சோலார் ஸ்டார் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டு ஒரு படத்தில் நாயகனாகவும் நடித்து அச்சுறுத்திய ராஜகுமாரன், அடுத்து இன்னொரு படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என்று சொல்லப்பட்டது.இந்த விஷயம் காதில் விழுந்த கையோடு தனது மறுப்பைத் தெரிவித்து, அந்தப் படத்துக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டுள்ளார் நடிகை சமந்தா.
இந்தப் படத்தை இயக்குபவர் விஜய் மில்டன். இவர் இதற்கு முன்பு இயக்கிய பத்து எண்றதுக்குள்ள படத்தில் நாயகியாக நடித்தவர்தான் சமந்தா.'10 எண்றதுக்குள்ள' படத்துக்கு முன்பாகவே, டி.ராஜேந்தரை நாயகனாக வைத்து ஒரு கதையை விஜய் மில்டன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. டி.ராஜேந்தர் நாயகனாக நடிக்கவிருந்த அப்படத்தில் தற்போது நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் ராஜகுமாரன்.
இப்படத்தில் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார்.'10 எண்றதுக்குள்ள' படத்தில் நாயகியாக நடித்த சமந்தா, இப்படத்தில் ராஜகுமாரனுக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகின. விஜய் மில்டன் கேட்டுக் கொண்டதால் இப்படத்தை சமந்தா ஒப்புக் கொண்டதாகவும் கூறினர்.இது குறித்து சமந்தாவிடம் கேட்ட போது, "அய்யய்யோ.. எனக்குத் தெரியவே தெரியாதுய. இப்படி ஒரு படத்தை நான் ஒப்புக் கொள்ளவே இல்லை" என்றார்.
இந்த மாதம் தொடங்கவிருக்கும் இந்தப் படத்தில் ராஜகுமாரன், பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
Tags:
10 எண்றதுக்குள்ள
,
Cinema
,
சமந்தா
,
சினிமா
,
பரத்
,
ராஜகுமாரன்
,
விஜய் மில்டன்