லட்சுமிமேனனை செலக்ட் பண்ணிய விஜய்சேதுபதி..!!

2:00 AM |
தனது படங்களில் நன்றாக பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய நடிகைகள் இடம்பெற வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருபவர் விஜய்சேதுபதி. அந்த வகையில், காயத்ரி, ரம்யா நம்பீசன், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா, மடோனா என குறிப்பிடத்தக்க நடிகைகளுடன் நடித்து வந்த அவர், தற்போது தர்மதுரையில் தமன்னாவுடன் நடித்திருப்பவர், காக்கா முட்டை மணிகண்டன் இயக்கும் ஆண்டவன் கட்டளையில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே ரெக்க படப்பிடிப்பும் தொடங்க உள்ளது.மேலும், இதற்கு முன்பு ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தை தயாரித்து நடித்த விஜய் சேதுபதி இந்த ரெக்க படத்தையும் தானே தயாரிக்கிறார். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் வேலைகள் கடந்த சில மாதங்களாக அவருடைய அலுவலகத்தில் நடந்து வந்தது.

மேலும், விஜயசேதுபதி சொந்த படம் தயாரிக்கிறார் என்றதும் அவரது அபிமானத்திற்குரிய சில ஹீரோயின்கள் அவரிடத்தில் சான்சு கேட்டு வந்த நிலையில், அந்த கதைக்கு லட்சுமிமேனன் தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை ஓகே செய்திருக்கிறாராம் விஜய்சேதுபதி. இதற்கு முன்பு சசிகுமார்-லட்சுமிமேனன் நடித்த சுந்தரபாண்டியன் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

லட்சுமிமேனனை வீட்டுக்கு அனுப்பிய காலேஜ்..!!

12:26 AM |
ஐயோ பாவம்... ஒரு நடிகை ஒரே இயக்குனரின் படத்தில் அடுத்தடுத்து நடித்தால் என்ன வருமோ? அதுதான் கிடைத்திருக்கிறது லட்சுமிமேனனுக்கு! குட்டிப்புலி முத்தையாவின் படத்தில் மூன்றாவது முறையாக நடிக்கப் போகிறார்.

நடுவில் ஒரு படத்தில் இவரை கமிட் பண்ணினார் முத்தையா. படத்தின் ஹீரோ விஷால் காட்டிய எதிர்ப்பு காரணமாக விலகிக் கொண்டார் லட்சுமி. “என்னம்மா... நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு இன்டஸ்ட்ரியே சொல்லுது” என்று லட்சுமியை மடக்கினால் முகத்தில் ஒரு ஷாக்கும் இல்லை அங்கு! “ஆமாம்... நானும் கூட அப்படி பேசிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டேன்.

நான் அவரை லவ் பண்ணல. பட்... அவரை என்னை லவ் பண்றாரான்னு எனக்கு தெரியாது” என்றார். அதைவிட பெரிய விஷயம் இன்னொன்று. கல்லூரியில் சேர்ந்தாரல்லவா? தொடர் விடுமுறை காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டாராம்.

இப்போ ஓப்பன் யுனிவர்சிடியில் படிக்கிறேன் என்றார். கலைச்சேவை செய்ய எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு?
மேலும் வாசிக்க…

அஜீத் சார் சொல்லியிருந்தா நல்லாதான் இருந்திருக்கும்! ஷாக் கொடுக்கிறார் லட்சுமிமேனன்..!!

10:43 PM |
அஜீத் பற்றி பேசினால் ஆளுக்கொரு சம்பவம் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் அது அவரது எளிமை பற்றியும், ‘‘எடுத்துக்கோ” என்று கொடுத்தது பற்றியுமாகதான் இருக்கும்! நாலு பேருக்கு செய்யறது நமக்கு மட்டும் தெரிஞ்சா போதும் என்று இருப்பவர் அவர். அப்படியிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வருகிற தகவல்கள் பல, அவரது கிரீடத்தில் மேலும் மேலும் சிறகுகளை சொருகிக் கொண்டேயிருக்கும். ஆனால் முதன் முறையாக ஒரு விஷயத்தை லட்சுமிமேனன் மறுத்திருக்கிறார். ஆனாலும் தலைபோகிற சறுக்கல் இல்லை அது.

