பாலா இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரகதி..!!

1:52 AM |
பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகனாக யுவனும், நாயகியாக பிரகதியும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

‘தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து தனது படத்தில் கவனம் செலுத்தி வந்தார் இயக்குநர் பாலா, வேல.ராமமூர்த்தி எழுதிய புத்தக்கத்திலிருந்து சிறுபகுதியை எடுத்து திரைக்கதையை அமைத்து படமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா உள்ளிட்டவர்களைக் கொண்டு இப்படம் தொடங்கவிருப்பதாக பாலா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார் இந்நிலையில், அப்படத்துக்கு முன்பாக முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டார் பாலா.

இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது, இறுதியில் படத்தின் நாயகனாக ‘சாட்டை’ படத்தில் நடித்த யுவன் நடிக்க உள்ளார், நாயகியாக பிரகதி குருபிரசாத் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘சுப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் பிரகதி, அவரை ‘பரதேசி’ படத்தின் மூலமாக பாடகராகவும் அறிமுகப்படுத்திய பாலா, தற்போது நாயகியாகவும் அறிமுகப்படுத்துகிறார்.
மேலும் வாசிக்க…

சேது படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார்? வெளிவந்த ரகசியம்..!!

11:39 PM |
விக்ரம் கேரியரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் சேது. பாலா இயக்குனராக அறிமுகமான படமும் இதுதான். ஆனால் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானது விக்ரம் இல்லையாம்.

அந்நாளில் கருத்தம்மா போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் விக்னேஷ். இவர் தான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவேண்டி இருந்ததாம். ஆனால் சில காரணங்களால் அது நிறைவேறாமல் போயுள்ளது.

இத்தகவலை பாலாவால் அறிமுகம் செய்யப்பட்ட மற்றொரு நடிகரான கருணாஸ் நேற்று நடந்த ‘அவன் அவள்’ இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

என்ன… ஒங்களுக்கு இதே வேலயா போச்சா? வரலட்சுமி எரிச்சல்..!!

10:47 PM |
சேது அபிதாவில் ஆரம்பித்து, பரதேசி வேதிகா வரைக்கும் பாலா படத்தில் ஹீரோயினாக நடித்தவர்களுக்கெல்லாம் என்ன வருமோ, அதுதான் வரலட்சுமிக்கும்! உள்ளதும் போச்சே நொள்ளக் கண்ணியாகி வெவ்வேறு லாங்குவேஜுக்கு போயாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று ஓடிவிடுவார்கள். ஆனால் அந்த கொடுப்பினையும் வரலட்சுமிக்கு இல்லை என்கிறது வரலாறு!

மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் இவர் நடிக்கிறார் என்பதையே பெரிய செய்தியாக்கி வருகிறார்கள் சிலர். ஆனால் திலிப், துல்கர் சல்மான் என்று ஆசைப்படுகிற மனசுக்கு அது எவ்வளவு கொடுமையான சித்ரவதை என்பது நமக்கெங்கே தெரியும்? போகட்டும்… இப்போதும் அதே கேரளாவிலிருந்துதான் ஒரு மூட்டை எரிச்சலை வரலட்சுமிக்கு பார்சலாக அனுப்பி வைத்திருக்கிறார்கள் சேட்டன்கள்.

என்னவாம்?

கேரள முதல்வர் உம்மான் சாண்டியின் உறக்கத்தை கெடுத்து, அங்குள்ள இன்னும் சில மந்திரிகளின் ராத் தூக்கத்துக்கு சங்கு ஊதி, ஏகப்பட்ட அட்ராசிட்டி பண்ணிவரும் சரிதா நாயர் கதை தெரிந்தால் மேற்கொண்டு இந்த செய்தியை படிக்கலாம். இந்த சரிதா நாயர்தான் மேற்படி மந்திரிகள் மீதும், சபலிஸ்டுகள் மீதும், பாலியல் குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்திருக்கிறார்.

சரிதா நாயரின் ஓங்குதாங்கான உடல் கட்டுக்கு சரியாக பொருந்தி வருபவர் வரலட்சுமிதான் என்பதை ‘தாரை தப்பட்டை’ பார்த்து உறுதி செய்து கொண்ட கேரள இயக்குனர் ஒருவர், “சரிதா நாயர் கதையை படமா எடுக்குறேன். நீங்கதான் அந்த கேரக்டர்ல நடிக்கணும்” என்கிறாராம். அவருக்கு வரலட்சுமி சொன்ன பதில்தான் இந்த செய்தியின் தலைப்பு.

