இளைய தளபதி ரசிகர்கள் அனைவரும் தெறி படத்தின் டீசர் வெளியிட்டிற்காக காத்திருக்கின்றனர். இப்படத்தில் விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்துள்ளார்.
நைனிகா கதாபாத்திரம் குறித்து அட்லீ கூறுகையில் ‘இப்படத்தின் நைனிகாவிற்கு படம் முழுவதும் வரும் கதாபாத்திரம், நிறைய வசனங்கள் பேசுவார், கிட்டத்தட்ட தெய்வத்திருமகள் சாரா போல் மிகவும் வலுவான ரோல்.
இதில் முதலில் நைனிகாவை நடிக்க வைக்க மீனாவிடம் கேட்ட போது அவர் சின்ன பெண்ணாக இருக்கிறாள் என்று யோசித்தார்.
பின் நான் உங்களின் முதல் படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருந்தார், அதேபோல் உங்கள் குழந்தையின் முதல் படத்தில் இளைய தளபதி என்று சொன்னேன், அவரும் சிரித்துக்கொண்டே சம்மதித்துவிட்டார்’ என அட்லீ தெரிவித்துள்ளார்.
Tags:
Cinema
,
அட்லீ
,
சினிமா
,
தெறி
,
நைனிகா
,
ரஜினி
,
விஜய்