சினிமாவில் வெற்றியடைய திறமை உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அதிர்ஷ்டமும் வேண்டும் என்று சொல்வார்கள். இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ… நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு பொருந்தும்.
நடிகர் சரத்குமாரின் மகளாக இருந்தும் இன்னமும் அவரால் முதலிடத்தைப் பிடிக்க முடியவில்லை.வரலட்சுமி கதாநாயகியாக நடித்த முதல் படம் போடா போடி.
சிம்புவுக்கு ஜோடியாக அந்தப் படத்தில் நடித்தார்.வருடக்கணக்கில் முடங்கிக் கிடந்த போடா போடி படம் ஒருவழியாக திரைக்கு வந்தது. ஆனால் ஒன்றிரண்டு நாட்கள் கூட ஓடவில்லை.
அப்படத்தின் தோல்வி காரணமாக வரலட்சுமியின் அறிமுகம் புவானமாகிப்போனது.அதன் பிறகு விஷாலுக்கு ஜோடியாக மத கஜ ராஜா என்ற படத்தில் நடித்தார்.
சுந்தர்.சி. இயக்கிய இந்தப் படம் முடிவடைந்து ரிலீஸ் ஆகும் நேரத்தில் கடன் பிரச்சனை காரணமாக அப்படத்தின் தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்டார்.சில வருடங்கள் கழித்து மத கஜ ராஜா படத்தை ரிலீஸ் செய்ய விஷால் முயற்சி செய்தார். கடைசிவரை முடியவில்லை.இதனால் வரலட்சுமியின் வாழ்க்கை மறுபடி கேள்விக்குறியானது.
இந்நிலையில்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமானார்.பாலா படத்தில நடிக்கிறார் என்ற தெரிந்ததும் வரலட்சுமியை புக் பண்ண பல இயக்குநர்கள் தேடி வந்தனர்.
என் படம் முடியும் வரை எந்தப்படத்திலும் நடிக்கக் கூடாது என்று கட்டளையிட்டார் பாலா.அதனால் தேடி வந்த படங்களை நிராகரித்தார் வரலட்சுமி.
தாரை தப்பட்டை படத்தை தன் வாழ்க்கை என்று நினைத்த வரலட்சுமி, அப்படம் வெளியான பிறகு உச்ச நட்நத்திரமாகிவிடுவோம் என்ற கற்பனையில் மிதந்தார்.
தாரை தப்பட்டை படத்தின் தோல்வி அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. அதனால் கடும் மன உளைச்சலில் இருந்த வரலட்சுமிக்கு ஆறுதலாக ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.பிரசன்னா, அர்ஜூன் நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் வரலட்சுமி.
Tags:
Cinema
,
அர்ஜூன்
,
சினிமா
,
தாரை தப்பட்டை
,
பாலா
,
வரலட்சுமி