பாலா படத்தில் நடிச்சா வாழ்க்கையையே புரட்டிப் போட்ருவாருன்னு சொன்னாங்களே, அது இதுதானா கேரளா காம்ரேட்ஸ்?
மேலும் வாசிக்க…

இளையராஜா விழாவுக்கு திரையுலகம் எதிர்ப்பு..!!

1:46 AM |
பாலா இயக்கிய தாரைதப்பட்டை இளையராஜாவின் ஆயிரமாவதுபடம் என்று அறிவித்தார்கள். அந்தப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவை ஆயிரம்படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கான பாராட்டுவிழாவாக நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

சென்னையை புரட்டிப்போட்ட மழைவெள்ளம் காரணமாக அது நடக்காமல் போனதாகச் சொல்லப்பட்டது. அதன்பின்னர், இளையராஜாமியூசிக்மேனேஜ்மெண்ட் நிறுவனமும் விஜய் தொலைக்காட்சியும் இணைந்து, ஆயிரம் படங்களைக் கடந்த இளையராஜாவுக்குப் பிரமாண்ட பாராட்டுவிழாவை நடத்துவதாக அறிவித்திருக்கின்றனர். இந்தவிழா பிப்ரவரி 27 ஆம் தேதி சென்னையில் நடக்கவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் திரையுலகம் சார்பில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இளையராஜாவைப் பாராட்டுவதற்கு திரையுலகம் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும்? இளையராஜாவைப் பாராட்டுவதை எதிர்க்கவில்லை, அந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி நடத்துவதைத்தான் எதிர்க்கிறார்களாம்.

விஜய்தொலைக்காட்சிக்கும் தயாரிப்பாளர்கள்சங்கத்துக்குமிடையே திரைப்படங்களின் தொலைக்காட்சி உரிமம் வாங்குவது தொடர்பாக, ஏற்கெனவே கருத்துவேறுபாடு இருக்கிறதாம். இதனால் இந்நிகழ்ச்சியை நடத்தும் உரிமையை விஜய் தொலைக்காட்சிக்குக் கொடுக்கக்கூடாது என்று திரையுலகம் சார்பில் இளையராஜாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.

இந்தவிசயம் தெரியாமல் அவர்களுக்கு நிகழ்ச்சி நடத்தும் அனுமதியைக் கொடுத்துவிட்ட இளையராஜா இப்போது என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாராம். ஓரிருநாளில் விழாவை விஜய் தொலைக்காட்சி நடத்துமா? நடத்தாதா? என்பது தெரிந்துவிடுமாம்.
மேலும் வாசிக்க…

அய்யோ பாவம்… வரலட்சுமிக்கு கிடைத்த ஆறுதல் பரிசு..!!

10:52 PM |
சினிமாவில் வெற்றியடைய திறமை உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அதிர்ஷ்டமும் வேண்டும் என்று சொல்வார்கள். இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ… நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு பொருந்தும்.

நடிகர் சரத்குமாரின் மகளாக இருந்தும் இன்னமும் அவரால் முதலிடத்தைப் பிடிக்க முடியவில்லை.வரலட்சுமி கதாநாயகியாக நடித்த முதல் படம் போடா போடி.

சிம்புவுக்கு ஜோடியாக அந்தப் படத்தில் நடித்தார்.வருடக்கணக்கில் முடங்கிக் கிடந்த போடா போடி படம் ஒருவழியாக திரைக்கு வந்தது. ஆனால் ஒன்றிரண்டு நாட்கள் கூட ஓடவில்லை.

அப்படத்தின் தோல்வி காரணமாக வரலட்சுமியின் அறிமுகம் புவானமாகிப்போனது.அதன் பிறகு விஷாலுக்கு ஜோடியாக மத கஜ ராஜா என்ற படத்தில் நடித்தார்.

சுந்தர்.சி. இயக்கிய இந்தப் படம் முடிவடைந்து ரிலீஸ் ஆகும் நேரத்தில் கடன் பிரச்சனை காரணமாக அப்படத்தின் தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்டார்.சில வருடங்கள் கழித்து மத கஜ ராஜா படத்தை ரிலீஸ் செய்ய விஷால் முயற்சி செய்தார். கடைசிவரை முடியவில்லை.இதனால் வரலட்சுமியின் வாழ்க்கை மறுபடி கேள்விக்குறியானது.

இந்நிலையில்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமானார்.பாலா படத்தில நடிக்கிறார் என்ற தெரிந்ததும் வரலட்சுமியை புக் பண்ண பல இயக்குநர்கள் தேடி வந்தனர்.

