இந்திய பெண்ணின் தெய்வீக அழகில் மயங்கிய ஆப்பிள் நிறுவனம்..!!

12:10 AM |

தீபாவளி பண்டிகையின்போது யதார்த்தமாக தீப ஒளியுடன் எடுக்கப்பட்ட இந்திய பெண்ணின் புகைப்படத்தை ஆப்பிள் நிறுவனம் தனது குளோபல் விளம்பரங்களில் பயன்படுத்த தேர்வு செய்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்தவர் ஆஷிஷ். இவரது மனைவி ரைனா நானயா. கடந்த தீபாவளி பண்டிகையின்போது ஆஷிஷ் தனது மனைவி ரைனா சிகப்பு வர்ண புடவையில் கையில் தீபத்துடன் இருப்பது போல தனது ஐ போன் 6ல் புகைப்படங்களை எடுத்தார். அந்த புகைப்படம் மிக அழகாகவும் ரைனாவை தெய்வீக கலையுடன் ஒரு தேவதை போல காட்டியது.

ஆஷிஷ், பின்னர் அந்த புகைப்படத்தை ஐபோன் 6ல் எடுக்கப்பட்டதாக #ShotOniPhone6S என ஹேஸ்டேக் உருவாக்கி இணையதளங்களில் வெளியிட்டார். இதனை பார்த்த ஆப்பிள் நிறுவனம் அந்த புகைப்படத்தை தனது விளம்பர நோக்கத்துக்காக தேர்வு செய்திருக்கிறது. இந்த போட்டியில் உலகம் முழுக்க இருந்து மிகச்சிறந்த புகைப்பட கலைஞர்கள் 41 பேர் 53 புகைப்படங்களையும் அனுப்பி இருந்தனர். ஆனால் ரைனாவின் புகைப்படம் தேர்வாகியிருப்பதாக டைம் மேகசின் தெரிவித்துள்ளது.

தற்போது ரைனாவின் புகைப்படங்களை பயன்படுத்தி ஆப்பிள் நிறுவனம் விளம்பரங்களை வெளியிட ஆரம்பித்து விட்டது. இதனைத் தொடர்ந்து ரைனாவுக்கும் அவரது கணவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஏராளமானோர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் விரும்புகின்றனர்.

இது குறித்து ஆஷிஷ் தெரிவிக்கையில், ”தீபாவளிப் பண்டிகையின் போது ரைனா எனது தாயாருக்கு தீபங்களை ஏற்ற உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த நான், கையில் தட்டு நிறைய தீபங்ளுடன் ரைனா வந்து கொண்டிருந்ததை பார்த்தேன். தீப ஒளியில் அவரது முகம் தெய்வீக கலையுடன் பிரகாசித்தது. அதனை அப்படியே எனது ஐபோனில் புகைப்படமாக பதிவு செய்தேன். ஒரு கணவராக காதலுடன் பதிவு செய்த அந்த புகைப்படம் இப்போது உலகையே வென்று விட்டது ” என்றார்.

மேலும் வாசிக்க…

iPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பேசி கமெராவில் புதிய புரட்சி..!!

2:43 AM |
அப்பிள் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ள iPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பேசியில் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக இக் கைப்பேசியின் கமெரா இரண்டு வில்லைகளை (Dual Lens) அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதற்காக சீனா, ஜப்பான் மற்றும் தாய்வானின் Largan Technology நிறுவனம் என்பவற்றிலிருந்து இரட்டை வில்லை கமெராக்களைப் பெற்று அப்பிள் நிறுவனம் பரிசோதித்து வருகின்றது.

இதேவேளை தற்போது iPhone, iPad என்பவற்றில் பயன்படுத்தப்படும் கமெராக்களில் 60 சதவீதமானவை தாய்வானைச் சேர்ந்த Largan Technology நிறுவத்தினால் வடிவமைக்கப்பட்டவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர இக்கைப்பேசியில் வேகம் கூடிய Apple A10 வகை Processor உம் இணைக்கப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க…

அப்பிள் ஐபோன்களில் விரைவில் LiFi தொழில்நுட்பம் அறிமுகம்..!!

1:42 AM |
அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு வரும் ஐபோன்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணம் அவற்றின் ஆகச் சிறந்த தொழில்நுட்பமும், வருங்காலத்தை கணித்து புதிய வசதிகளை உள்ளடக்கியதாக அவை இருப்பதுதான்.

இதன் தொடர்ச்சியாக, வருங்காலத்தில் அறிமுகமாகவுள்ள ஐபோன்களில் அதிவேக இணைய இணைப்புத் தொழில்நுட்பமான லை-பை (LiFi) வசதியை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தொழில்நுட்பமானது iOS 9.1 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகமாகும் operating system களில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன், இத்தொழில்நுட்பத்தின் வாயிலாக வினாடிக்கு 224 ஜிகாபைட் வேகத்தில் தகவல்களைப் பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

சிக்கியது வீடியோ ஆதாரம் இணையத்தில் கசிந்த 'ஆப்பிள்' ரகசியம்..!!

