக்கும் வேலைகள் நடக்கின்றன என்கிறார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com