என் படம் முடியும் வரை எந்தப்படத்திலும் நடிக்கக் கூடாது என்று கட்டளையிட்டார் பாலா.அதனால் தேடி வந்த படங்களை நிராகரித்தார் வரலட்சுமி.

தாரை தப்பட்டை படத்தை தன் வாழ்க்கை என்று நினைத்த வரலட்சுமி, அப்படம் வெளியான பிறகு உச்ச நட்நத்திரமாகிவிடுவோம் என்ற கற்பனையில் மிதந்தார்.

தாரை தப்பட்டை படத்தின் தோல்வி அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. அதனால் கடும் மன உளைச்சலில் இருந்த வரலட்சுமிக்கு ஆறுதலாக ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.பிரசன்னா, அர்ஜூன் நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் வரலட்சுமி.
மேலும் வாசிக்க…

வரலட்சுமிக்கு ரஜினிகாந்த் பாராட்டு..!!

1:19 AM |
தாரை தப்பட்டை படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது. இளையராஜாவின் 1000மாவது படம் என்ற சிறப்புடன் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமையவில்லை. படத்திற்க கடும் விமர்சனங்கள் எழுந்து நிலையில் வசூல் ரீதியாக பொங்கல் படங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

பாலா, இளையராஜா, சசிகுமார் ஆகியோர் விமர்சகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டாலும் படத்தில் கதாநாயகியாக நடித்த வரலட்சுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஒரு கரகாட்டக் கலைஞராக அப்படியே வாழ்ந்து காட்டினார் என்ற பாராட்டு அவருக்கு அதிகமாகக் கிடைத்து வருகிறது. அவருடைய நடிப்பும், கிளாமரும்தான் படத்தைக் காப்பாற்றியது என்று வினியோகஸ்தர்களே தெரிவித்தார்கள்.

திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வரலட்சுமிக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது ரஜினிகாந்தும் வரலட்சுமியைப் பாராட்டியுள்ளார். இது குறித்து வரலட்சுமி, “ஓ மை காட், நான் இப்போது மிக மிக மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறேன். சூப்பர் ரஜினிகாந்த் தற்போதுதான் என்னுடன் தொலைபேசியில் பேசினார். உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி சார். மிகவும் அற்புதமாக உணர்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

நான் தலைகீழாகத்தான் குதிக்கப்போகிறேன்..!!

12:23 AM |
‘தாரை தப்பட்டை’ படம் பார்த்த அனைவரும் ஒரு பக்கம் பாலாவை கிழித்து கூறுபோட்டுக்கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் வரலெட்சுமியை (அதாங்க..நம்ம வரூ) புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதாவது ‘ஆபரேஷன் ஃபெயிலியர், பேஷண்ட் பிழைச்சாச்சு..!’ கதைதான். ஆனால் இந்த ஆபரேஷன் செய்துகொள்வதற்காக வரலெட்சுமி என்னென்ன செய்திருக்கிறார் தெரியுமா..?

2011-இல் பாலாவின் ‘அவன் இவன்’ வெளியாகி, படு கேவலமான விமர்சனத்தை சந்திருந்த நேரம் அது. பாலா, அடுத்ததாக தான் என்ன செய்யலாமென மோட்டுவளையை பார்த்துக்கொண்டிருந்தபோது, ‘எரியும் பனிக்காடு’ நாவலை படமாக்கும் எண்ணம் வந்தது. உடனே அதற்கான வேலைகளில் முழுமூச்சாக இறங்கினார். ஹீரோவாக தனது நலம் விரும்பியான முரளியின் மகனை ஒப்பந்தம் செய்தார். ஹீரோயினாக நடிக்க அப்போது ‘மதராசப்பட்டிணம்’ மினுமினுப்பில் இருந்த எமி ஜாக்சனை அணுகினார் பாலா. என்ன நினைத்தாரோ எமி, ‘முடியவே முடியாது’ என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இந்த நேரத்தில்தான் வரலெட்சுமி எண்ட்ரி. வரலெட்சுமி என்றால் அப்போது இண்டஸ்ட்ரிலேயேகூட யாருக்கும் அவ்வளவாக தெரியாது. 2008-இல் சிம்புவுடன் அவர் ‘போடா போடி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அந்தப்படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே நின்று திரும்ப தொடருமா தொடராதா என்ற குழப்பத்தில் இருந்த நேரம் அது. அந்த நேரத்தில் பாலா படத்தில் நடிக்க எமி மறுத்ததை வரலெட்சுமி அறிந்தார். கமிட் ஆன முதல் படத்தின் கதி என்ன ஆகுமோ என தெரியாத நிலையில் பாலா மாதிரியான ஒரு பிரபல இயக்குநரின் படத்தில் நடித்தால் தனக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என எண்ணிய வரலெட்சுமி, வலியப்போய் பாலாவை சந்தித்தார்.