1:51 AM |
சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்த ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த கருவி சார்ந்த வீடியோ ஆதாரம் ஒன்று ரகசியமாக கசிந்ததோடு இணையத்தில் வேகமாக பரவியும் வருகின்றது. அதன் படி ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வந்த புதிய கருவி குறித்து ரகசியமாய் கசிந்த சில தகவல்களை தொடர்ந்து பாருங்கள்.

இணையத்தில் கசிந்திருக்கும் வீடியோவானாது இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 4 இன்ச் திரை கொண்டிருக்கும் என்றும் எல்டிஈ, ஆப்பிள் பே, ஏ8 பிராசஸர், 1.2 ஜிபிக்கு நிகரான ரேம் மற்றும் 1624 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படலாம் என்பதை குறிக்கின்றது.

மேலும் இந்த கருவியில் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் ஒரே நிறம் மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. இதன் விலையை பொருத்த வரை இந்தியாவில் ரூ.37,139.82 வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது.

மேலும் வாசிக்க…

iOS 9.3 இயங்குதளத்தின் பீட்டா பதிப்பினை வெளியிட்டது அப்பிள்..!!

11:55 PM |
அப்பிள் நிறுவனமானது iOS 9.3 இயங்குதளத்தின் பீட்டா பதிப்பினை பரிசோதனைக்காக வெளியிட்டுள்ளது.

எனினும் இதனைப் பயன்படுத்துவதற்கு அப்பிளின் பப்ளிக் பீட்டா டெஸ்ட்டிங் புரோகிராமில்(Apple’s Public Beta testing program ) இணைவது அவசியமாகும், அல்லது பதிவு செய்யப்பட்ட மேம்பாட்டாளராக (Developer) ஆக இருத்தல் வேண்டும்.

இப்புதிய பதிப்பில் Night Shift Mode எனும் புதிய வசதி, WiFI Assist இற்கான புதிய வசதி என்பன உட்பட மேலும் சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இதன் அசல் பதிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற தகவலை அப்பிள் நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

Apple Found Guilty of Using University of Wisconsin Patent in Its Chips

2:19 AM |
Apple has been found guilty of using a technology, patented by the University of Wisconsin-Madison way back in 1998, in its chips without the proper permission — and it could cost it close $1 billion.

Reuters reports that Apple has been using technology that’s described in this patent to improve the efficiency of its A7, A8 and A8X processors. Those slabs of silicon are found in the iPhone 5s, 6 and 6 Plus, as well as a number of iPad models.

The Wisconsin Alumni Research Foundation filed a case against Apple in January of this year over the mis-use of the patent, and now a Madison, Wisconsin jury has deemed the claims to be reasonable — Apple used the technology without permission.

Now, the trial will move forward to determine the damages that the university is owed. However, the judge presiding over the case has suggested the figure could reach as much as $860 million.

That’s a lot for a University, though relatively less for Apple. Still, the folks at Cupertino may well be wary of the litigious academics:

last month, the university filed a similar complaint, accusing Apple of using the same technology in its A9 and A9X chips without a license. Looks like things could get rather expensive.
மேலும் வாசிக்க…

Here’s what an Apple drone Might look like

8:31 PM |
Many major tech companies are eyeing drones — Amazon, Google and even Facebook. It’s unclear at this point whether Apple wants in, too, but one designer has envisioned what the company’s version of a drone might look like if it ever launched one.


German designer Eric Huisman mocked up a sleek drone concept called the Apple Quadcopter, which has a minimalistic black-and-white design. It’s very, well, Apple.

In a series of photos posted to his website, which are stylized to look like Apple’s traditional promotional pictures, the company’s iconic logo sits in the middle of a slightly curved body, an element that Huisman says will support its many built-in cameras.

Similar to a typical quadcopter, the Apple drone has four rotors and four cameras that can shoot still and panoramic photos (up to 100MP). The concept, which was first spotted by CNET, also incorporates 4K video functionality and built-in image stabilization so pictures aren’t blurred. Footage could also be streamed in real time to sites like YouTube. Footage could also be streamed in real time to sites like YouTube.

The concept comes as drones in the tech industry are rising. In late 2013, Amazon founder and CEO Jeff Bezos announced a service called Amazon Prime Air, which would bring flying robot drones to our doorsteps as early as 2015. Amazon’s drones, which recently received approval from the FAA to begin testing under certain restrictions, aims to deliver products to customers at home or businesses in about 30 minutes.


Meanwhile, Google is getting closer to sending solar-powered drones into the sky in an attempt to bring web connectivity to some of the 4 billion people without Internet access worldwide. The drones will hover above specific regions and provide connectivity to the locations below. Facebook is also building drones and lasers to get more of the global population online.

Have something to add to this story? Share it in the comments.

மேலும் வாசிக்க…
2015 Thediko.com