வேதாளம் படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்த லட்சுமிமேனன், அப்படி நடிக்கும் போது அதன் முக்கியத்துவத்தை அறிந்திருப்பாரா தெரியாது. ஆனால் படம் வந்த பின், “வாம்மா தங்கச்சி” என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள். பாசமலருக்கு அப்பால, முள்ளும் மலரும் வந்தது. முள்ளும் மலருமுக்கு அப்பால வேதாளம்தான் என்கிற அளவுக்கு தங்கச்சி சென்ட்டிமென்ட் தாறுமாறாக கொப்பளித்த படம் அது. படத்தின் முதல் பிரதியை பார்த்த அஜீத், லட்சுமிமேனனுக்கு பேசியதை விட ஐந்து லட்சம் எக்ஸ்ட்ரா கொடுக்கச் சொன்னதாக ஒரு தகவல் வந்தது அப்போது.

அது பற்றிதான் சமீபத்தில் சென்னை வந்த லட்சுமிமேனனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “ஆமாம்… நானும் அந்த செய்தியை படிச்சேன். அஜீத் சார் சொல்லியிருந்தா நல்லாயிருந்துருக்கும். ஆனா அவர் சொன்னாரான்னு தெரியல. எனக்கு யாரும் பணம் கொடுக்கலையே?” என்றார் லட்சுமிமேனன்.
மேலும் வாசிக்க…

பள்ளியில் படித்தபோது ஜெயம் ரவி மீது எனக்கு ஒரு ஈர்ப்பு! லட்சுமிமேனன்..!!

7:37 AM |
‘வேதாளம்’ படத்தில் அஜீத் தங்கையாக நடித்த பிறகு லட்சுமி மேனன் நடித்து திரைக்கு வரவுள்ள படம் ‘மிருதன்’. ஜெயம் ரவி ஹீரோ. தமிழில் முதல் ரத்த காட்டேறி கதை படமாக உருவாகி இருக்கும் இதை சக்தி சவுதர்ராஜன் இயக்கி உள்ளார்.

இதுபற்றி லட்சுமிமேனன் கூறியது:டிராபிக் கான்ஸ்டபிள் வேடத்தில் ஜெயம் ரவி நடிக்க, அவருக்கு ஜோடியாக நான் நடிக்கிறேன். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் பார்த்தேன். அப்போது முதல் ஜெயம் ரவி மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தபோது பரவசம் அடைந்தேன்.

இதில் டாக்டர் வேடம் ஏற்றிருந்தாலும் சில ஆக்‌ஷன் சீன்களில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கு ரவி நன்கு ஒத்துழைப்பு தந்தார். வேதாளம் படத்தில் அஜீத் தங்கையாக நடித்ததுபோல் தொடர்ந்து தங்கை வேடத்தில் நடிக்கமாட்டேன்.

அதில் எனக்கு ஆர்வம் இல்லை.இவ்வாறு லட்சுமி மேனன் கூறினார். ‘மிருதன்’ படத்துக்கு தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் தரப்பட்டதால் பட குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு அரசின் வரி விலக்கும் கிடைக்காது, குழந்தைகளும் படம் பார்க்க முடியாது. எனவே ‘யு’ சான்று கேட்டு ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை கொண்டு செல்ல பட குழு முடிவு செய்துள்ளது.
மேலும் வாசிக்க…

வேதாளம் படத்தில் அஜித்துக்காக நடிக்கவில்லை லட்சுமிமேனன்..!!

11:46 PM |
அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தவர் லட்சுமிமேனன். முன்னணி ஹிரோயின்கள் வரிசையில் இருந்த லட்சுமிமேனன், திடீரென்று தங்கை கதாபாத்திரத்தில் நடித்தது தமிழ் திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அஜித் என்ற பெரிய நடிகரின் படம் என்பதால் லட்சுமிமேனன் இந்த படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது அஜித்துக்காக இந்த படத்தில் தங்கை வேடத்தில் நடிக்கவில்லை என்று லட்சுமிமேனன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, வேதாளம் படத்தில் தங்கை வேடத்தில் நடித்ததற்கான காரணம் அஜித் என்பதற்காக அல்ல. இப்படத்தின் கதைதான் காரணம். ஒரு தங்கை கதாபாத்திரம்கூட பெரிய அளவில் பேசப்படும்படியாக இந்த கதை இருந்தது.

இந்த படத்தின் முழுக்கதையையும் இயக்குனர் அஜித் சாரிடம்கூட சொல்லவில்லை. என்னிடம் மட்டும்தான் முழுக் கதையையும் கூறினார். அந்த கதையில் என்னுடைய கதாபாத்திரம் ரொம்பவும் வலுவாக இருந்ததை உணர்ந்து இதில் நடிக்க சம்மதித்தேன்.