பாலாவும் அதர்வாவுக்கு ஜோடியாக வரலெட்சுமி நடிக்கும் வாய்ப்பைத் தந்தார். அடுத்தடுத்து அனைத்து வேலைகளும் துரிதமாக நடந்து படப்பிடிப்புக்கு செல்வதற்கும் பாலா தயாரானார். அதன்பிறகுதான் வரலெட்சுமிக்கு ஆரம்பித்தது வினை அவரது அப்பா சரத்குமாரின் மனைவி ராதிகா ரூபத்தில். ஷூட்டிங் செல்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு வரலெட்சுமிக்கு சில பல ஹோம் வொர்க்குகளையும் ரெஃபரன்ஸ்களையும் தருவதற்கு பாலா விரும்பினார்.

இந்த விஷயத்தை தன்னுடைய மேனேஜரிடம் சொல்லி வரலெட்சுமியை தனது அலுவலகத்துக்கு வரவைக்க சொன்னார். இந்த விஷயமறிந்த ராதிகா, ‘டைரக்டரை நம்ம வீட்டுக்கே வர சொல்லிடுங்க.. எதுவாயிருந்தாலும் வீட்டுலேயே நடக்கட்டும்’ என்றிருக்கிறார். விஷயத்தைக் கேள்விபட்டு டென்ஷனான பாலா, ராதிகாவுக்கு போன் போட, ராதிகா கூலாக போனிலும் அதே பதிலை சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் பாலாவுக்கு வந்ததே கோபம். படாரென போனை கட் செய்தவர், மேனேஜரிடம் ‘அவ இனிமேல் இந்தப் படத்துல கிடையாது.. வேற ஆளைப் பாருங்க’ என கடுகடுத்தார். அதன்பிறகுதான் அவசரம் அவசரமாக வேதிகாவை ஒப்பந்தம் செய்தனர்.

‘பாலா படத்துல நடிக்கப்போறோம்.. ஓவர் நைட்ல ஃபேமஸாகப்போறோம்’ என கனவு கண்டுகொண்டிருந்த வருவுக்கு ‘பாலா படத்தில் வேதிகா’ என்ற செய்தி கடும் அதிர்ச்சியைத் தந்தது. உடனடியாக பாலா அலுவலகத்தை தொடர்புகொண்டார் ஆனால் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. ஆனால் இதற்கெல்லாம் காரணம் தன் அப்பா சரத்குமாரின் மனைவி ராதிகாதான் என்ற உண்மை மட்டும் தெரிந்தது.

அவ்வளவுதான் விறுவிறுவென தனது அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டவர்தான், வெளியே வரவில்லை. சாப்பிட வரச்சொல்லி வேலைக்காரர்கள் எவ்வளவோ கெஞ்சியும் கதவை திறக்கவில்லை. ‘வரமுடியாது’ என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். விஷயமறிந்து பதட்டமான சரத்குமாரும் ராதிகாவும் அவசரம் அவசரமாக வீட்டுக்கு வந்து வருவின் அறை கதவை தட்டியிருக்கின்றனர். எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. இப்படியே ஒருவேளை இல்லை இரு வேளை இல்லை இரண்டு நாட்கள் பச்சைத் தண்ணீர்கூட குடிக்காமல் அந்த அறைக்குள்ளேயே கிடந்தார் வரலெட்சுமி. ‘சின்ன தம்பி’ குஷ்பு மாதிரி கண்ணாடி சில்லுகளில் நடக்காததுதான் பாக்கி. சரத்குமாரும் ராதிகாவும் எவ்வளவோ கெஞ்சியும் வேலைக்கு ஆகவில்லை.

இறுதியாக ராதிகா, ‘அம்மா செஞ்சது தப்புதான்மா.. என்னை மன்னிச்சுடு.. தயவுசெஞ்சு வந்து சாப்பிடும்மா..’ என அழுதுக்கொண்டே கெஞ்ச, உள்ளிருந்து வரலெட்சுமியின் குரல் வந்தது. ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது.. நான் பாலா சார் படத்துல நடிச்சே ஆகணும்.. அப்போதான் சாப்பிடுவேன்’ என்றார் திட்டவட்டமாக.