இனிவரும் படங்களில் தங்கை வேடத்தில் என்னை நடிக்க அழைத்தால் கண்டிப்பாக மறுத்துவிடுவேன் என்று கூறினார்.
மேலும் வாசிக்க…

டைரக்டர் நடிகை லவ் குறுக்கே கட்டைய போடும் விஷால்..!!

9:15 PM |
“யாரு வேணும்னாலும் யாரை வேணும்னாலும் காதலிச்சுட்டு போகட்டும், அல்லது கவனிச்சுட்டு போகட்டும்… அடியேனுக்கென்ன?’’ என்று போவது நட்புக்கு அழகா? நல்ல நட்புக்கு அது அழகில்லை அல்லவா? அதற்காகதான் குறுக்கே விழுந்து கட்டையை போட்டிருப்பார் போலும் என்று விஷால் பற்றி குஷாலாகிறது கோடம்பாக்கம். ஆனால், “ஹீரோ இப்படி பிடிவாதம் பிடிச்சா, நாங்கள்லாம் எப்போ நல்ல மாதிரி சிரிக்கறது?” என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம் குட்டிப்புலி முத்தையா. இவரது முதல் படத்தில் லட்சுமிமேனன்தான் ஹீரோயின்.

அதற்கப்புறம் இவர் இயக்கிய ‘கொம்பன்’ படத்திலும் லட்சுமிமேனனையே நடிக்க வைத்தார் முத்தையா. ஒரு குயர் நோட்டுக்கு இப்படி ரெண்டு குயர் சைசுக்கு அட்டை போட்ட பின்பும் அடங்கவில்லை அவரது ஆசை. தொடர்ந்து மூன்றாவது படத்திலும் லட்சுமிமேனனை ஹீரோயினாக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்தாராம். ஆனால் அந்த மூன்றாவது படமான ‘மருது’ படத்தின் ஹீரோ விஷாலாச்சே? லட்சுமிமேனன் வேண்டாம் என்று அவர் பிடிவாதம் பிடிக்க, “எனக்காக ப்ளீஸ்…” என்று முத்தையா கெஞ்ச, சூழ்நிலை சூடாகவே இருந்தது பல நாட்களுக்கு. கடைசியில் விஷாலுக்குதான் வெற்றி. லட்சுமிமேனன் இருக்க வேண்டிய இடத்தில் ஸ்ரீதிவ்யா நடித்துக் கொண்டிருக்கிறார் இப்போது.

படப்பிடிப்பில் சகஜமாக இருந்தாலும், லட்சுமிமேனன் இல்லாத ஷுட்டிங் ஸ்பாட், முத்தையாவை என்னவோ பண்ணியிருக்க வேண்டும். நடுவில் விக்ரம் பிரபுவுக்கு கதை சொல்லி ஓ.கே பண்ணியவர், “இந்த படத்தில் உங்களுக்கு ஜோடியா லட்சுமிமேனன்தான் நடிப்பார். நீங்க முடியாதுன்னு சொல்லவே கூடாது” என்று கூறிவிட்டாராம் கட் அண்டு ரைட்டாக. ஆக நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி. முத்தையாவின் நான்காவது படத்துக்கும் கதாநாயகி லட்சுமிமேனனேதான்!

இப்ப என்னா பண்ணுவீங்க? விஷால்… இப்ப என்னா பண்ணுவீங்க?
மேலும் வாசிக்க…

லட்சுமிமேனனைக் கழற்றிவிட்டாரா விஷால்..??

8:06 PM |
விஷால் இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் கதகளி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் ஒருபடம் நடிக்கவிருக்கிறார்.

மருது என்று பெயர் சொல்லப்பட்டிருக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குவதாக இருந்தது.

நடிகர்சங்கத்தேர்தல் வேலைகள் காரணமாகப் படப்பிடிப்பு தொடங்குவதைக் கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கிறாராம் விஷால். அதனால் அக்டோபரில் தொடங்கவேண்டிய அந்தப்படம் நவம்பர் முதல்வாரத்தில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இதற்டையே படத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்த லட்சுமிமேனன் இப்போது படத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம், படப்பிடிப்பு தள்ளிப்போனதால் லட்சுமிமேனன் தேதிகள் சிக்கலாகிவிட்டதென்று சொல்லப்படுகிறது.

வெளியில் தெரிந்து லட்சுமிமேனன், நிறையப்படங்களில் நடிக்கவில்லை எனும்போது இந்தப்படத்தில் நடிக்காதது ஏன்? என்கிற கேளவிகள் வந்திருக்கின்றன. விஷால்தான் லட்சுமிமேனனை வேண்டாமென்று சொல்லிவிட்டதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com