உடனே ராதிகா, விழுந்தடித்து பாலா அலுவலகத்துக்குப்போய், காத்திருந்து பாலாவை சந்தித்து நடந்த அனைத்தையும் கூறி மன்னிப்பும் கேட்டார். தன் படத்தில் நடிப்பதற்காக ஒரு பெண் இவ்வளவு தூரம் தன்னை வருத்திக்கொள்வதை அறிந்த பாலா, தன் கோப தாபத்தையெல்லாம் மறந்துவிட்டு உடனே வரலெட்சுமி மொபைலுக்கு போன் போட்டார். ‘அடுத்த படத்துல நீதான் ஹீரோயின்.. ரூமை விட்டு வெளியில வா’ என கேட்டுக்கொண்டதற்கு பிறகே வரலெட்சுமி அறையிலிருந்து வெளியில் வந்தார்.

அதன்பிறகு ‘தாரை தப்பட்டை’ படத்தில் அவர் நடித்ததும் படம் ஊத்திக்கொண்டாலும் வரலெட்சுமிக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்ததும் அனைவரும் அறிந்ததே.

இப்போ புரியுதா ஏன் இப்படி டைட்டில் வெச்சிருக்கோம்னு..?
மேலும் வாசிக்க…

பாலா என் துணியை கூட கிழித்துவிடுவார்- வரலட்சுமி ஓபன் டாக்

1:38 AM |
தாரை தப்பட்டை படத்தை பற்றி யார் என்ன சொன்னாலும், வரலட்சுமி நடிப்பை பற்றி யாராலும் பேச முடியாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இப்படத்தில் தன் அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார் இவர்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றி பேட்டியளித்த இவரிடம், படப்பிடிப்பில் பாலா எப்படி என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘நான் அவரிடம் இந்த கதாபாத்திரத்திற்காக ஏதும் பயிற்சி எடுக்க வேண்டுமா? என்று கேட்டேன், அவர் “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், படப்பிடிப்பிற்கு வா, நான் சொல்வதை செய்” என்பார்.

படப்பிடிப்பில் இருந்த ஒரு வருடமும் ஸ்பாட்டில் நான் கண்ணாடியே பார்க்கல. ரெடியாகி பாலா சார் முன்னால போய் நிற்போம் அவர்தான் முடியைக் கலைச்சுவிடுவார், மேக் அப் சரி பண்ணுவார், தேவைப்பட்டா துணியை கூட கிழித்துவிடுவார்’ என கூறினார்.
மேலும் வாசிக்க…

கத்தரிக்கு பாலா மறுப்பு: 'தாரை தப்பட்டைக்கு 'ஏ' சான்றிதழ்..!!

12:33 AM |
'தாரை தப்பட்டை' படத்தில் சில வசனங்கள் மற்றும் காட்சிகளை நீக்கினால் 'யு/ஏ' சான்றிதழ் என்பதை ஏற்க பாலா மறுத்து விட்டார்.

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் ஐங்கரன் நிறுவனம், இப்படம் பொங்கலுக்கு வெளியீடு என்று அறிவித்திருக்கிறது.

'தாரை தப்பட்டை' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டு காட்டினார்கள்.

படத்தின் சண்டைக் காட்சிகளில் வன்முறை அதிகமாக இருந்ததாலும், சில வசனங்களை நீக்கினால் 'யு/ஏ' சான்றிதழ் என்று சென்சார் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதனை இயக்குநர் பாலா ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

தனது கதையமைப்பில் உறுதியாக இருந்ததால், பாலாவின் முடிவுக்கு தமிழ் திரையுலக இயக்குநர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்திருக்கிறது.
மேலும் வாசிக்க…

விக்ரம் - பாலா மீண்டும் இணைகிறார்களா..??

3:16 AM |
இயக்குநர் பாலாவும் நடிகர் விக்ரமும் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் சேது, பிதாமகன் என இரு படங்களில் நடித்துள்ளார் விக்ரம். இரண்டு படங்களிலும் அவருடைய நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இப்போது இயக்குநர் பாலாவின் அடுத்தப் படத்தில் விக்ரம் மீண்டும் நடிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் இருவரும் சந்தித்து இதுபற்றி பேசியிருக்கிறார்கள். ஆரம்பக்கட்டத்தில் தான் எல்லாமே உள்ளன. இனி வரும் நாள்களில் தான் இருவரும் இணைந்து படம் பண்ணப் போவது குறித்து தெரிய வரும் என பாலா-விக்ரமின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

இதனால், இரண்டு சிறப்பான படங்களைக் கொடுத்த பாலா - விக்ரம் கூட்டணி, ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப் போகிறார்களா என கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com